செவ்வாய், 13 டிசம்பர், 2016

“Dattopant Thengadi National Board for Workers Education and Development”



அகில இந்திய அளவில் மத்திய அரசின் சார்பில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்டு வந்த மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் CENTRAL BOARD OF WORKERS EDUCATION   “Dattopant Thengadi National Board for Workers Education and Development”     
என்று மத்திய பிஜேபி அரசால் மாற்றப்பட்டுள்ளது.

யார் இந்த தத்தோபந்த் தெங்கடி?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை முழு நேரத் தொண்டராக இருந்து அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை நாட்டு மக்கள் மத்தியிலே கொண்டு சென்றவர்.

குருஜி கோல்வால்க்கரின் ஆணைக்கிணங்க தொழிலாளர்களை ஆர்எஸ்எஸ் சின் கொள்கைக்கு ஈர்ப்பதற்காக பாரதீய மஸ்தூர் சங்கம் என்ற தொழிலாளர் அமைப்பைத் தொடங்கியவர். சுதேசி ஜாக்ரான் மஞ்ச்ää பாரதீய கிசான் சங்கம்ää ஆகியவற்றையும் துவக்கியவர். கோல்வால்கரின் ஆலோசனையின்படி மாணவர் மத்தியில் ஆர்எஸ்எஸ் சிந்தனைகளைக் கொண்டு செல்ல அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்ää வழக்கறிஞர்களிடையே அதன் கருத்துக்களைப் பரப்ப அகில பாரத அதிவக்தா பரிஷத்ää ப்ரக்ஞா ப்ரவாஹ்ää பாரதீய விசார் மஞ்ச் என்கின்ற சிந்தனையாளர் அமைப்பு அகில பாரத க்ராஹக் பஞ்சாயத் என்கிற்க நுகர்வோர் அமைப்பு ஆகியவை உருவாக வழிகாட்டியாக இருந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மக்கள் மத்தியிலே கொண்டு சென்றவர்.

ஆக மத்திய பாரதீய ஜனதா அரசு கல்வியைக் காவிமயமாக்குவதுபோல மத்திய அரசின் திட்டங்களுக்கும் இதுபோன்ற வாரியங்களுக்கும் ஆர்எஸ்எஸ் காரர்களை தலைவர்களாக நியமித்து அதன் பெயர்களையெல்லாம் இப்படிப்பட்டவர்களின் பெயரை வைத்து எல்லாவற்றையும் காவி மயமாக்கி வருகிறது.  ஏற்கனவே இந்த கல்வி வாரியத்திற்கு பிஎம்எஸ் சின் அகில பாரத துணைத்தலைவராக இருந்த ஸ்ரீலட்சுமாரெட்டி என்பவரைத் தலைவராகப் போட்டுள்ளது.

பிஎம்எஸ் தன்னை அரசியல் சாராத அமைப்பாக அறிவித்துக் கொண்டு தனது முகத்தை மறைத்துக்கொண்டிருந்தாலும் அந்த சங்கத்தைத் துவக்கிய தத்தோபந்த் தெங்கடி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் சார்பாக 1964 முதல் 1976 வரை நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்தவர்.

இப்படி பச்சையாக ஒரு அரசியல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் துவக்கிய பிஎம்எஸ் தன்னை அரசியல் சார்பற்ற சங்கம் என்று சொல்லிக்கொள்வது கேலிக்கூத்து அல்லவா? இன்றைய அதன் தலைவர் மத்திய அரசு வழங்கிய பதவியை நேரடியாக அனுபவித்துக் கொண்டு எங்களுக்கும் பாஜக  வுக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்வதும் பித்தலாட்டம் அல்லவா?

தெங்கடி அவர்கள் துவக்கிய சுதேசி ஜாக்ரான் மஞ்ச் இன்று காணாமல் போய்விட்டது. மோடி அவர்கள் உலகத்திலுள்ள குட்டி குட்டி நாடுகளுக்கெல்லாம் சென்று எங்கள் நாட்டில் வந்து தொழில் துவங்குங்கள். எங்கள் நாட்டில் மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பார்கள் என்று சொல்வது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கா? அவர்களைப் பன்னாட்டு தொழில் நிறுவனஙகளுக்கு கொத்தடிமைகள் ஆக்குவதற்கா?

அதேபோல தெங்கடி துவக்கிய அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் என்கின்ற மாணவர் அமைப்பு பச்சையாக இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்ற அமைப்புIIT,IIM,AIMSமத்திய பல்கலைக்கழகம்  போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு பல தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமான அமைப்பு. அதேபோல தெங்கடி துவக்கிய வழக்கறிஞர் அமைப்பான அகில பாரத அதிவக்தா பரிஷத் அமைப்பு மதுரையில் மாநாடு கூட்டி மனுதர்மத்தை இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று சொன்ன அமைப்பு ஆகும்.

இப்படி தெங்கடி அவர்களால் துவக்கப்பட்ட அமைப்புக்களெல்லாம் ஜாதி வெறி மதவெறி அமைப்புக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பிஎம்எஸ் காரர்களும் பாஜகவில் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரு ரூபாய் மிச்சப்படுத்திக் கொடுத்தற்காக 4 பக்கம் நோட்டீஸ் போடுபவர்கள் இவ்வளவு பெரிய மாற்றத்தினை ஏன் இதுவரை வெளியில் சொல்லவில்லை? சொன்னால் பாஜக வுக்கும் தனக்கும் உள்ள கள்ள உறவு அம்பலப்பட்டுப் போகும் அல்லவா? அதனால்தான் சொல்லவில்லை. இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்வீர்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக