புதன், 7 டிசம்பர், 2016

மதவெறிக்கு எதிரான பிரச்சாரம்

மதவெறிக்கு எதிரான பிரச்சாரம்

பெல் நிறுவனத்தில் மதவெறி என்பது நிர்வாகத்தின் உதவியோடு தொழிலாளர்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வந்தது. நாம் திராவிடர் கழகத்தின் பெயரிலோ திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பெயரிலோ எந்தத் துண்டறிக்கை வெளியிட்டாலும் காவி கும்பலைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக அதனை எதிர்கொள்ள மாட்டார்கள். இராமாயணத்தில் இராமன் இராமன் மறைந்திருந்து வாலியைக் கொல்ல அம்பு போட்டது போல் ஏதாவது ஒரு புனைபெயரிலேயே வருவார்கள்.

நமது கருத்துக்களுக்கு ஆதாரப்பூர்வமாகவோ அறிவுப்பூர்வமாகவோ வாதம் பண்ணாமல் ஏதாவது ஒரு விதத்தில் பெரியாரையும் ஆசிரியர் அவர்களையும் தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி திருட்டுத்தனமான நோட்டீஸ் ஒட்டிவிடுவார்கள்.

அவ்வாறு அவர்கள் வெளியிட்ட பெயர்களில் ஒரு சில

கிரிவல பக்தர் பேரவை
மாரியாத்தா பக்தர் பேரவை
அய்யப்ப பக்தர் பேரவை
அய்யன் திருவள்ளுவர் பேரவை
ஆதிவாசி பேரவை
இப்படியெல்லாம் நோட்டீஸ் போடுவாங்க. அவர்களது முகத்திரையை கிழித்து நாம் துண்டறிக்கை வெளியிட்டால் நிர்வாகத்தில் உள்ளவர்கள் நம்மை அழைத்து மிரட்டுவதுபோலப் பேசுவார்கள். நாம் அவர்களது பித்தலாட்டமான துண்டறிக்கைகளை எடுத்துச் சொன்னால் அவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியாது என்று நிர்வாகத்தில் உள்ள பார்ப்பனர்கள் நம்மை நக்கல் செய்வார்கள்.

இந்து முன்னணி, வனவாசி கல்யாண் ஆஸ்ரம், விஹெச்பி போன்ற பெயர்களில் எல்லாம் நோட்டீஸ் போடுவார்கள். அவை எல்லாவற்றிற்றும் நாம் சரியான பதிலடி கொடுத்தாலும் காவிகள் நமக்கு பதிலே சொல்ல மாட்டாங்க.

பாபர் மசூதி இடித்த நாளில் ஆண்டுதோறும் விஹெச்பி என்ற பெயரிலும் Patriot என்ற பெயரிலும் தேசபக்த பேரவை என்ற பெயரிலும் துண்டறி;க்கைபோட்டு மசூதி இடிக்கப்பட்ட செயலை ஆதரித்தும் அதுதான் உண்மையான சுதந்திர நாள் என்றும் இன்னும் காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் பாக்கி இருக்கிறது என்றும் மதவெறியைத் தூண்டும் வகையில் காவிகள் நோட்டீஸ் போட்டு மதவெறியைத் தூண்டுவார்கள்.

நாம் அதனைக் கண்டித்து நிர்வாகம் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளாமல் அவர்களை சுதந்திரமாக உலவ அனுமதிப்பார்கள்.

விவேகானந்தரது 150வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நிர்வாகமே இராமகிருஷ்ணமடம் வெளியிட்ட விவேகாநந்தரது புத்தகத்தை அனைத்து பணியாளர்களுக்கும் நிர்வாக செலவில் வழங்கியது. அதனை நமது தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டோம். அந்தப் புத்தகத்தில் உள்ள பிற்போக்குத்தனமான கருத்துக்களை எடுத்துச்சொல்லி நாம் கண்டன அறிக்கை வெளியிட்டால் நிர்வாகம் அதற்கு நமக்கு பதிலளிக்கவில்லை. ஆனால் அந்தப் புத்தகம் வழங்குவது நிறுத்தப்பட்டது.

அதற்கு பதில் சொல்வதாக காவி கும்பல் விவேகாநந்தர் நல உரிமைச்சங்கம் என்ற பெயரிலும் பாரத தொழிலாளர் கழகம் என்ற பெயரிலும் பெரியாரையும் நம் இயக்கத்தையும் தமிழர் தலைவர் அவர்களையும் கொச்சைப்படுத்தி துண்டறிக்கை வெளியிட்டது காவி கும்பல். இதனை நிர்வாகத்திற்கு பலமுறை நேரிலும் துண்டறிக்கை வாயிலாகவும் எடுத்து வைத்தாலும் நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி நாம் வெளியிட்ட துண்டறிக்கைகள் தொழிலாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு காவிகளின் முகத்திரையை வெட்டவெளிச்சமாக்கியது.

சேதுசமுத்திரத்திட்டத்தை காவிகள் எதிர்த்த நேரத்தில் நாம்; அதற்கு சரியான பதிலடி கொடுத்து வந்தோம். அப்பொழுதும் காவிகள் நேரடியாக வராமல் போலிப்பெயர்களில் வந்து உளறினார்கள்.

நாம் அதற்கு தக்க பதிலடி கொடுத்ததோடு இராமனையும் இராமாயணத்தையும் டோஸ்-1 டோஸ்2 என்று வரிசையாக பதிலடி கொடுத்தோம்.
அது தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிள்ளையார் ஊர்வலத்தின் நோக்கத்தை விளக்கி பிள்ளையார் ஊர்வலம் நடத்தினால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? என்று கேள்வி எழுப்பி துண்டறிக்கை வெளியிட்டோம். அதனை அறிவு நாணயத்தோடு எதிர்கொள்ள வக்கற்ற ஆர்எஸ்எஸ் கூட்டம் பிள்ளையார் ஊர்வலம் நடத்தினால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருகிறதோ இல்லையே இப்படி இந்துமதக் கடவுளர்களைத் தாக்கி நோட்டீஸ் போடுவதால் கூலி வரும் என்று நோட்டீஸ் போட்டார்கள். அதற்கு நாம் மறுப்பு சொல்ல அதனை எதிர்கொள்ள முடியாமல் தந்தை பெரியாரைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் இழிவான பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டது ஆர்எஸ்எஸ்ஃ

அவை அனைத்துக்கும் நாம் பதில் சொல்லி அவர்களது யோக்கியதையைக் கிழித்தவுடன் அதற்குப் பிறகு நமக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்துகொண்டது காவிக்கும்பல்.

நமது வாதங்களையும் அதற்கு ஆர்எஸ்எஸ் வெளியிட்ட துண்டறிக்கைளையும் சேர்த்து இந்துத்வா கும்பலின் ந்ச்சு விதைக்கு பதிலடி  என்று புத்தகமாகப் போட்டோம். புத்தகம் வெளியிட்ட ஒரு சில நாட்களிலேயே அனைத்து புத்தகளும் விற்றுத் தீர்நதுவிட்டது.

இவ்வாறு ஆர்எஸ்எஸ் சின் வண்டவாளஙகளை நாம் அம்பலப்படுத்தியது பெல் ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நம்முடைய வெளியீடுகளைப் படிப்பதற்கு தனித்தனியே வாசகர் வட்டம்போல் தோழர்கள் ஒன்றுகூடி அதிலுள்ள கருத்துக்களை விவாதித்து தீர்வு கண்டனர் என்பது தனிச்சிறப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக