வெள்ளி, 9 டிசம்பர், 2016

மீண்டும் புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில்குலக்கல்வித் திட்டம்

கீழ்ஜாதி மக்கள் அடிப்படைக் கல்வி கற்றால் போதுமானது
அவர்களுக்கு உயர்கல்வி அவசியமில்லை என்பது பாலகங்காதர திலகரின் கருத்து.
அவர்தான் ஆர்எஸ்எஸ் சின் முன்னோடி.

அவரது கருத்தின்படியேதான்

தமிழகத்தில் இராஜகோபாலாச்சாரி
அவனவனும் அவனவன் அப்பன் தொழிலைச் செய்தால் போதும் என்ற குலக் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதனை எதிர்த்து தந்தை பெரியார் குரல் கொடுத்தார்.
மற்றவர்களும் அதாவது காமராஜர் அண்ணா போன்றவர்களும் கம்யூனிஸ்ட்களும் போராடினார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் பயந்து இராஜாஜி அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்கவில்லை.

பெட்ரோலும் தீப்பந்தமும் வைத்துக் கொள்ளுங்கள்
நான் சொல்லுகிறபோது அக்கிரகாரத்தைக் கொளுத்துங்கள் என்று பெரியார் தன் தொண்டர்களுக்கு ஆணையிட்டார்.

அதன்பொருள் வன்முறையைத் தூண்டுவது அல்ல.
தீ வைத்தால் சட்டம் நம் மீது பாயும்
சிறை தண்டனை கிடைக்கும்
தூக்குத் தண்டனையும் கிடைக்கும் என்பது தந்தை பெரியாருக்குத் தெரியும்.
அப்படியானால் அவருடைய நோக்கம் என்ன?

உயிரைக் கொடுத்தேனும் அந்தத் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி உயிரைத் துச்சமென மதித்த பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் விரட்டி அடிக்கப்பட்ட திட்டம்தான் குலக்கல்வித் திட்டம்.

அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியாரால் விரட்டி அபடிக்கப்பட்ட அந்தக் குலக்கல்வித் திட்டம்
மீண்டும் புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் ஆர்எஸ்எஸ் காவிகளால் அமுல்படுத்தப்பட இருக்கிறது.

மற்ற மாநிலங்களில் அதற்குப் போதிய எதிர்ப்பு இல்லை. தமிழக அரசியல் கட்சிகளும் அதில் போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
எல்லோருக்கும் அடுத்த தேர்தல்தான் குறியாக இருக்கிறது.
ஆனால் அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகின்ற இயக்கமான திராவிடர் கழகம்தான் இதில் முழு அக்கறையோடு ஈடுபட்டு அதனை முறியடிக்க முயற்சிக்கிறது.

வரும் 2016 டிசம்பர் 18ல் திருச்சியில் பெற்றோர் மாணவர் ஆசிரியர் என முத்தரப்பினரையும் அழைத்து மாபெரும் பேரணி மாநாடு நடத்தி போராட்டத் திட்டத்தினை அறிவிக்க இருக்கிறார் தமிழர் தலைவர் வீரமணி.

உயிரைக் கொடுத்தேனும் விரட்டி அடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியைக் கொடுத்த பெரியார் தொண்டர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
மக்களின் கல்வியில் அக்கறை கொண்ட பெரியயோர்களே! தாய்மார்களே! இளைஞர்களே! மாணவர்களே! தொழிலாளர்களே!

அந்த மாநாட்டுக்கு வருகை தாரீர்! போராட்டத்தில் பங்கு கொள்வீர்!
ஆரியத்தின் சூழ்ச்சிதனை முறியடித்து புதிய குலக்கல்வித் திட்டத்தை விரட்டி அடிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக