புதன், 7 டிசம்பர், 2016

சரசுவதி சிலையும் காவி கும்பலும் பெல் நிர்வாகமும்

பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் தேவை
சரசுவதி சிலையும் காவி கும்பலும் பெல் நிர்வாகமும்

1992ம் அண்டு என்பது இந்திய வரலாற்றில் ஒரு கறைபடிந்த ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் இந்த நாட்டை ஈராயிரம் ஆண்டுகளாகச் சூறையாடிய ஆரியக் கும்பல் ஒரு குறுகிய காலமே தங்கள் ஆதிக்கத்தில் ஆட்டம் கண்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் இந்த நாட்டை இந்து நாடாக்க வேண்டும் என்ற சதியில் இறங்கி இருந்தது.

எங்கு பார்த்தாலும் மதவெறிக்கூச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது. எப்பொழுதும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் அது காலூன்ற எத்தனித்தது.

ஒரு பிள்ளையார் பொம்மையை வைத்து ஊர்வலம் நடத்தி மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சித்து வந்தது. பெரியார் பிறந்த மண்ணில் அதனுடைய சித்து விளையாட்டு எடுபடவில்லை.

அந்த ஆண்டு வாராது வந்த மாமணியாம் வி.பி.சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கன இட ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்தினார்.

அதனைப் பொறுத்துக்கொள்ளாத காவிக்கும்பல் நாடு பூராவும் மதக் கலவரத்தைத் தூண்ட அத்வானி என்பவரால் ரத யாத்திரை நடத்தப்பட்டது. வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
டிசம்பர் மாதம் 6ந்தேதி அயோத்தியில் நானூறு ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி காவிக்கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெல் நிறுவனத்திலும் ஆர்எஸ்எஸ் தன்னுடைய வாலை உள்ளளே நுழைக்க முயற்சி;த்தது. பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடிக்கும் பெல் நிறுவனத்தில் மதச்சார்பின்கை;கு உலை வைத்து இந்து மதப் பண்டிகையான ஆயுதபூஜைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காவிக் கும்பல் ஒரு சூழ்ச்சி செய்தது.

அதாவது நிறுவனத்திற்கு உள்ளேயே ஒரு சரசுவதி சிலையை நிறுவி விட்டால் படிப்படியாக இந் நிறுவனத்தை தங்கள் வயப்படுத்தி விடலாம் என கனவு கண்டது. அதனை நடைமுறைப்படுத்த கட்டிட எண் 50ல் இரண்டாம் ஆக்கத்தில் பழுதாகி இருந்த ஒரு இயந்திரத்தின் மறைவுப் பகுதியில் மூன்று மாத காலமாக ஒரு தொழிலாளி சரசுவதி சிலையினைச் செய்து வந்தார்.அதற்குத் தி;ட்டமிட்டது ஆர்எஸ்எஸ்

சிலை செய்து முடித்து இன்னும் இரண்டு நாளில் அச்சிலை கட்டிட எண் 1க்கும் கட்டிட எண் 50க்கும் இடையில் நிறுவப்பட்டு கோயில் கட்ட காவிக்கும்பலால் திட்டமிடப் பட்டது.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஓ.அரங்கராசு அவர்கள் நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். உடனடியாக அந்த சரஸ்வதி சிலை அகற்றப்பட வேண்டும். இல்லையேல் நிறுவனத்திற்கு உள்ளேயே தந்தை பெரியார் சிலை நிறுவப்படும் என்று திதொக சார்பிலும் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக ஆயுதபூஜையின்போது ஊர்வலமும் நடத்தப்படும் என்று கடிதம் கொடுக்கப்பட்டது.

ஆயுதபூஜைக்கு முதல்நாள் மெயின் கேட்டில் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. தலைமைக்கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஏற்கனவே நாம ;கடிதம் கொடுத்திருந்ததால் விழித்துக்கொண்ட நிர்வாகம் காவல்துறை உதவியுடன் சிலையை காலை 7.40 மணிக்கு வெளியில் எடுத்து வந்தது.

நமது வாயிற்கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே சிலை அப்புறப்படுத்தப்பட்டதைப் பார்த்த தொழிலாளர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள்.

யாருக்குமே தெரியாமல் செய்யப்பட்ட சிலையை திராவிடர் தொழிலாளர் கழகம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வைத்த செயல் பலரது பாராட்டையும் பெற்றது.

அந்த சிலை தற்பொழுது பெல் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலை மாத்திரம் அப்பொழுது நிறுவனத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்தால் அதனைத் தொடர்ந்து பல மதமோதல்களும் ஜாதி மோதல்களும் நடக்க வாய்ப்புக்கள் இருந்தன. அதனை நாம் தடுத்து நிறுத்தியதால் காவிக்கும்பலின் ஆத்திரத்துக்கு நாம் ஆளானோம். அதனுடைய உருட்டல் மிரட்டல்களையெல்லாம் முறியடித்தோம்

பெல் நிறுவனத்தில் தொழில் அமைதியும் தொழில் உறவும் கெடாமல் பாதுகாத்தது திராவிடர் தொழிலாளர் கழகம்.

இதனை நிர்வாகத்தில் இருந்த சில அதிகாரிகளே மனமுவந்து பாராட்டினார்கள்.

இது திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மணிமகுடத்தில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாக திகழ்கிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக