வெள்ளி, 2 டிசம்பர், 2016



ஒரு தம்பி எங்கள் அலுவலக முகவரிக்கு வந்தார்.

சார், நான் பெல் நிறுவனத்தில் ஆர்டிசானாகத் தேர்வுபெற்றுள்ளேன். அதற்கு நீங்கள்தான் சார் காரணம். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சார் என்றார்.

அதற்கு நீங்கள் படித்தீர்கள். சரியாகத் தேர்வு எழுதினீர்கள். தேர்வாகியுள்ளீர்கள். உங்களுடைய திறமையே இதற்குக் காரணம் என்றோம்.

இல்லை சார்! நான் சங்கரன்கோயில் பக்கத்தில் ஒரு கிராமத்திலிருந்து வந்தேன் சார். என்னுடைய அம்மாää நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதே இறந்துவிட்டார். என்னுடைய அப்பா என்னைக் கூலி வேலை செய்துதான் காப்பாற்றினார். அய்டிஅய் என்ற ஒன்று இருப்பதே எனக்குத் தெரியாது சார். தெரிந்தவர்களின் அறிவுரைப்படி அய்டிஅய் படித்தேன் சார்.

 அப்ரண்டிஸ் பற்றிக்கூட எனக்கு ஒன்றும் தெரியாது. நண்பர்களின் ஆலோசனைப்படி அப்ரண்டிஸ் முடித்தேன். அதற்குப்பிறகு பல நிறுவனங்களின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டேன். எப்படித் தேர்வு எழுதுவது என்றுகூட எனக்குத் தெரியாததால் எதிலும் நான் தேர்ச்சி பெறவில்லை. பிஹெச்இஎல் லிலும் தேர்வுகள் எழுதினேன். என்னால் தேர்ச்சிபெற முடியவில்லை.

இப்பொழுது நான் விண்ணப்பித்த பிறகு என்னுடைய நண்பர்கள் கோச்சிங் கிளாஸ் சென்றார்கள். அவர்கள் சென்ற இடத்தில் நான் சென்று கேட்டபொழுது பணம் கட்ட வேண்டும். எங்கள் சங்க உறுப்பினர் சிபாரிசு செய்ய வேண்டும். அதற்கு முன்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றார்கள். என்னுடைய நண்பர் வீட்டில் இலவசமாகத் தங்கி சாப்பிட்டுப் படித்து வந்த என்னிடம் அந்த அளவு பணமில்லை. எனக்கு சிபாரிசு செய்யவும் ஆளில்லை. அதனால் இயன்றவரை படிக்கலாம் என்று தனியாகப் படித்து வந்தேன்.

அப்பொழுதுதான் உங்களுடைய இலவசப் பயிற்சி வகுப்பைப் பற்றி ஒருவர் தகவல் தெரிவித்தார். அங்கு நான் வந்தபொழுது எந்த நிபந்தனையுமின்றி சேர்த்துக்கொண்டீர்கள். நீங்கள் கொடுத்த பயிற்சியும் வைத்த தேர்வுகளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எப்படி வினாக்கள் வரும்? எவ்வாறு தேர்வு எழுதவேண்டும்? என்று தெரியாமலேயே இவ்வளவு நாள் இருந்துவிட்டேன்.

நான் தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகைளைச் சொல்லித் தந்தீர்கள். நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பதையும் சொல்லிக் கொடுத்தீர்கள். அதன் காரணமாகத்தான் நான் தேர்வானேன். நான் பெல் ஊழியர் ஆவேனா? என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில் நான் பெல்லில் தேர்வாவதற்குக் காரணமான உங்களுக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள். கூலிவேலை செய்துவரும் என்னுடைய தந்தையை இனிமேல் நான் நல்லபடியாகக் காப்பாற்றுவேன் என்று கண்ணில் நீர்மல்கத் தெரிவித்தார்.

எங்களுடைய இலவசப் பயிற்சி வகுப்பினுடைய நோக்கம் இதுதான். அது மிகச் சிறப்பாக நிறைவேறியுள்ளது. எங்கள் பயிற்சி வகுப்பில் இதுபோன்ற மிகமிகப் பிற்படுத்தப்பட்ட –தாழ்த்தப்பட்ட ஏழை எளிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுடைய முதல் தலைiமுறையைச் சேர்ந்த பிள்ளைகள்தான் ஏராளம். இதுபோல் எங்களிடம் பயின்ற 26 பேர் பெல் ஊழியர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். குறிப்பாக எலக்ட்ரீசியன் 19 பேரில் 6 பேர் எங்களிடம் பயின்றவர்கள்.

மூன்றில் ஒரு பகுதி. எலக்ரீசியனுக்குப் பயிற்சியளித்த இராணிpப்பேட்டை சுந்தர், அவருடன் பணிபுரியும் ரகுராம், பொருத்துனருக்குப் பயிற்சியளித்த கட்டிட எண் 50 செந்தில்வேல், வெல்டர்களுக்குப் பயிற்சியளித்த கட்டிட எண் 1 நாகராசன், டர்னர் மெஷினிஸ்ட்களுக்கு வகுப்பெடுத்த முத்துக்குமார், தங்கராஜ், கணித வகுப்பெடுத்த கட்டிட எண் 1 அசோக்குமார் புருஷோத்தமன் ஆகிய அனைவரும் இதை ஒரு அறச்செயலாகவே நினைத்து எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்  மிகுந்த முயற்சியெடுத்து தொண்டாற்றினார்கள். உயர்திரு காயரோகணம் அவர்களுடைய உதவி இதில் மகத்தானது. அத்தகைய தொண்டறச் செம்மல்களுக்கு கோடானுகோடி நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் பணிசெய்ய உற்றுழி உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனிதவள நிர்வாகம்ää பள்ளி நிர்வாகம் மனமகிழ் மன்ற நிர்வாகம் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பணி தொடர தொழிலாளர்களும் அதிகாரிகளும் மேலான ஆதரவை நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக