வெள்ளி, 2 டிசம்பர், 2016

டெக் - அப் பெற்றது இவர்களது சாதனை என்றால் ஒரு பேட்ஜ் தவிர அடுத்த பேட்ஜ் ஏன் எடுக்கப்படவில்லை?


ஆரம்ப காலத்தில் நமது நிறுவனத்தில் அய்டிஅய் படித்துவிட்டோ அல்லது டிப்ளமா படித்து விட்டோ வருபவர்கள் மேற்படிப்பு படித்து வந்தால் அவர்களுக்கு முறையான தேர்வு வைத்து அனைவருக்கும் பதவி உயர்வு கொடுத்து வந்தது நிர்வாகம். 1989க்குப்பிறகு அது நிறுத்தப்பட்டு உயர் படிப்பு படித்த எவருக்கும் பதவி உயர்வு மறுக்கப்பட்டது. கிரேடு 1 டு சார்ஜ்மேன் பதவி உயர்வில்கூட அவர்களது உயர் படிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 400 பேருக்குமேல் தொழிலாளர்களில் டிப்ளமா பிஈ எம்ஈ என்று படித்திருந்தார்கள். இவர்களுடைய கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. பிஎம்எஸ் உட்பட எந்த சங்கமும் கண்டுகொள்ளவில்லை. அதனால் DIPLOMA HOLDERS ASSOCIATION என்ற பெயரில் அமைப்பைத் துவக்கி அதன் பெயரில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கேட்ட வினாவின் அடிப்படையில் நிர்வாகம் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க ஒத்துக்கொண்டு 40 பேரை மட்டும் ஒரே ஒரு பேட்ஜ் டெக் அப் எடுத்தது. தொழிற்சங்கங்கள் தலையீடோ, அந்தந்தத் துறை நிர்வாக அதிகாரிகளின் தலையீடோ எதுவுமின்றி மனிதவள மேலாண்மை நிர்வாகம் முறையாக நேர்மையாக சரியாகத் தேர்வு நடத்தி அந்த 40 பேரைத் தேர்ந்தெடுத்தது. அந்த நாற்பது பேருக்கும் மூன்று மாதம் பயிற்சிப்பள்ளியில் வகுப்பு முடிந்தவுடன் அவரவர் துறைக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். ஆனால் உற்பத்தித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க மறுத்து விட்டனர். இதனையும் பிஎம்எஸ் உட்பட எந்த சங்கமும் தட்டிக் கேட்கவில்லை.

அதற்குப்பிறகு அவர்கள் மீண்டும் பயிற்சிப்பள்ளியின் கட்டுப்பாட்டிற்கு அனுப்பப்பட்டு தரக்கட்டுப்பாடு போன்ற வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சி முடிந்த உடன் அவர்களுக்கு சார்ஜ்மேன் பதவி உயர்வு வழங்காமல் மறுபடியும் அவர்களது பழைய துறைக்கே அனுப்பப்பட்டார்கள். அந்தத் துறையில் அவர்களை மீண்டும் பழைய வேலையைச் செய்யச் சொன்னார்கள். எல்லோரும் பழைய வேலையையே செய்தார்கள். இப்படி எட்டு மாதங்கள் பழைய வேலையை செய்த பிறகு நிர்வாகம் எந்தத் தேதியில் பயிற்சி முடித்தார்களோ அந்தத் தேதியிலிருந்து ஆணை வழங்காமல் டிசம்பர் மாதம் தேதியிட்டு ஆணை வழங்கியது. அதனால் அவர்களது அடுத்த பதவி உயர்வு ஜூனுக்குத் (ஓராண்டு) தள்ளிப் போனது.

இவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்க பிஎம்எஸ் இந்த டெக் அப் பெற்ற விவகாரம் தன்னுடைய சாதனை என்கிறது. இது பிஎம்எஸ் ஸினுடைய சாதனை என்றால் அவர்களுக்குப் பயிற்சியளிக்க மறுக்கப்பட்டதுää பயிற்சி முடிந்தபின் எட்டு மாதங்கள் பழைய வேலையையே செய்ததுää ஓராண்டுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு ஓராண்டு கழித்துக்கிடைத்தது போன்ற வேதனைகளுக்கெல்லாம் பிஎம்எஸ் பொறுப்பேற்குமா?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் டிப்ளமா அசோஷியேசனால்  TECH APP கிடைத்ததைப் பயன்படுத்தி பிஎம்எஸ் ஸின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் (அவர் ஒரு மாற்றுத்திறனாளி) எம்ஈ படித்திருந்ததால் ரங்கராஜன் குமாரமங்கலம் மூலமாக அகில இந்திய அளவில் தனியாக அவருக்காகவே பிஈ படித்த மாற்றுத்திறனாளிக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று ஒரு விளம்பரம் செய்து அவருக்காகவே அகில இந்திய அளவில் ஒரு தேர்வுக்குழு அமைத்து தேர்வு நடத்துவதாக பாவ்லா செய்து அவருக்கு பொறியாளர் பதவி உயர்வு பெற்றுக்கொடுத்து அறுவடை செய்து கொண்டது. இது ஒன்று வேண்டுமானால் பிஎம்எஸ் ஸின் சாதனையாக இருக்கலாமே தவிர எங்களுடைய சங்கச் செயலாளர் உட்பட பிஎம்எஸ்ஸால் யாருக்கும் ஒரு காதொடிந்த ஊசி அளவு கூடப் பயன் இல்லை என்பதுதான் உண்மை.

டெக் - அப் பெற்றது இவர்களது சாதனை என்றால் ஒரு பேட்ஜ் தவிர அடுத்த பேட்ஜ் ஏன் எடுக்கப்படவில்லை? காரணம் நிர்வாகம் அந்த வழக்கை நீதிமன்றத்தில் தனக்கிருந்த செல்வாக்கின்மூலம் தள்ளுபடி செய்ய வைத்து விட்டது. இதற்கும் பிஎம்எஸ் பொறுப்பேற்குமா? புதிய ஊழியர்கள் உண்மை உணர வேண்டும்@ பிஎம்எஸ் ஸின் புருடாக்களைக்கண்டு ஏமாறக் கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம். பிஎம்எஸ் தன்னுடைய புருடாவை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக