புதன், 7 டிசம்பர், 2016

மற்ற சங்கங்கள் செய்யத் தவறுகின்ற செய்யக் கூசுகின்ற செய்வதற்கு அஞ்சுகின்ற செயல்களை திராவிடர் தொழிலாளர் கழகம் செய்யும்எ

பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழிலாளர் கழகம் துவக்கிய காலத்தில் பெல் தொழிலகம் முழுக்க பார்ப்பன ஆதிக்கக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

தொழிற்சங்கம் துவக்கிய போது ஆற்றிய உரையில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அய்யா வீரமணி அவர்கள் மற்ற சங்கங்கள் செய்யத் தவறுகின்ற செய்யக் கூசுகின்ற செய்வதற்கு அஞ்சுகின்ற செயல்களை திராவிடர் தொழிலாளர் கழகம் செய்யும்என்றும் மற்ற சங்கங்களெல்லாம் புகைப்படக் கலைஞர் போன்றவர்கள். படம் சரியாக வரவில்லையென்றால் அதை டச்சப் செய்து அழகல்லாதவர்களைக்கூட அழகாகக் காட்டுவார்கள்.

ஆனால் எக்ஸ் ரே நிபுணர்கள் உள்ளது உள்ளபடி காட்ட் கூடியவர்கள். அதிலே டச்சப் செய்ய முடியாது. செய்யவும் கூடாது என்று பேசினார்கள்.

அதனை நிரூபிக்கும் வகையில்தான் இங்கு நடந்த பார்ப்பன ஆதிககத்தை எந்த சங்கமும் தட்டிக் கேட்டதில்லை. கேடபதற்கு துணிச்சலும் இல்லை. ஆனால் திராவிடர் தொழிலாளர் கழகம் துவக்கிய காலத்தில் விடுதலையில் கட்டம் கட்டி செய்திகள் வரும். எஸ்எஸ்டிபி யில் பார்ப்பன ஆதிக்கம் பாரீர்! நிதித் துறையி; பார்ப்பன ஆதிக்கம் பாரீர் என ஒவ்வொரு துறையிலும் மலிந்து கிடந்த பார்ப்பன ஆதிக்கத்தை தோலுறித்துக் காட்டியது விடுதலை.

 பார்ப்பனரல்லாத அதிகாரிகளும் தொழிலாளர்களும் பார்ப்பனர்களால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தார்கள். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் பெல் நிறுவனத்தை BHARAT HEAVY ELECTRICALS LTD என்று அழைப்பதைவிட BRAHMIN HEIRARCHY EVER LASTING என்று அழைக்கக் கூடிய அளவுக்கு இங்கு பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்று பேசினார்.

உற்பத்தித் துறையிலும் பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. தொழிலாளர்களும் அதிகாரிகளும் பார்ப்பனக் கூட்டத்தால் அதிகம் வஞ்சிக்கப்பட்டார்கள். விடுதலையில் இதுபோல் வந்த பிறகு அவர்களது கொட்டம் அடக்கப்பட்டது.

பார்ப்பனரலiலாத தொழிலாளர்களும் அதிகாரிகளும் அதன்பிறகுதான் சுயமரியாதை உணர்வு பெற்று பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகுதான் பார்ப்பனரல்லாதாருக்கு விடிவு கிடைத்தது என்றால் அது மிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக