வெள்ளி, 2 டிசம்பர், 2016

விஸ்வகர்மா பிறந்த நாளுக்கு திதிநட்சத்திரம் எதுவும் சொல்வதில்லை.


இந்து மதத்தில் இந்தக்கடவுள் இந்த தேதியில்தான் பிறந்தார் என்று சொல்ல முடியாது. கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான்@ இராமன் நவமியில் பிறந்தான்@ விநாயகன் சதுர்த்தியில் பிறந்தான்@ முருகன் சஷ்டியில் பிறந்தான் என்று அவர்கள் பிறந்த திதியைச் சொல்லுவார்கள். பிஎம்எஸ் காரர்கள் மேற்சொன்ன கடவுளர்களைப்போல விஸ்வகர்மா பிறந்த நாளுக்கு திதிநட்சத்திரம் எதுவும் சொல்வதில்லை.

இவர்களது இந்துமதத்தின்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குறிப்பிட்ட தேதியிலும் கொண்டாடுவதில்லை. வெள்ளைக் காரனை மிலேச்சர் அதாவது கீழானவர்கள் என்பார்கள். அந்த மிலேச்சனான வெள்ளைக்காரர்களது ஆண்டுக்கணக்கில் செப்டம்பர் மாதத்தில் அதுவும் 17ந்தேதி பிறந்தார் என்கிறார்கள். அதற்கு என்ன ஆதாரம் என்றால் ஆதாரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.

இருந்தால்தானே ஆதாரம் காட்டுவதற்கு? அந்த செப்டம்பர் 17 அன்று தமிழர் அனைவரும் தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கின்ற பெரியார் பிறந்தநாள். அதனால் அந்த நாளுக்குப் பெருமை வந்து  விடக்கூடாது என்பதற்காக அந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

 ஆனால் அவர்களில் அதிபுத்திசாலி ஒருவர் நாங்கள் செப்டம்பர் மாதத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. செப்டம்பர் 17 புரட்டாசி 1ந் தேதி வருகிறது. அதனால் புரட்டாசி 1அய்த்தான் நாங்கள் விஸ்வகர்மா பிறந்தநாளாகக் கொண்டாடுகிறோம் என்று உளறினார். .

அதாவது உண்மையா? 2011ம் ஆண்டு ஆவணி 31ந்தேதியே செப்டம்பர் 17 வந்தது. அந்த ஆண்டும் செப்டம்பர் 17ல்தான் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடினார்கள்.

 விஸ்வகர்மாவைப் பற்றிப் புராணங்களில் கூறப்பட்டுள்ள கதை ஒன்று இவர்களது அறிவுக்குச் சான்று: விஸ்வகர்மாவின் மகளை சூரியன் திருமணம் செய்துகொண்டானாம். சூரியனின் வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் அவள் தன்னுடைய வேலைக்காரியை சூரியனுடன் அனுப்பி வைத்தாளாம்.

அவள் இரண்டு பிள்ளை பெற்ற பிறகு சூரியனுக்கு சந்தேகம் வந்ததாம். (இரண்டுபிள்ளை பெறும்வரை அவள் முகத்தைப் பார்க்கவில்லைபோலும்) சூரியன் விஸ்வகர்மாவிடம் முறையிட்டானாம். விஸ்வகர்மா அவனது மகளிடம் கேட்டானாம். சூரியனின் வெப்பம் தாங்க முடியாததால் வேலைக்காரியை அனுப்பி வைத்ததாகக் கூறினாளாம். அதற்குப்பிறகு சூரியனின் வெப்பத்தைக் குறைக்க விஸ்வகர்மா சூரியனில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து சிவபெருமானுக்கு சூலாயுதமும் விஷ்ணுவுக்கு சக்கராயுதமும் செய்து கொடுத்தானாம். இப்படிப்போகிறது இந்தக்கதை.

இதை அறிவுள்ள மக்கள் யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? சூரியன் என்ன இரும்புத்தகடா? அல்லது செப்புத் தகடா வெட்டி எடுக்க? அவன் எந்த முறையில் வெட்டிஎடுத்தான்? GAS CUTTING ஆ அல்லது PUG CUTTING ஆ? அல்லது HACKSAW CUTTING ஆ? எங்கே நின்றுகொண்டு வெட்டியெடுத்தான்?

சூரியன் மனிதனா? கடவுளா? அவன் திருமணம் செய்து பிள்ளை குட்டி பெற்றெடுத்தானா?

இதையெல்லாம் உண்மை என்று நம்பினால் விஸ்வகர்மா என்ற ஒருவன் இருந்தான் என்பதையும் நம்பலாம்.

நீ சொல்வதை அறிவு சிறிதுமற்ற காட்டுமிராண்டிகள் நம்பலாம். பெல் மனிதவளத்துறை அதிகாரிகள் வேண்டுமானால் நம்பி

செப்டம்பர் 17ல் தந்தை பெரியார் பிறந்தநாளில் விஸ்வகர்மா ஜெயந்தி(?) கொண்டாட அனுமதி கொடுக்கலாம். பெரியார் பிறந்தநாளுக்கு அனுமதி மறுக்கலாம். ஆனால் இந்த அறிவியல் யுகத்தில் அனைத்து அறிவியல் சாதனங்களையும் பயன்படுத்துகின்ற அறிவுள்ள தொழிலாளர்களும் நம்ப வேண்டுமா?
எனவேää தொழிலாளர்களே! நம்மைக் காட்டுமிராண்டிக் காலத்துக்கு அழைத்துச்செல்லும் பிஎம்எஸ் சின் பித்தலாட்டத்தைப் புரிந்துகொள்வீர்! அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவீர்!            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக