வெள்ளி, 9 டிசம்பர், 2016

உலக மகளிர்தின வாழ்த்துக்கள்

அன்புச் சகோதரிகளே!

தந்தை பெரியார் இயக்கத்தின் பணிவான வணக்கங்கள்!
மனிதகுலத்தில் எந்தவிதமான ஏற்றத் தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்று பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் பெண்களுக்கான உரிமைகள் குறித்து ஏராளமாகப் பேசி இருக்கிறார்@ எழுதி இருக்கிறார்@ செயல்படுத்தியும் இருக்கிறார்.

~~பெண்களுக்கும் ஆண்களைப் போலவே சமமாகச் சொத்துரிமையும் வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்றும்ää பெண்களும் ஆண்களைப் போலவே எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்தி வருவதற்கு அவர்களுக்கு சம உரிமையும் அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும்ää பள்ளிக்கூட ஆசிரியர் வேலைகளில் பெண்களே அதிகம் நியமிக்கப்பட ஏற்பாடு செய்யவேண்டும் என்றும்ää ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்||  என்றும் 1929 ல் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் இயற்றினார் பெரியார்.

பெண்ணுரிமை, பெண்கல்வி பெண் உத்தியோகம் என்று பெண்களேகூட பேசுவதற்கு முன்வராத காலம் அது. அந்தக் காலத்திலேயே பெண்விடுதலைக்காகக் குரல் கொடுத்த புரட்சியாளர் பெரியார் ஒருவரே!

காவல்துறை, இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும், ஆண்களைப்போலவே பெண்களும் செய்ய வேண்டும் ஆண்கள் என்னென்ன துறைகளில் பணியாற்றுகிறார்களோ அத்தனைத் துறைகளிலும் பெண்மக்களும் பணியாற்ற வேண்டும் என்று எழுதினார்பேசினார்.

அந்தக்காலத்தில் அதனை கேலியும் கிண்டலும் செய்தவர்கள் ஏராளம்.

அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து பெரியார் அவர்கள் பெண் விடுதலைக்குப் பாடுபட்டதாலேயே 1938ல் பெண்கள் நடத்திய மாநாட்டில் ~பெரியார்| என்ற பட்டத்தினை பெண்களே வழங்கினார்கள். ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்பட்டு வந்த அவர் அதுமுதற்கொண்டு பெரியார் என்று அழைக்கப்பட்டு அதுவே அவருக்கு நிலைத்த பெயராக ஆகிவிட்டது.

பெண் உத்தியோகம் என்றால் ஆசிரியர் பணி, டாக்டர், நர்சு, டைப்பிஸ்ட், எழுத்தர் போன்ற பணிகளுக்குத்தான் இலாயக்கு என்று கருதி வந்த காலம் மாறி இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார்கள்.

நமது பெல் நிறுவனத்திலும்  டாக்டர், நர்சு, டைப்பிஸ்ட், எழுத்தர், எஞ்சினியர் போன்ற பணிகளுக்குத்தான் இதுவரை பெண்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். அண்மைக்காலமாக பெண்கள் பொருத்துனராக, பற்ற வைப்பாளராக, இயந்திரப்பணியாளராக, மின்பணியாளராக பணிநியமனம் பெற்று வருவது பாராட்டுக்குரியது.

ஆரம்பத்தில் இந்தப் பெண்களால் இந்த வேலையைச் செய்ய முடியுமா? இயந்திரங்களை இயக்க முடியுமா? கருவிகளைக் கையாள முடியுமா என்று அய்யப்பட்டவர்கள் ஏராளம்.

ஆனால், இன்று நீங்கள் அதையெல்லாம் முறியடித்துää எங்களாலும் செய்ய முடியும் என்று நிரூபித்து சாதனை புரிந்து வருகிறீர்கள். ஆண்களைவிட அதிகமாகவே சாதித்து வருகிறீர்கள்.
இத்தகைய சாதனைப் பெண்களாகிய உங்களைப் பெரியார் இயக்கம் மனதாரப் பாராட்டுகிறது. உங்களுடைய சாதனை மென்மேலும் வளர வாழ்த்துகிறது.

உங்கள் அனைவருக்கும் உலக மகளிர்தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக