ஞாயிறு, 18 டிசம்பர், 2016

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்;ன வள்ளுவப் பெருந்தகை கீழ்ஜாதிக்காரராம்.


தமிழன் எப்போதும் தாராள குணம் உள்ளவன். வடக்கே இருந்து யார் வந்தாலும் எது வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வான். சுதந்திரத்துக்காகப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் தலைவர்கள் பெயர் இங்கே தாராளமாக வைக்கப்படும். சிலைகள் ஏராளம் அமைக்கப்படும். காந்திக்கு சிலைää நேருவுக்கு சிலைää எல்லாம் இருக்கும். திலகர் பெயரில் திடல்ää பட்டேல் பெயரில் வீதிää நேதாஜி பெயரில் சாலை என்று தாராளமாய் இருக்கும். நம் தமிழ் நாட்டிலும் சுதந்திரப் Nபுhராட்ட தியாகிகள் உண்டு. வ.உ.சி யை வடக்கே யாருக்கும் தெரியாது. பாரதிக்கு ஒரு தெருவுக்குக் கூடப் பெயர் இருக்காது. பார்ப்பன ராஜாஜி பெயரில்கூட எதுவும் இருக்காது. காமராசரை யாருக்கும் தெரியாது.

அதுபோல இராமாயணää மகாபாரதää புராணங்கள் எல்லாம் இங்கே நமக்கு அத்துபடி. ஆனால் அங்கே நம்முடைய சிலப்பதிகாரம்ää மணிமேகலை என்று எதுவும் அங்கே தெரியாது. உலகப் பொதுமறையாம் திருக்குறளைக்கூட யாருக்கும் கற்றுக்கொள்ள ஆர்வம் கிடையாது. தமிழ் நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க தருண் விஜய் திருவள்ளுவரை வடக்கே கொண்டு போனார். கங்கைக் கரையில் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க முயற்சி எடுத்தும் வடக்கே உள்ள சாமியார்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்;ன வள்ளுவப் பெருந்தகை கீழ்ஜாதிக்காரராம். மேல்ஜாதிக்காரர்கள் சிலை இருக்கும் அரித்துவாரில் கீழ்ஜாதிக்காரனுக்கு சிலை வைக்க அனுமதியோம் என காவிச்சாமியார்கள் அம்மணமாய் கத்துகிறார்கள். தமிழா! 2016லும் இதுதான் உன் நிலை. என்ன செய்யப் போகிறாய்?

உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான். எல்லா உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே! கடந்த சில நாட்களுக்கு முன்னாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண்ணை யாரோ ஒரு கயவன் இரயில் நிலையத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்தான். மனிதநேயம் உள்ள அனைவரும் கண்டித்தோம். ஆனால் தருமபுரி இளவரசன்ää உடுமலை சங்கர்ää திருச்செங்கோடு கோகுல்ராஜ் கொலையின்போதெல்லாம் உடலின் அனைத்து ஓட்டைகளையும் மூடிக்கொண்டிருந்த சிலர் ஸ்வாதி கொலையில் திராவிடப் பொறுக்கிகள்ää காமரேட் கயவர்கள்ää தலித் ரவுடிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை என்று கூவினார்கள். அதே நேரத்தில் ஸ்வாதியைக் கொன்றது பிலால் மாலிக் என்றனர். போலீசுக்கே தெரியாது. இவர்கள் இஸ்லாமியன் மீது பலி சுமத்தி அந்த மதவெறியில் குளிர்காய நினைத்தனர். ஆனால் இப்பொழுது கைது செய்யப்பட்டிருப்பவன் பிலால் மாலிக் அல்ல. ராம்குமார் என்கிறது காவல்துறை. இல்லை இல்லை வேறொருவன் என்கிறது காவிக்கூட்டம். உண்மை விரைவில் வெளிவரும்.

காவிக் கூட்டத்தின் முகத்திரையைக் கிழித்ததற்காக மராட்டியத்திலும் கர்நாடகாவிலும் எழுத்தாளர்களும் முற்போக்காளர்களுமான கல்புர்கிää கோவிந்த் பன்சாரேää நரேந்திர தபோல்கர் ஆகியோரைச் சுட்டுக்கொன்றது காவிகள் கூட்டம். மூன்று பேரையும் சுட்டது ஒரே துப்பாக்கி என்கிறது காவல்துறை. அதுபோல் நாம் பெல்லில் காவிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியதால் அதே கொலைவெறியோடு அலைகிறது அந்தக் கும்பல். எல்லா இடத்திலும் ஒரே ஆள் எழுதியிருக்கிறான் ஆபாசமாக. கொலை செய்ய முடியவில்லை. அதனால் வேறு வழியில் தனது கொலைவெறியைத் தீர்த்துக்கொள்கிறது காவிகள் கூட்டம். பெரியார் அம்பேத்கர் கொள்கை தடம் பதித்துள்ள இம்மண்ணில் அதற்கு இடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் Dr.அம்பேத்கர் சங்கமும் புஜதொமு வும். நன்றிகள் பல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக