செவ்வாய், 13 டிசம்பர், 2016

திராவிடர் தொழிலாளர் கழகம் என்ன செய்தது?

திராவிடர் தொழிலாளர் கழகம் என்ன செய்தது?-1.

நம் தமிழர்கள் எப்பொழுதும் நன்றி உணர்ச்சி உள்ளவர்கள். நம் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் அனைத்துத் தொழிலாளர்களும் இந்த நிறுவனம் இங்கு அமையக் காரணமாக இருந்த பெருந் தலைவர் காமராசரை நினைவுகூராமல் ஓய்வு பெறுவதில்லை. ஓய்வு பெறும் அன்று பயிற்சிப்பள்ளி அருகில் திருச்சி தஞ்சை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்வதில்லை. அந்த அளவிற்கு நாம் நமது நன்றியினைக் காட்டி வருகிறோம். (அதிகாரிகள் யாரும் இதைச் செய்வதில்லை)

இந்நிலையில் நம் முன்னோடிகள் பெருந்தலைவர் காமராசருக்கு நம் நிறுவன வளாகத்தில் சிலை வைக்கக் கோரினர். நிர்வாகம் வைக்க மறுத்தது. இடமாவது கொடுங்கள். நன்றியுள்ள நாங்கள் வைத்துக் கொள்ளுகிறோம் என்று கேட்டதற்கும் இடம் தர மறுத்துவிட்டது நிர்வாகம். அதனால் நம் முன்னோடிகள் தஞ்சை சாலையில் பெருந்தலைவருக்கு சிலை வைத்தார்கள்.

இந்நிலையில் திராவிடர் தொழிலாளர் கழகம் 1992ல் நிர்வாகத்திடம் சிலைதான் நிர்வாகத்தால் வைக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அவரது படத்தையாவது நமது நிர்வாகக் கட்டடத்தில் வையுங்கள் என்று கோரினோம். அதற்கு அன்றைக்கு இருந்த பொதுமேலாளர் காமராசர் படம் வைக்க Protocol இல்லை என்றார். இதனைக் கேள்வியுற்ற திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் காமராசர் படம் வைக்க Pசழவழஉழட  இல்லையா? இந்நிறுவனத்தில் நிர்வாக அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சரஸ்வதிää பிள்ளையார்ää கிருஷ்ணன் படங்களுக்கெல்லாம் என்ன Protocol   இருக்கிறது? சரசுவதி பூஜை போடுவதற்கு என்ன Protocol   இருக்கிறது?

காமராசர் படம் வைக்க Protocol   இல்லை என்றால் அந்த Protocol   அய் உருவாக்குவோம் என்று அறிவித்து அந்த ஆண்டு (1992) காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 அன்று திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இடையில் அய்ந்தே நாள்தான் இருந்தது. அந்த 5 நாளிலும் காலையில் மெயின்கேட்டிலும் மாலையில் வடக்கு வாயிலிலும் ஆக இரண்டு கூட்டங்கள் நாள்தோறும் நடத்திப் பத்து கூட்டங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட பேச்சாளர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தியது திராவிடர் தொழிலாளர் கழகம்.

ஜூலை 15 அன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்று நிர்வாகம் முயன்றது. முடியவில்லை. 15 காலையிலிருந்தே திருச்சிää தஞ்சைää புதுக்கோட்டைää கரூர்ää பெரம்பலூர்ää அரியலு10ர்ää ஜெயங்கொண்டம்ää உரத்தநாடு என பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

நிர்வாகத்துடன் திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மாவட்டக்கழக நிர்வாகிகளும் தி.தொ.க. நிர்வாகிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். காவல்துறை அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்துகொண்ட அந்தப் பேச்சு வார்த்தையில் நிர்வாகம் சிறிதும் பிடி கொடுக்கவில்லை. இறுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு நிர்வாகத்துடன் பேசுகிறார். அப்பொழுதும் நிர்வாகம் முடியாது என்கிறது.

 அதற்குள் நிலைமை கட்டுக்கு மீறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் நான் உத்தரவிடுகிறேன். கமாராசர் படத்தை பெல் நிர்வாகம் வைக்க வேண்டும் என்று ஆணையிடுகிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆணையிட்டாலும் நாங்கள் வைக்க மாட்டோம் என்று ஆணவமாக பதில் ;சொன்னது நிர்வாகம். உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாகவும் இனி பெல் நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு கோரக்கூடாது என்றும் அறிவித்தார்.

அதன்பிறகுதான் நிர்வாகம் பணிந்தது. உடனடியாக ஒரு வார காலத்திற்குள் காமராசர் படத்தை வைத்து விடுகிறோம் என்று நிர்வாகம் எழுத்து மூலமாகத் தெரிவித்தது. மூன்றே நாட்களுக்குள் காமராசர் கம்பீரமாக அமர வைக்கப்பட்டார்.

இப்பொழுதும் 24ம் எண் கட்டிடத்தில் இரண்டாவது தளத்திற்கும் மூன்றாவது தளத்திற்கும் இடையில் அழகுற அமர்ந்துள்ள காமராசர் திராவிடர் தொழிலாளர் கழகத்தால் அமர வைக்கப்பட்டவர் என்பது நம் வரலாறு. வேறு எந்த சங்கத்திற்கும் இப்படிப்பட்ட தனித்தன்மையான அடையாளம் கிடையாது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக