திங்கள், 19 டிசம்பர், 2016

இந்துமதம். மாட்டுச்சாணியையும் மூத்திரத்தையும் விடக் கேவலமாக மனிதனை மதித்தது



உயிரினங்கள், செடிகொடிகள் அனைத்தும் உயிர்வாழத் தண்ணீர் மிகமிக அவசியம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கே குடிக்கத் தண்ணீர் தர மறுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. பண்பாடு இருக்கிறது. பாரம்பரியம் இருக்கிறது என்று சொல்லி ஆர்எஸ்எஸ், பிஎம்எஸ் கும்பல் செய்துவரும் பிரச்சாரத்துக்குச் சொந்தமான இந்துமதத்தில்தான் இந்தக் கொடுமை.

இது ஓராண்டு ஈராண்டல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தது. விலங்குகளிடமும் அன்பு செலுத்துகிறவர்கள் என்று பெருமை பேசுகின்ற அவர்கள்தான் மனிதன் தாகத்தால் தவிக்கும்போதுகூடத் தண்ணீர் தர மறுத்தார்கள்.

ஒருசாதிக்காரன் தொட்ட பாத்திரத்தில் இன்னொரு சாதிக்காரன் தண்ணீர் அருந்த மறுத்தான். தீண்டத்தகாதவர்கள் அழுக்கடைந்த குட்டைகளில் கிடந்த மாசடைந்த நீரை அருந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்;.

சொர்க்கத்துக்குப் போக ஆசைப்பட்ட சில ~தர்மவான்கள்| வைத்த தண்ணீர்ப்பந்தல்களில்கூட மூங்கில் குழாய்களில்தான் தீண்டத்தகாதவர்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. அதை மறுமுனையில் நின்று அவன் கைகளில் பிடித்துக் குடிக்க வேண்டும்.

தந்தை பெரியார் 1924ல் வைக்கத்தில் போராடி தீண்டத்தகாதவர்களுக்கு பொதுவீதியில் நடக்க உரிமை பெற்றுத் தந்தபிறகு சென்னை மாகாணத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பொதுவீதி, குளங்கள், கிணறுகள், சாலைகள் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டு வந்து நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல பம்பாய் மாகாணத்திலுள்ள மகாத் நகராட்சியிலும் போலே என்பவராலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அண்ணல் அம்பேத்கர் மகாத் குளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களோடு சென்று 1927 மார்ச் 20 அன்று  நீர் அருந்தும் போராட்டத்தை நடத்தினார்.

அதற்கு அவருக்கு உந்துசக்தியாக இருந்தது பெரியார் நடத்திய வைக்கம் போராட்டமாகும்.

அம்பேத்கரும் அவரது மக்களும் அக்குளத்து நீரைப் பருகியதால் குளமே தீட்டாகிவிட்டது என்று நீரெடுக்க மறுத்தனர் உயர் ஜாதியினர்.

எல்லாவற்றுக்கும்தான் பார்ப்பனர்கள் பரிகாரம் வைத்திருக்கிறார்களே! அதன்படி 108 குடங்களில் பசுவின் சாணம்ää பசுவின் மூத்திரம், பால், தயிர் இவற்றைத் தண்ணீரில் கலக்கி பார்ப்பனர்கள் தவளைகளைப்போல் கூச்சல் போட்டு வேதமந்திரம் முழங்கி இவற்றைக் குளத்தில் கொட்டி தீட்டுப்போக்கினர்.

மனிதன் தண்ணீர் அருந்தியதால் தீட்டானதாகக் கூறி மாட்டுச்சாணியையும், மூத்திரத்தையும் கலந்தால் தீட்டுப்போகும் என்று சொல்லுகின்ற மதம்தான் இந்துமதம். மாட்டுச்சாணியையும் மூத்திரத்தையும் விடக் கேவலமாக மனிதனை மதித்தது

இந்துமதம். மகாராஷ்டிரத்தில் சிவாஜிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பேஷ்வாக்கள் இந்தத் தீண்டாமையை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தார்கள்.

அந்த பேஷ்வாக்களால் துவக்கப்பட்ட அமைப்புத்தான் ஆர்எஸ்எஸ்.

 வெள்ளைக்காரன் வந்ததால் இந்தப் பார்ப்பன மனிதவிரோதச் செயல்களில் சில மாற்றங்கள் வந்தது.

அந்த மாற்றங்களைக்கூடத் தாங்கிக் கொள்ளாமல் மீண்டும் தங்களது சாதி ஆதிக்கத்தைத் தக்கவைக்க மராத்திய சித்பவன் பார்ப்பனர்களால் துவக்கப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். அதனுடைய தொழிற்சங்கம் பிஎம்எஸ். இவர்கள் தண்ணீருக்காகக் கண்ணீர் விடுவது ஓநாய் ஆட்டுக்காக விடும் கண்ணீருக்குச் சமம்.

பார்ப்பன சனாதன தருமத்தைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்களுக்காகவும் குரல் கொடுப்பதுபோல் நடிப்பது இவர்களுக்குக் கைவந்த கலை. எனவே, இவர்களின் பசப்பு வார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக