வெள்ளி, 2 டிசம்பர், 2016

திலகர் பிறந்த நன்னாளில் பிஎம்எஸ் துவக்கப்பட்டது


பிஎம்எஸ் ஸின் 57ம் ஆண்டுவிழாவும், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுத் தெருமுனைப் பிரச்சாரம் என்ற தலைப்பிட்டு பிஎம்எஸ் துண்டறிக்கை வழங்கியுள்ளது. அதில் 1955ம் ஆண்டு ஜூலை 23ம் நாள் தத்தோபந்த் தெங்கடிஜி அவர்களால் திலகர் பிறந்த நன்னாளில் பிஎம்எஸ் துவக்கப்பட்டதாக குதூகலத்துடன் கூறியுள்ளார்கள்.

அப்படியானால் இவர்களது குருநாதர்களில் திலகர் பெருமான் முதன்மையானவர் என்பது நன்கு விளங்குகிறது. எனவே, திலகருடைய கொள்கைகளில் பிஎம்எஸ் ஸ_க்கு முழு உடன்பாடு இருக்கும் என்பதில் அய்யமில்லை.

இருந்தாலும் பிஎம்எஸ் இன்று அணிந்திருக்கும் முகமூடி நமக்கு சில அய்யங்களைத் தோற்றுவித்துள்ளது. அந்த அய்யங்களை பிஎம்எஸ் போக்குமா?

திலகர் பெருமான் ~~சுயராஜ்யம் நமது பிறப்புரிமை|| என்று முழங்கினார். அதில் நமக்கு எந்த அய்யமும் இல்லை. ஆனால் அவரது சுயராஜ்யத்தில் மனுஸ்மிருதிதான் சட்டமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் கற்றறிந்தவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ~~ ~~Our law is manusmiriti’’ and pointed out that the law (Manusmiriti) orders king to administrate with the help of learned persons and Brahmins vd;W Samagra Logmanya Thilak Volume VI pages 449-450  என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பம்பாய் மாகாண சட்டமன்ற மேலவையில் பல்வேறுபட்ட தொழில் செய்பவர்களுக்கும் இடம் அளிப்பதை எதிர்த்து திலகர் ஆதானியில் 1917 நவம்பர் அன்று பேசிய தனது பேச்சில் கடுமையான மொழிpயில் ஒரு தீவிரமான வாதத்தை முன்வைத்தார்.

~~தொடக்கக் கல்விக்குப்பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம் என்று தீண்டத்தகாத மக்களுக்கு திலகர் ஆலோசனை கூறினார் இதன்மூலம் தீண்டத்தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்”
இதன் தொடர்ச்சியாகத்தான் திலகருடன் ஒத்த கருத்துள்ளவரான ராஜாஜி தமிழகத்தில் 1952ல் ஆட்சிக்கு வந்து

குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் (மட்டும்) ஒருவேளை படிப்புää ஒருவேளை அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
அத்துடன் சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திலகர் என்ன சொன்னார் தெரியுமா? எண்ணெய்க் கடைக்காரர்களும் புகையிலைக் கடைக்காரர்களும் வண்ணார்களும் மற்றவர்களும் (பார்ப்பனரல்லாதாரை இப்படித்தான் அவர் வர்ணித்தார்) சட்டமன்றத்துக்குச் செல்ல ஆசைப்படுவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றார்.

அவரது கருத்துப்படி இவர்களது வேலை சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தவிர சட்டங்களை இயற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படுவது அன்று என்பதாகும். (அண்ணல் அம்பேத்கர் எழுதிய~காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?| என்ற நூல் பக்கம் 254)

இதனை பிஎம்எஸ் ஏற்றுக் கொள்கிறதா? தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களை தங்கள் சங்கத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்காகப் பாடுபடுவதாக் கூறுவதெல்லாம் யாரை ஏமாற்ற? திலகர் கூற்றுப்படி மனுதர்மம் சட்டமானால் இவர்கள் கதி என்ன?  இந்த மொழி புரிந்தால் அறிவுநாணயத்துடன் பிஎம்எஸ் பதில் சொல்லட்டும்.                    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக