வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஆர்எஸ்எஸ் சுக்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை. நாங்கதான் அக்மார்க் ISI,ISO தொழிற்சங்கம்




நம்ம BHEL லில் 1996ல நடந்த பங்குபெறும் சங்கத்தேர்தலில நம்ம மோடி சொன்ன மாதிரி நாங்க வந்தா வானத்த வில்லா வளைப்போம், மணலக் கயிறாத் திரிப்போம் னு கத விட்டு ஜெயிச்சாங்க. ஜெயிச்சு வந்து நம்ம மோடி மாதிரியே மோடி மஸ்தான் வித்தை காட்டினாங்களே தவிர ஒரு புல்லையும் புடுங்கல. அதனால அடுத்து வந்த மூனு தேர்தல்லயும் ஓட ஓட விரட்டினாங்க தொழிலாளிங்க.

நாங்கதான் ஒழுக்கமானவங்க ரொம்ப ரொம்ப யோக்கியமானவங்க ன்னு சொன்னவங்க ஒழுக்கமாவும் யோக்கியமாவும் ஆபீசக் காலி பண்ணல. விட்ட பதவிய எப்படியாவது புடிச்சு அலுவலகத்தத் தக்க வச்சுக்கனுமின்னு எவ்வளவோ குட்டிக்கரணம் அடிச்சுப் பாத்தும் கதையாவல. ஒரு நியாயமான அதிகாரி மரியாதயா ஆபீசக் காலி பண்ணுங்கன்னு நோட்டீஸ் குடுத்து அவங்க காலி பண்ணாததால ரெண்டு பூட்டுப்போட்டு இழுத்து மூடினாரு.

அத எதிர்த்து கேசு போட்டதா பாவலா பண்ணினாங்க இந்த யோக்கியவான்கள். எல்லாம் சட்டப்படிதான் நாங்க நடப்போம்னு சொல்றவங்க எந்த சட்டப்பிரிவையும் காட்டி அதன்படி இந்த ஆபீசைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை இருக்குதுன்னு கேசு போடல. தொழிலாளர் சட்டம், தொழிற்சங்க சட்டம் இந்தப்பிரிவு இந்த செக்ஷன் அப்படீன்னு எதையுமே காட்டல. பொதுவா இந்திய அரசியல் சட்டப்படின்னு ஒரு கேசப் போட்டாங்க. எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்ய வேண்டிய ஜட்ஜ் அதுக்கும் ஒரு தீர்ப்புச் சொன்னாரு. அதுல இவங்க ஆபீசக் காலி பண்ணினது தப்புன்னும் சொல்லல. இவங்களுக்கு ஆபீசத் தொறந்து உடனும்னும் சொல்லல.

ஒரு பொது இடத்த ஆக்கிரமிச்சவங்கள எப்படி முறைப்படி நோடடீஸ் கொடுத்து காலி பண்ணனுமோ அப்படிக் காலி பண்ணுங்க அப்படின்னுதான் நிர்வாகத்துக்கு ஜட்ஜ் உத்தரவு போட்டாரு. ஆனாää நம்ம ஹிந்துத்துவா மேனேஜ்மென்ட் ஏதோ உச்சநீதிமன்றத் தீர்ப்ப அமல்படுத்தறதா நெனச்சுக்கிட்டு ஒடனடியா ஆபீசத் தொறந்து உட்டுட்டாங்க.

எப்படி தேர்தலில் தோற்ற சங்கத்துக்கு அலுவலகத்தத் திறந்து வுட்டீங்கன்னு நாங்க நிர்வாகத்தக் கேட்டோம். அதுக்கு ஹிந்துத்துவா மேனேஜ்மென்ட் என்ன சொன்னது தெரியுமா? அவங்க PURELY தொழிற்சங்க வேலைக்குத்தான் அந்த ஆபீசப் பயன்படுத்தறாங்கன்னு தலையில அடிச்சுச் சத்தியம் செஞ்சது.

அப்படிச் சத்தியம் செஞ்ச நிர்வாகத்தின் மூஞ்சியக் கிழிச்சுத் தொங்க விடுற மாதிரி அவங்க சொன்ன ஒரு சில நாட்களிலேயே அந்த ஆபீசில RSSகுருபூஜை விழா நடத்த ஏற்பாடானது. எல்லாவற்றிலும் ரகசியம் காப்பாற்றும் அந்த ரகசிய திருட்டுக்கும்பல் இந்த விசயத்தில ரகசியத்தக் காப்பாத்த முடியல. எங்க கைக்கே அந்த நோட்டீஸ் கெடச்சது.
நிர்வாகத்துக்கு அதச் சுட்டிக்காட்டி இப்பவாச்சும் அவங்க அலுவலகத்த உடனே காலிபண்ணச் சொல்லுங்க அப்படீன்னு கடிதம் கொடுத்தோம்.

ஆனா நிர்வாகம் அந்தக் குருபூஜையை நிறுத்துச்சே தவிர அலுவலகத்த இன்னமும் காலி பண்ணல. எப்படியாச்சும் அவங்கள அடுத்த தேர்தலில ஜெயிக்க வச்சே தீரணும். அப்பத்தான் தொழிலாளர்களுக்கு எதிரா நாம நெனக்கறதயெல்லாம் செயல்படுத்த வசதியா இருக்கும் னு நிர்வாகமே அவங்கள வளத்து விட்டுக்கிட்டு இருக்குது. அவங்க விரிக்கிற வலையில சிக்கி மோசம் போகாதீங்கன்னு எமதருமைத் தொழிலாளர்களை அன்போட கேட்டுக்குறோம்.

இதோ ஆர்எஸ்எஸ் சுக்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை. நாங்கதான் அக்மார்க் ISI,ISO தொழிற்சங்கமுன்னு சொன்னவங்க போட்டிருந்த முகமூடி அதுக்கு சப்பைக் கட்டுக்கட்டின நிர்வாகத்தோட முகமூடி ரெண்டும் கிழிஞ்சு தொங்குது.





ஆர்எஸ்எஸ், பிஜேபி,பிஎம்எஸ் எல்லாம் ஒன்றுதான் என்று நீயாகவே ஒத்துக் கொள்ளும்வரை உன்னை விடப்போவதில்லை!
01.04.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக