திங்கள், 19 டிசம்பர், 2016

கடலுக்குள்ளே முழங்கால் ஜலத்தில நின்னுண்டு அமிர்தவர்ஷினி ராகத்த வயலின்ல இசைச்சா வருணபகவான் வானத்திலேர்ந்து சந்தோஷப்பட்டு ஜலத்த.. அதான் மழையக் கொட்டோ கொட்டுன்னு கொட்ட வப்பா



அகில இந்தியாவிலும் நம்பர் ஒன் ஸ்டேட் NAMOJI ஆளுகிற குஜராத் தானாம்.

அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆனந்தி பட்டேல் குஜராத் சட்டசபையில் தெரிவித்ததாவது: ~பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிய பத்து மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஆயிரம் கிராமங்களில் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இங்கு குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மேலும் மூவாயிரம் கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது|
பத்து மாவட்டத்தில் மட்டும் மேற்கொண்ட ஆய்வில் இந்த லட்சணம். மீதி மாவட்டத்தில் என்ன லட்சணமோ?
அதோடு கடந்த மாதம் பத்திரிகைகளில் ஒரு படம் வந்தது. அதில் குஜராத் கார்ப்பரேட் விவசாயத்தால் கால்நடைகள் அழிந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பெற்ற தாயை ஏர் மாடாகக் கொண்டு தந்தையும் மகனும் ஏர் உழும் ஏழை விவசாயக் குடும்பத்தின் அவலநிலையும் படமாய் வந்தது.

இதுதான் நம்பர் ஒன் நமோஜியின் ஆட்சி இலட்சணம். இவர்தான் இந்தியாவின் எதிர்காலப் பிரதமராம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கங்கா ஜலத்தை கமண்டலத்தில் அடைத்துக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். யார் கண்டது? உலகத்திலேயே அசுத்தமும் அசிங்கமும் அதிகம் உள்ள நதியாக கங்கை மாறிப் போனாலும் அவாளுக்கு இன்னும் அது புனிதநதிதான்.

தாயப் பழிச்சாலும் தண்ணியப் பழிக்கக்கூடாதுன்னு வேற சொல்லி வச்சிருக்கா! கங்கா ஜலத்தத்தான் பழிக்கக் கூடாது போல. காவிரி ஜலத்தப் பழிச்சாத் தேவலாம்னு சொன்னாலும் சொல்லுவா! அதுனாலதான் நம்ம மோடி மஸ்தான் சீடர்கள் காவிரி ஜலத்தப் பழிக்குறாங்களோ என்னவோ!

மழை பெய்யவில்லை யென்றால்தான் அவாளிடம் நெறைய்ய அய்டிய்யா இருக்கும்மே!

ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு பகவான் டிபார்ட்மென்ட் வாரியா இருக்காங்களே! மழைக்கு இன்ச்சார்ஜ் வருணபகவான்னு ஒர்த்தர் இருக்கறதா ரீல் உட்டு வச்சிருக்காங்களே! அவர்ட்ட போய் பிஜேபி பிஎம்எஸ் காராள்லாம் மெமரெண்டம் கொடுக்கலாம்.

 இல்லேன்னா யாகம் நடத்தலாம். குன்னக்குடி வைத்தியநாதய்யர் ஒரு தடவ எம்ஜியார்கிட்ட ஒரு அய்டியா சொன்னார்.

அது என்னான்னா, கடலுக்குள்ளே முழங்கால் ஜலத்தில நின்னுண்டு அமிர்தவர்ஷினி ராகத்த வயலின்ல இசைச்சா வருணபகவான் வானத்திலேர்ந்து சந்தோஷப்பட்டு ஜலத்த.. அதான் மழையக் கொட்டோ கொட்டுன்னு கொட்ட வப்பார்னுட்டு ஒரு அய்டியா குடுத்தார்.

அத நம்ம புரட்சித்தலைவரும் ஏத்துண்டு அதிகாரிகளயும் அமைச்சர்களயும் நம்ம மெரினா பீச்ல உள்ள கடல்ல நின்னுண்டு குன்னக்குடி வயலின் வாசிக்கறச்ச மழை வந்து கொட்டுறத வேடிக்க பார்க்க அனுப்பி வச்சார்.

நம்ம குன்னக்குடியும் பக்தி சிரத்தயோட வருண பகவான்மேல முழு நம்பிக்கயோட அமிர்தவர்ஷினிய வாசி வாசின்னு வாசிச்சிண்டே இருந்தார். மழ கொட்டப்போகுதுன்னு வச்ச கண்ணு வாங்காமப் பாத்துப்பாத்து அதிகாரிங்க அமைச்சருங்க எல்லாத்துக்கும் கண்ணு பூத்துப்போச்சு.

ஆனா வருண பகவான் அன்னைக்கு லீவு போட்டுட்டார் போல இருக்குது. வரவே இல்ல.

வாசிச்ச குன்னக்குடியாருக்கும் ஏமாத்தம். வந்திருந்த பெரிய்ய மனுஷாளுக்கும் ஏமாத்தம்.

இதுல என்ன வேடிக்கைன்னா மழை வரும்னு சொல்லி வயலின் வாசிச்ச குன்னக்குடியாரும் குடை எடுத்துண்டு போகல. மழை வர்றத வேடிக்கை பாக்க வந்த பெரிய மனுஷாளும் குடை எடுத்துட்டுப் போகல.

அவ்வளவு நம்பிக்க.

நமக்கு ஒரு டவுட்டுங்கண்ணா! தண்ணி வரல்லேன்னா அதுக்குக் காரணம் வருணபகவானா! ஒர்க்ஸ் கமிட்டி மெம்பர்ஸா? ஒர்க்ஸ் கமிட்டிதான்னு இப்ப அவா சொல்றதால வருணபகவான்கறது பார்ப்பான்கள் அவிழ்த்து வி;ட்ட பொய்யின்னு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக