செவ்வாய், 27 டிசம்பர், 2016

கடவுள் கதைகளில் உள்ளதையெல்லாம் யாராவது நம்புகிறீர்களா?



அன்புள்ள ஆத்திக சகோதரர்களே!

கடவுள் கதைகளில் உள்ளதையெல்லாம் யாராவது நம்புகிறீர்களா?
எல்லா புராணத்திலும் உலகம் தட்டை என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனை யாராவது இன்று நம்புகிறீர்களா?

அந்தப் பூமியை ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலைப் பாம்பு தாங்கிக் கொண்டுள்ளதாக புராணங்கள் சொல்கிறதே அதனை யாராவது நம்புகிறீர்களா?

எந்தப் புராணத்திலும் அமெரிக்கா என்ற ஒரு நாடு இருப்பதையோää ஆஸ்திரேலியா என்ற நாட்டைப்பற்றியோää அய்ரோப்பா பற்றியோ குறிப்பிடப்பட்டுள்ளதா?

புராணங்களில் சொல்லப்பட்டுள்ள மேல் ஏழு லோகம் கீ; ஏழு லோகம் என்பதை இன்று யாராவது நம்புகிறீர்களா? இந்திரலோகம்ää சந்திரலோகம்ää எமலோகம்ää சிவலோகம்ää பரலோகம்ää வைகுண்டம் இவையெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றன? அவற்றை யாராவது நம்புகின்றார்களா?

புராணங்களில் அடிக்கடி பூலோகத்திற்கு இந்திரன் வந்தான் சந்திரன் வந்தான் நாரதன் வந்தான் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளதே! இப்பொழுது ஏன் வருவதில்லை?

தேவலோகத்திலிருந்து தேவலோக கன்னிகைகள் பூலோகம் வந்து இங்குள்ள பொய்கையில் நீராடி பூக்களைப் பறித்துச் சென்றதாக எழுதப்பட்டுள்ளதேää இப்பொழுது யாரும் ஏன் வருவதில்லை?

முன்பெல்லாம் கடவுள் தன் பக்தர்களைச் சோதிக்க அடிக்கடி சிவனடியாராகவும் பல்வேறு வடிவங்களில் வந்ததாகவும் பெரியபுராணம் போன்ற புராணங்கள் சொல்கின்றதேää இப்பொழுதெல்லாம் ஏன் கடவுள் அவ்வாறு வருவதில்லை?

முன்பெல்லாம் கடவுள் அடிக்கடி அவதாரம் எடுத்து வந்து இங்குள்ள அதர்மங்களை அழித்ததாகப் புராணங்கள் சொல்கின்றனவேää இப்பொழுது ஏன் அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுப்பதில்லை?
சிவபெருமான் பல்வேறு திருவிளையாடல்களை இங்கு நடத்தினாராமே! அந்தத் திருவிளையாடல்கள் ஏன் இப்பொழுது நடப்பதில்லை?

தேவலோகத்தில் ரம்பாää ஊர்வசி மேனகா என்றெல்லாம் இருந்தார்களாமேää இப்பொழுது அவர்கள் எல்லாம் எங்கே?
பாற்கடலைக் கடைந்து தேவாமிர்தம் எடுத்து அதை உண்டதால் தேவர்களுக்கு இறப்பே இல்லையாமேää இறவா வரம்பெற்ற அந்த தேவர்களெல்லாம் இப்பொழுது எங்கே?

தேவாமிர்தத்தைக் கொடு;த்த அந்த திருப்பாற்கடல் இப்பொழுது எங்கே இருக்கிறது?

எமன் வந்து உயிரை எடுக்க வந்தபோது சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்திருந்த மார்க்கண்டேயனை சிவன் காப்பாற்றி என்றும் பதினாறு வயது என்று சாகாவரம் கொடுத்தாராமேää அந்த மார்க்கண்டேயன் இன்று எங்கே?

ஊமையனைப் பேசவைத்த பாடவைத்த சரஸ்வதி இன்று எங்கே? எத்தனை ஊமைகள் இன்று இருக்கிறார்கள்? அவர்களில் ஒருவரையாவது பாடவைக்காவிட்டாலும் பேச வைக்கலாமே! கோழையை வீரனாக்கிய பார்வதியும்ää ஏழையை பணக்காரியாக்கிய லட்சுமியும் இன்று எங்கே?

ஈ. எறும்புää எண்ணாயிரம் உயிர்களுக்கும் எப்படி இருந்தாலும் படியளக்கும் பகவான் இன்று எங்கே? இன்னும் எத்தனையோ ஏழைகள் பட்டினியாகப் படுக்கச் செல்கிறார்களே! அவர்களுக்கு ஏன் பகவான் படியளப்பதில்லை?

இவையெல்லாமே பொய் கற்பனை என்பதுதானே இன்றைய அறிவியல் உலகின் முடிவு?

அப்படி இருக்கää பூமி தட்டையானதுää அதனை ஒரு அசுரன் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளித்து வைத்தான்ää ஆண்டவன் பன்றி அவதாரம் எடுத்து அந்த பூமியை மீட்டான்ää அந்த பூமிக்கும் பன்றிக்கும் காதல் வந்து அதனால் பிறந்த பிள்ளைதான் நரகாசுரன் என்றும்ää அந்த நரகாசுரன் இறந்த நாளே தீபாவளி என்றும் புராணங்களில் எழுதப்பட்டுள்ளதேää அதுவும் பொய்தானே! கற்பனைதானே? அதை நம்பி தீபாவளி கொண்டாடுவது எந்த விதத்தில் அறிவுடைமை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக