புதன், 7 டிசம்பர், 2016

திராவிடர் தொழிலாளர் கழகம் ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கத்தின் பித்தலாட்டங்களை முறியடிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நமது நாட்டின் தொழிலாளர்களை சூத்திரன் என்றும் வேசி மகன் என்றும் இழிவுபடுத்தியது மனுதர்மம். அந்த மனுதர்மத்தை சட்டமாக ஆக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ். அந்த மனுதர்மத்தை ஒழித்துக்கட்டி மனித தர்மத்தை நிலைநாட்டுவதே பெரியார் தத்துவமாகும்.

அந்த ஆர்எஸ்எஸ் சினுடைய கொள்கைகள் தொழிலாளர் மத்தியில் பரவக்கூடாது. அது பரவினால் ஆபத்தானது என்பதால் அதனை முறியடிப்பது நமது முக்கியமான நோக்கமாகும்.

அந்த ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கத்தின் மூலமாக அதனுடைய கொள்கைகளை பரப்ப முனையும்போது திராவிடர் கழகத்தின் தொழிற்சங்கமான திராவிடர் தொழிலாளர் கழகம் அதனை முறியடிப்பதுதானே சரியான இலக்காகும்?

எனவேதான் திராவிடர் தொழிலாளர் கழகம் ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கத்தின் பித்தலாட்டங்களை முறியடிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது

ஆர்எஸ்எஸ் அமைப்பானது தமது கொள்கைகளை தொழிலாளர் மத்தியில் பரப்புவதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆள் பிடிக்கவும் பாதீய மஸ்தூர் சங்கம் என்ற ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் சினுடைய தொடர்பை வெளிப்படையாகச் சொன்னால் எடுபடாது என்பதால் எங்களுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. நாங்கள் உண்மையான தொழிற்சங்கம் என்று பொய்கூறி பெல்லில் சங்கத்தைத் துவக்கினர்.

வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பை அவர்கள் மறைத்தாலும் அவர்களுடைய செயல்திட்டம் அனைத்தும் ஆர்எஸ்எஸ் சின் வழிகாட்டுதல்படியே நடக்கும்.

தமிழகம் தந்தை பெரியார் பிறந்த மண் என்பதால் அவர்களால் வெளிப்படையாக வர முடியவில்லை என்பதுதான் உண்மை.

இப்படிச் சொல்லிப் பல தோழர்களை உள்ளே இழுப்பது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்து ஜாதி உணர்வைத் தூண்டுவது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது அதன் பிறகு ஆர்எஸ்எஸ் அய்ப் பற்றி வகுப்பெடுப்பது கடைசியில் ஷாகாவுக்கு அழைத்துச் சென்று அவர்களை முழுநேர ஆர்எஸ்எஸ் ஆக்குவதே அவர்களது மறைமுகத் திட்டமாகும்.

முதலில் இதைப்பற்றித் தெரியாமல் அவர்களது பசப்பு வார்த்தைக்கு மயங்கி பிஎம்எஸ் சில் சேர்ந்தவர்கள் போகப்போக அவர்களது உண்மை உருவத்தைத் தெரிந்துகொண்டு பல தோழர்கள் வெளியேறினர்.

இஸ்லாமிய கிறிஸ்தவ தோழர்களைக்கூட அவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி தாங்கள் மதஉணர்வுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள்.

ஒரு கிறிஸ்தவ தோழரிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது பிஎம்எஸ் என்பது ஆர்எஸ்எஸ் சுக்கு சம்மந்தம் இல்லாதது என்று அடித்துச் சொன்னார். அந்த சங்கத்தில் அவருக்கு பொறுப்புக் கொடுத்திருந்தார்கள்.

அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். நீங்கள் எந்த எந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வீர்கள் என்று கேட்டோம். செயற்குழுää நிர்வாகக்குழு பொதுக்குழு ஆகிய கூட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பார்கள் என்றார் அவர். சங்க குடும்ப கலந்துரையாடல் என்ற கூட்டம் கூட்டுவார்களே அதற்கு உங்களுக்கு அழைப்பு அனுப்பப்படுமா என்று கேட்டோம். கிடையாது என்றார். ஏன் என்று கேட்டதற்கு அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

செயற்குழு பொதுக்குழு நிர்வாகக்குழு ஆகியவற்றில் தொழிலாளர் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டும் பேசுவார்கள். ஆனால் சங்க குடும்பக் கலந்துரையாடல் என்பது அப்படி அல்ல. ஆர்எஸ்எஸ் ஐப் பொறுத்தவரை சங்கம் என்பது ராஷ்ட்ரிpய ஸ்யம் சேவக் சங்கம்தான். அதனுடைய பரிவாரங்கள்தான் பிஎம்எஸ்ää பிஜேபிää விஹெச்பிää போன்ற அமைப்புக்கள். அவை அனைத்தும் சேர்ந்தது சங்ப் பரிவார். அதாவது ஆர்எஸ்எஸ் சங்க குடும்பம். அந்தக ;கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு வருமா என்று கேட்டதற்கு வந்ததில்லை என்று சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அதன்பிறகு பிஎம்எஸ் சங்க மடல் என்ற ஒரு மாத இதழைக் காட்டி இதனை உங்களுக்கு கொடுப்பார்களா என்று கேட்டதற்கு இதை நாங்கள் கண்ணில்கூடப் பார்த்ததில்லை என்று சொன்னார். அந்த மாத இதழில் ஆர்எஸ்எஸ் சின் கருத்துக்கள் ஏராளம் இருந்தன. அதனை அவரிடம் காட்டிய பிறகுதான் அவருக்கு உண்மை புரிந்தது.

உடனே அவர்களின் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு அன்றைக்கே அந்த சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.

இதுபோல் நாம் அவர்களின் இரட்டை வேடத்தைத் தோலுறித்து வெளியிட்ட துண்டறிக்கைகளைப் படித்து ஏராளமான தோழர்கள் உண்மையைப் புரிந்து பிஎம்எஸ் சில் இருந்து வெளியேறினார்கள்.

அதேபோல பிஎம்எஸ் இன்னொரு பொய்யை அவிழ்த்து விடுவார்கள்.

அதாவது பிஜேபிக்கும் பிஎம்எஸ் சுக்கும் தொடர்பே இல்லை என்பார்கள்.
திதொக சார்பாக அதற்கு பதிலடி கொடுத்தோம்.

திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் ரெங்கராஜன் குமாரமங்கலம் தேர்தலில் நின்றபோது அவருக்கு தேர்தல் ஏஜன்டாக இருந்தவர்கள் எல்லாம் பிஎம்எஸ் சைச் சேர்ந்தவர்களே! பெல் நிறுவனத்தில் வாயிற்கூட்டம் நடத்தி அவருக்கு வாக்குக் கேட்டதும் பிஎம்எஸ் சே!
 அதேபோல ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவையொட்டி நடந்த தேர்தலில் பிஜேபி சார்பில் நிறுத்தப்பட்ட சுகுமாறன் நம்பியாருக்கும் அதன்பிறகு நடந்த தேர்தலில் போட்டியிட்ட லலிதா குமாரமங்கலத்திற்கும் வாயிற்கூட்டம் நடத்தி பெல் ஊழியர்கள் மத்தியில் வாக்குக் கேட்ட பிஎம்எஸ் தங்களுக்கும் பிஜேபிக்கும் தொடர்பு இல்லை என்பது ஏமாற்று வேலை என்று அம்பலப்படுத்தியும் திரும்பத்திரும்ப அதே பொய்யை இன்னமும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அது தொழிலாளர் மத்தியில் எடுபடவில்லை.

பிஎம்எஸ்சின் இன்னொரு பித்தலாட்டம்தான் விஸ்வகர்மா ஜெயந்தி என்பது. மே தினம் என்பது தொழிலாளர தினம் கிடையாது. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்ற கற்பனையை தொழிலாளர் மத்தியிலே பரப்பி வருகிறது. அது எப்பொழுது என்றால் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17தான் என்கிறது.

ஆர்எஸ்எஸ் கொண்டாடக்கூடிய நாட்களெல்லாம் ஏதோவொரு திட்டத்தோடுதான் கொண்டாடி வரும். திலகர் பிறந்த நாளான ஜூலை 23ந்தேதி சங்கத்தைத் துவக்கினார்கள். ஆர்எஸ்எஸ் சும் விஜய தசமி நாளில் துவக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு நாளுக்கும் ஒரு காரணத்தை வைத்து அதனை செயல்படுத்துவார்கள்.

 டிசம்பர் 6ந்தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பாபர் மசூதியை இடித்து அந்த நாளுக்குரிய சிறப்பைக் குறைத்ததுபோல புத்தபூர்ணிமா அன்று பொக்ரான் குண்டு வெடித்து அதன் சிறப்பைக் கெடுத்ததுபோல செப்டம்பர் 17அய்த் தேர்ந்தெடுத்து தந்தை பெரியார் பிறந்த நாளுக்குரிய சிறப்பைக் குறைப்பதுதான் அவர்களது நோக்கம். இதனை ஒவ்வொரு ஆண்டும் நாம் துண்டறிக்கை வாயிலாகவும் வாயிற்கூட்டத்தின் வாயிலாகவும் தோலுறித்து வந்தாலும் அவர்கள் அதனை அறிவு நாணயத்தோடு இதுவரை மறுத்ததில்லை.

அதேபோல மே தினத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அதனை அவர்கள் கேலி செய்து வருவதால் அதனை முறியடிக்க திராவிடர் தொழிலாளர் கழகம் அந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

2000 ஆவது ஆண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து மேதினத்தைக் கொண்டாடினோம். அப்பொழுது பெல் நிறுவனத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கத்தினரையும் அழைத்து அனைவரோடும் சேர்ந்து மே தினத்தை சிறப்பாகக் கொண்டாடினோம். அதுபோல் 2014ம் ஆண்டு அறிவுக்கரசு அவர்களை அழைத்து அந்நிகழ்ச்சிக்கு அனைத்து சங்கங்களையும் இணைத்து மேதின விழாவைக் கொண்டாடினோம். இதன் மூலம் ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கத்துக்கு பொதுவான எதிர்ப்பை உருவாக்கினோம்.

அதேபோல இங்கு நடைபெறும் பங்குபெறும் சங்கத் தேர்தலில் 1996ல் இதுவரை மற்றவர்களைப் பார்த்தீர்கள். பிஎம்எஸ் சுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டு ஓட்டுக் கேட்டார்கள். தாங்கள் யார்? தங்களது கொள்கை என்ன என்பதையே வெளிப்படையாகச் சொல்லவில்லை. தங்களுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் உள்ள தொடர்பைச் சொல்வதில்லை.
மற்ற சங்கங்களின் பலகீனங்களை மட்டுமே சொல்லி பங்குபெறும் சங்கமாகத் தேர்வு பெற்றார்கள். வெற்றி பெற்று வந்தபிறகு தங்களது ஆர்எஸ்எஸ் முகத்தை அனைவருக்கும் காட்டினார்கள்.

இதனால் தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் நன்கு அம்பலப்பட்டுப் போனார்கள்.

அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பிரச்சாரத்தால் பிஎம்எஸ்எஸால் வெற்றி பெற முடியவில்லை.

அதனால் எப்படியாவது வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற வெறியில் ஒரு குறிப்பிட்ட ஜாதி;க் காரர்களை அணுகி அவர்களது ஜாதிக்காரர்தான் செயலாளர் என்றும் எந்த சங்கத்திலும் மற்ற ஜாதிக்காரர் யாரும் தலைமைப் பொறுப்பில் இல்லை என்றும் பிஎம்எஸ் சில்தான் நமது ஜாதிக்காரர் இருக்கிறார் என்றும் அதனால் நமது ஜாதிக்காரர்களெல்லாம் பிஎம்எஸ் சுக்கு ஓட்டு;ப் போட Nவுண்டும் என்றும் கூறி அவர்களது தயவுடன் 2002ல் தவறவிட்ட வெற்றிவாய்ப்பை 2016ல் மீண்டும் பெற்றுவிட்டனர்.

இந்தத் தேர்தலில் நமது சங்கம் கடுமையாகப் பிரச்சாரம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக