புதன், 7 டிசம்பர், 2016

டவுன்ஷிப் செக்யூரிட்டி ஹாலில் மிகப்பெரிய கருத்தரங்கம்

அகில இந்திய அளவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபொழுது பி.பி. மண்டல் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி வேலைவாய்ப்புக்களில் 27  சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் காலம் கடத்தி வந்தது. திராவிடர் கழகம் திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டைக் கூட்ட அகில இந்திய அளவில் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களை அழைத்து அதற்காகக் குரல் கொடுத்தது. ராம்விலாஸ் பஸ்வான், சந்திரஜித் யாதவ், அருண் காம்பளே போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு குரல் கொடுத்தார்கள். பலவேறு போராட்டங்கள் நடத்தியன் அடிப்படையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அற்க்கையப் பற்றிய சந்தேகங்கள் குழப்பங்கள் பலருக்கும் இருந்தது. அதனைப் போக்கும் வகையில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக டவுன்ஷிப் செக்யூரிட்டி ஹாலில் மிகப்பெரிய கருத்தரங்கம் நடைபெற்றது தமிழர் தலைவர் வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்ட அந்த அறிக்கையைப் பற்றி வகுப்பு எடுத்தார்கள். அது தொடர்பாக பல துண்டறிக்கைகள் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் அரசாங்கம் அதனை அமுல்படுத்தாமலேயே கிடப்பில் போட்டு விட்டது.

மத்தியில் வாராது வந்த மாமாணியாய் வி.பி.சிங் அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்ற பொழுது மண்டல் அறிக்கையை அமுல் படுத்தினார். அதற்கு பார்ப்பனர்களும் உயர்ஜாதியினரும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள் நாடெங்கும் கலவரஙகளைத் தூண்டினார்கள்.

தமிழ்நாட்டில் பிராமண சங்கம் அதனை எதிர்த்து உண்ணாவிரதம் என்று அறிவித்தது. திருச்சியில் ஆல்இந்தியா வானொலி நிலையம் முன்பு நடத்த ப்போவதாக பிராமண் சங்கம் அறிவித்தது.
உடனே திராவிடர் கழகம் எந்த இடத்தில் பிராமணர் சங்கம் உண்ணாவிரதம் நடத்த இருக்கிறதோ அதே இடத்தில் அதே நாளில் அதே நேரத்தில் உண்ணும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.

அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நானே பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் ஜாதி சங்கங்கள் அனைத்துக்கும் கிட்டத்தட்ட 32 சங்கங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுத்தேன். ஒவ்வொரு சங்கத் தலைவர் செயலாளர் அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்டோம்.

எல்லரும் தாங்களும் தங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வதாக அறிவித்தார்கள்.
ஆனால் போராட்டம் நடந்த அன்று ஜாதி சங்கத்திலிருந்து ஒருவர்கூட அந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது வருத்தத்து;குரியது.

ஜாதி சங்கங்கள் தங்கள் உரிமைகளுக்குப் போராடுவதற்குப் பதிலாக ஜாதி உணர்வை வளர்த்து அதன் மூலம் தாங்கள் உயர்ந்தஜாதி என்ற நிiயை நிலைநாட்டுவதற்காகவே செயல்படுகின்றன என்பதை அவர்கள் இதன் மூலம ;நிரூபித்தர்கள்.
சிஅய்டியு சங்கம் பெல் நிறுவனத்தைப் பாதுகாப்போம் என் ஆனு ஹாலில் கருத்தரங்கம் நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டுமானால் மண்டல் அறிக்கைய அமுல்படுத்த வேண்டும் என்ற துண்டறிக்கையை திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக வழங்கியபோது சிஅய்டியு வினர் அதனைத் தரக்கூடாது என்று தடுத்து விட்டனர் என்பதும் வருத்தத்துக்குரியது. அந்தக் கூட்டத்தில் சிறப்புரை திரு டி.கே.ரங்கராஜன் என்பது குறிப்பிடத் தக்கது.

மண்டல் அறிக்கை அமுலாகி பிரதமர் வி;பி;சிங் ஆட்சி பாரதீய ஜனதாவால் கவிழ்க்கப்பட்ட பிறகே கம்யூனிஸட்;; இயக்கங்கள் மண்டல் குழு அறிக்கையையும் இட ஒதுக்கீட்டையும் ஆதரித்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய செய்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக