வெள்ளி, 30 டிசம்பர், 2016

அனுப்புதல் 

வை.இராசேந்திரன்   உதவிப்பொறியாளர்                                                       பாரத மிகுமின் தொழிலகம்    திருச்சி -14.

பெறுதல்
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி                                            தலைவர் திராவிடர் கழகம்

அய்யா, வணக்கம்!

என்னுடைய சகோதரிக்கு இரண்டு மகள்கள். இருவருமே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். அந்த இருவருக்கும் எப்படித்திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று எங்கள் குடும்பத்தில் கவலையாக இருந்தோம். திருச்சியில் நவம்பர் 30 அன்று நடந்த மன்றல் விழா குறித்து பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் துண்டறிக்கை வழங்கினார்கள். ஃபிளக்ஸ் போர்டு வைத்திருந்தார்கள். அத்துடன் பூவை.புலிகேசியை வைத்து வாயிற்கூட்டம் நடத்தினார்கள். இதையெல்லாம் பார்த்தபிறகு எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அந்நிகழ்வில் கலந்துகொண்டோம். அன்றைக்கே பெரிய பெண்ணான செல்வி விக்னேஸ்வரிக்கு திருமணம் உறுதி ஆகிவிட்டது. தென்னூரைச் சேர்ந்த செல்வன் பாஸ்கரன் (அவரும் ஒரு மாற்றுத் திறனாளி) திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு வரும் ஏப்ரல் 14 அன்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்வு பெரியார் மாளிகையில் நடைபெற வேண்டும் என்ற அனைவரது ஆசையின்படி அது முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் இயக்கத் தோழர்களைப் பெருமளவு கலந்துகொள்ளச் செய்து திருமணத்தை நடத்தித் தர அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணமும்கூட.


மார்ச் 17ல் மதுரையில் நடந்த மன்றல் விழாவில் கலந்துகொண்ட தோழர் சரவணன் (மதுரை – 18) என்பவர் எனது சகோதரியின் இன்னொரு மகள் செல்வி வினோதினி என்பவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இதுபோன்ற விழாக்களை நடத்தும் தங்களுக்கு என் பாராட்டுக்களைத்   தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கும் தங்கள் இயக்கத்துக்கும் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்பதைத் தெரிவித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மணமகன் பெயர் : செல்வன் பாஸ்கரன் வெள்ளாளர் தெரு தென்னூர் திருச்சி – 17
       
மணமகள் பெயர் : செல்வி விக்னேஸ்வரி பெரியபுதூ சாரதா கல்லூரி அருகில் சேலம் -6

இப்படிக்கு
வை.இராசேந்திரன்


01-04-2013
திருச்சி -14.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக