புதன், 14 டிசம்பர், 2016

காவிகள் தொழிற்சங்கப் போர்வைக்குள் முடங்கிவிட்டார்கள்.


புருடா மன்னர்கள் சங்கம் ஜெயிச்சு வந்த ஒடனே ஏன் கார்ப்பரேட்டுக்கு கம்ப்ளெயின்ட் எழுதினாங்க? இந்தக் கேள்வி எல்லார் மனசிலயும் எழும்.

இதுதான் காவிக் கோட்பாடு. சென்னை IIT யில இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் இந்தக் காவிக் கும்பலின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏத்தியது. இங்கே இருப்பது மாதிரியே தொழிற்சங்கம் என்பதற்குப் பதிலாக ABVPஎன்றும் விவேகானந்தர் பேரவை என்றும் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தார்கள். அவர்களெல்லாம் காவிச் சிந்னையை மாணவர் மனதில் விதைத்து நாட்டை இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சித்தார்கள். அங்கே இருந்த ஐஐவு நிர்வாகம் முழுக்க அவாளாக இருந்த காரணத்தால் அது சுலபமாக நிறைவேறியது.

ஆனால் இங்கே அது முடியவில்லை. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் எல்லா இடங்களிலும் அதிகாரிகளாக இருப்பதால் நம்மை அந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைப்போல முடக்க வேண்டும் என்ற அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான் தங்களுக்கு வேண்டியவர்கள் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் கார்ப்பரேட்டை அணுகினார்கள். அது இங்கே புஷ்வாணமாகிவிட்டது.

அடுத்து ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவைப்போல தற்கொலைக்கு ஆளாக்கலாம் என்றால் அது பெரியார் தொண்டர்களிடம் எடுபடாது. பெரியார் தனது தொண்டர்களை எதற்கும் துணிந்தவர்களாக தன்னம்பிக்கை உள்ளவர்களாகப் பக்குவப்படுத்தி இருக்கிறாரே தவிர கோழைகளாக உருவாக்கவில்லை. அதனால் அதுவும் இங்கே நடக்கவில்லை.

அதற்கும் மேலே JNUல்கலைக்கழகத்தில் நடந்த மாதிரி கன்னையக்குமார் மீதும் கம்யூனிஸ்ட் தோழர் ராஜாவின் மகள்மீதும் தேசத்துரோக வழக்குப்போட்டு; பாக்கிஸ்தான் ஆதரவாளர் என பழிபோட்டது போல நம்மையும் மாட்டிவிட கனவு கண்டார்கள். இங்கே புகார் கொடுத்த மாதிரி காவல்துறையிலும் புகார் கொடுத்;துள்ளார்கள். நாம் அதற்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல. இங்கே உள்ள போலீசு டெல்லி போலீஸ் மாதிரி இவர்கள் கைக்கூலி அல்ல. அதுவும் நடக்காது.

இந்த நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் முழுக்க மதவாத சக்திகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது. அதையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நம்மை முடக்க நினைத்தார்கள். அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.

நிர்வாகம் நடத்திய அந்த சட்ட வகுப்பே நிர்வாகத்தின் கடந்த கால நிலைக்கு எதிராக இருந்ததைச் சுட்டிக்காட்டினோம். நிர்வாகம் கொடுத்த பதில் அவ்வளவு சட்டரீதியாக இல்லை. விவேகானந்தர் புத்தகத்தை நிர்வாகம் ஏன் எல்லாத் தொழிலாளர்களுக்கும் தனது சொந்த செலவில் கொடுத்தது என்ற வினாவிற்கும் நிர்வாகம் பதிலளிப்பதற்கு முன் புருடா மன்னர்கள் சங்கம் பதிலளிக்க முயன்று மூக்குடைபட்டது. அதுபோல சுளுமு பள்ளியில் வழங்கப்பட்ட ஆண்டு மலரில் உள்ள குருகுலப் படத்தையும் மறைக்க நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

ஆக இங்கே திதொக தேர்தலில் நிற்காவிட்டாலும் கண்ணுக்குத் தெரிந்து ஒரு சில உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் மற்ற எல்லோரும் நம் செயல்பாட்டை ஆதரிப்பவர்களே. அனைத்து சங்கங்களும் நமக்கு ஆதரவாக இருப்பதைப்; பார்த்த காவிகள் தொழிற்சங்கப் போர்வைக்குள் முடங்கிவிட்டார்கள்.

நம்மை முடக்க நினைத்தவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டு விட்டது. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படைக் கடமைகள் மற்றும் உரிமைகள் 51(h)ன்படி தொழிலாளர் மத்தியிலே அறிவியல் மனப்பான்மையை ஊட்டவும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் சமுதாய சீர்திருத்தம் வளரவும் மனிதநேயத்தை வளர்க்கவும் தொடர்ந்து செயல்படுவோம்

மதவெறியை மாய்ப்போம்! சாதிவெறியை சாய்ப்போம்!! மனிதநேயம் காப்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக