புதன், 7 டிசம்பர், 2016

பெல் நிறுவனம் கம்பன் விழாவைக் கொண்டாடலாமா?

கம்பராமாயணமும் பெல் நிர்வாகமும்

பெல் நிர்வாகம் என்றாலே அது பார்ப்பனக் கூடாரம் என்பதில் யாருக்கும் அய்யமிருக்காது. உயர் அதிகார பீடத்தில் பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டு அவர்களது அதிக்கத்தைத் தக்க வைக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள். பார்ப்பான் பண்ணயம் கேட்பாரில்லை என்பதனை இங்கு கண்கூடாகக் காணலாம்

2005ம் ஆண்டு ஒரு நிர்வாக இயக்குநர் இருந்தார். கோபால கிருஷ்ணன் என்று பெயர். அவரை எல்லோரும் மனிதநேயமிக்கவர் என்று வானளாவப் புகழுவார்கள்.

ஓரளவுக்கு நல்ல மனுஷன்தான்.

ஆனால் பார்ப்பனர்களைப் பொறுத்த வரையில் எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும் தான் ஒரு பிராமணர். மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர் என்பதிலும் அந்த உயர்வினைப் பாதுகாக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதும் அவரைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை

இராமாயணம் என்பது நம் தமிழ் இனத்தை பார்ப்பானுக்கு காட்டிக் கொடுக்கும் ஒரு காவியமாகும். அது இலக்கிய நயமிக்கது. பக்திச்சுவை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. திராவிட இயக்கத்தினருக்கு அந்த சுவை எதுவும் தெரியாது என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் இராமாயணத்தையும் கம்பனையும் அக்குவேறு ஆணிவராக அலசி ஆராய்ந்து அது எந்த அளவிற்கு தமிழினத்திற்கு எதிரான காவியம் என்பதை அம்பலப்படு;தி இருப்பார்கள்.

அப்படிப்பட்ட கம்பராமாயணத்தை உயர்த்திப் பிடிக்கும் வேலையை திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் செய்தார்கள்.

அவர் நிர்வாக இயக்குநராக அமர்ந்த சமயத்தில் திருவரங்கம் கம்பன் கழகத்துடன் இணைந்து பாரதமிகுமின் நிறுவனத்தின் சார்பில் கம்பராமாயண அரங்கேற்றத்தைப் போற்றும் முகமாக நிகழ்த்தும் கம்பன்விழா தாயார் சந்நிதி எதிரில் கம்பர் மண்டபத்தில் ஜூலை 30ää31 ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

பொதுத்துறை நிறுவனத்தின் செயல் இயக்குநர் என்கிற நிலையில் உள்ளவர் தன்னைப் பச்சையாக அடையாளம் காட்டிக் கொள்வதோடு பொதுத்துறை நிறுவனத்தையும் ஈடுபடுத்துகிறார் என்றால் இது எவ்வளவு பெரிய இமாலயக் குற்றம் என்பதை சுட்டிக்காட்டி கடுமையாக நமது சங்கத்தின் சார்பில் துண்டறிக்கை வெளியிடப்பட்டது.
தலைமைக் கழகப் பேச்சாளர் மானமிகு அதிரடி அன்பழகன் அவர்களை வைத்து வடக்கு வாயிலில் கண்டன வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.

அத்தோடு விடுலையில் கவிஞர் அய்யா அவர்கள் மினசாரம் என்ற பெயரில் பெல் நிறுவனம் கம்பன் விழாவைக் கொண்டாடலாமா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.  (13.08-2005 விடுதலை ஞாயிறு மலர்)

அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இங்கிருக்கக் கூடிய எந்த ஒரு சங்கமும் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. எந்த அதிகாரியும் அதனைக் கேள்வி;க்குள்ளாக்வில்லை.

நமது சங்கம் மட்டுமே இதனைக் கண்டித்தது. மற்ற சங்கங்கள் செய்ய அஞ்சுகின்ற காரியத்தைää செய்வதற்கு தவறுகின்ற காரியத்தை திராவிடர் தொழிலாளர் கழகம் செய்யும் தமிழர் தலைவர் அவர்கள் சொன்னதற்கிணங்க செய்து முடித்தோம்.

இது மதச்சார்பற்ற சக்திகளால் வரவேற்கப்பட்டது. அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களும் நமது செயலைப் பாராட்டினார்கள்.

நிர்வாகம் அதோடு இச்செயலை நிறுத்திக் கொண்டது. இருந்தாலும் நிர்வாக இயக்குநர் தான் செய்ததை தவறு என்று உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இங்கிருக்கிற எல்லா சங்கங்களும் என்னைப் பாராட்டுகின்றன. ஆனால் இந்தத் திக காரர்கள் மட்டும் என்னை இப்படிக் குறை கூறுகிறார்களே என்று ஆதங்கப்பட்டாராம்.

அவர் ஆதங்கப்படுவது இயல்புதானே

வாயில் நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது தேன் கசக்காது புலி புல்லைத் தின்னாது என்பது உண்மைதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக