வெள்ளி, 2 டிசம்பர், 2016

தரக்கட்டுப்பாட்டுத்துறையில் இண்டர்டெக் என்கின்ற காண்ட்ராக்ட்






பாதுகாவல் துறையில் காண்ட்ராக்ட் செக்யூரிட்டியைப் புகுத்தியபோது பங்குபெறும் சங்கங்கள் அதனை எதிர்த்து  எச்சரிக்கை செய்தும் நிர்வாகம் அதைச் சட்டை செய்யாமலேயே காண்ட்ராக்ட் செக்யூரிட்டியைப் புகுத்தியது.

அவர்களெல்லாம் யார் என்று பார்த்தால் நாட்டுக்காக உழைத்து கடைசி காலத்தில் பெண்டு பிள்ளைகளோடு வாழலாம் என்று சொந்த ஊருக்கு வந்த தமிழர்கள். கொடிநாள் கொண்டாடி நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகச் சொல்லும் நிர்வாகம் அவர்களைக் காண்ட்ராக்ட்டில் மிகக் குறைந்த கூலியில் சுரண்ட ஏற்பாடு செய்தது.

ஆனால் அதே இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களை இன்று செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர்களாக எடுத்து அதிகாரிகளாக்கியிருக்கிறது. அவர்களெல்லாம் வடநாட்டான். தமிழனல்லாத பிற மாநிலத்தான்.

அதே போல எஞ்சினியர்களாகவும் சூப்பர்வைசர்களாகவும் நூற்றுக்கணக்கில் தமிழனல்லாதவர்களை எடுத்திருக்கிறது. ஆனால் உற்பத்தித்துறையில்ää தரக்கட்டுப்பாட்டுத்துறையில் எஞ்சினியர்ää சூப்பர்வைசர் பற்றாக்குறை. புதிய எஞ்சினியர்களையும் சூப்பர்வைசர்களையும் ஏசி அறைகளில் நியமித்து வெப்பத்தில் புழுங்கும் பணிகளில் தமிழர்களை வாடவிட்டிருக்கிறது.

ஆள் பற்றாக்குறையை சரிசெய்ய தரக்கட்டுப்பாட்டுத்துறையில் இண்டர்டெக் என்கின்ற காண்ட்ராக்ட்டைப் புகுத்தி வேலையில்லாமல் துன்பப்படும் BE, DIPLOMA  படித்த தமிழ் இளைஞர்களை எடுத்து மிகக் குறைந்த கூலியில் சுரண்டி வருகிறார்கள். அவர்களிடம் ESI,PF எல்லாம் பிடிக்கப்பட்டாலும் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. காண்ட்ராக்ட் செக்யூரிட்டி ஊழியர்களை ஏமாற்றியது போலவே இவர்களுக்கும் பிடிக்கப்படும் Pகு பணமும் அந்த அலுவலகத்தில் கட்டப்படுவதில்லை. நுளுஐ க்கு பணம் பிடித்தாலும் அவர்களுக்கு அதற்குரிய அட்டை வழங்கப் படுவதில்லை.

கடந்த ஆண்டு அவர்களை எடுத்தபோது 12000 ரூபாய் சம்பளம் தருவதாகச் சொல்லி 6000 மட்டுமே கொடுத்தார்கள். மாதம் 500 ரூபாய் கூட்டிக் கொடுத்து ஆண்டு இறுதியில் 12000 கிடைக்கும் என்றார்கள். ஆனால் கிடைத்தது என்னவோ 8500தான். அவர்கள் ஓராண்டு முடிந்தவுடன் அதே காண்ட்ராக்ட் தொடர்கிறது. ஊழியர்களும் அதே இளைஞர்கள்தான். ஆனால் சம்பளம் 6500தான். ஓராண்டு முடித்த சர்வீஸ் செல்லாது. மறுபடியும் நீ புதிதாகச் சேர்ந்ததுபோல்தான் கணக்கு. எனவே நீ 8500 வாங்கியிருந்தாலும் இந்த ஆண்டு உனக்கு 6500 தான் தருவோம் இஷ்டமிருந்தால் வேலை செய். இல்லையேல் நடையைக்கட்டு. வேலையற்ற தமிழ்க்கூலிகள் வெளியிலே ஏராளம் காத்திருக்கிறார்கள் என்ற மிரட்டல்.

இது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை. அத்துடன் மாதாமாதம் சம்பளத்தில் 500 பிடித்துக்கொள்வார்களாம். ஆண்டு முழுவதும் தொடர்ந்து வந்தால் அத்தொகையைத் திருப்பித் தருவார்களாம். இடையில் நின்றுவிட்டால் அத்தொகை கிடைக்காதாம். அதனையும் ஒத்துக்கொண்டு 8500 சம்பளம் வாங்கியவன் 6500க்கு வேலைக்கு வந்தாலும் அந்த சம்பளமும் இந்த மாதம் வழங்கப்படாமல்

அவர்கள் திருவோடு ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை. அதனால் அவர்கள் செய்த பணி முடங்கிப் போய்க் கிடக்கிறது. இதை நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. தொழிற்சங்கங்களுக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியவில்லை.

 காண்ட்ராக்ட் செக்யூரிட்டியைப் புகுத்தியபோது எச்சரிக்கை விட்ட சங்கங்கள் இதைப்பற்றி எதுவுமே கூறவில்லை. என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியாத வடநாட்டானெல்லாம் ஆயிரக்கணக்கில் சம்பளமும் PRPயும் வாங்கிக் கொழுத்துக்கிடக்க கடும் உழைப்பை நல்கும் நம் தமிழ் இளைஞர்கள் குறைந்தபட்சக் கூலிக்குக் கூட வழியில்லாமல் ஏங்கிக் கிடக்கிறார்கள். இதற்குத் தீர்வு எப்போது? தமிழன் விழித்தெழுந்து போராடும்போது. எப்போது விழித்தெழுவான் என்பதுதான் கேள்விக்குறி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக