செவ்வாய், 13 டிசம்பர், 2016

தேர்தலில் நிக்காம பதவிக்குப் போகாம செய்த பல சாதனையில மேலும் ஒன்னு.


மத்த சங்கமெல்லாம் தேர்தலில் நிக்கறவங்க. பதவிக்குப் போறவங்க. ஆனா திதொக தேர்தலில நிக்காமலே பதவிக்குப் போகாமலேயே இந்த நிறுவனம் நல்லா இருக்கனும். இந்த நிறுவனத்தில இருக்கிற அனைவரும் நிம்மதியா இருக்கனும். தமிழர்களுடைய உரிமை காப்பாத்தப்படனும்னு குரல் கொடுத்து வருகிற இயக்கம்.

அது தேர்தலில் நிக்காம பதவிக்குப் போகாம செய்த பல சாதனையில மேலும் ஒன்னு.

நம்ம நிறுவனம் தமிழ்நாட்டுக்கு காமராசர் அவர்கள் கொண்டு வந்ததற்குக் காரணமே தமிழர்கள் வேலைவாய்ப்புப் பெறனும், தமிழ்நாடு வளம்பெறனும் என்பதற்காகத்தான். அப்படிக் கொண்டு வரப்பட்ட நிறுவனத்தில முதல் பொதுமேலாளரா ஒரு மலையாளியப் போட்டாங்க. அப்போ பெரிய பெரிய அதிகாரிங்களிலே இருந்து அன்ஸ்கில்டு தொழிலாளி வரைக்கும் பூராவும் மலையாளியாவே இருந்தாங்க.

அப்போ தந்தை பெரியார் அவர்கள் இப்போ நம்ம பாய்லர் பிளான்ட் போலீஸ் ஸ்டேசன் இருக்கிற இடத்திலே வந்து கூட்டம்போட்டு அந்த மலையாளி ஆதிக்கத்த எதிர்த்துப் பேசினாரு. மலையாளி ஆதிக்கம் ஒழியனும். தமிழர்கள் வேலைவாய்ப்பில் அதிகம் இடம் பெறனும். இல்லேன்னா நானே வந்து போராடுவேன்னு குரல் கொடுத்தாரு.

அப்போ இத்தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்துதான் இந்த நிறுவனத்ததுக்கு ஆட்கள் எடுக்கப்படனும்னு உத்தரவு போட்டாரு. அதுக்குப் பிறகுதான் இங்கே தமிழர்கள் அதிகமா வேலைக்கு வந்தாங்க.
1984க்குப் பிறகு இங்கே வேலைவாய்ப்பு அதிகம் இல்லே. கிட்டத்தட்ட 2000 க்குப் பிறகுதான் இங்கே பொறியாளர்கள் மட்டும் பணியில் அமர்த்தப்பட்டாங்க.

அப்போது மத்தியிலே பிஜேபி அரசாங்கம் இருந்தது. அதைப் பயன்படுத்தி முழுவதும் வடநாட்டுக் காரங்களாகவே பொறியாளரா நியமனம் செய்யப்பட்டாங்க. 2002,2003,2004 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஒரு தமிழர்கூட பொறியாளரா நியமிக்கப்படல. அப்போ திதொக என்ன செய்ததுன்னா அந்த மூன்று ஆண்டுகளின் பொறியாளர் பட்டியலை எடுத்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்களிடம் கொடுத்தது. அந்தப் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழர் பெயர் இல்லை. எல்லாம் சட்டர்ஜி, முகர்ஜி,பானர்ஜி, டிக்கா, முக்கா, ராவ் என்று எல்லாமே தமிழர் அல்லாத பெயர்களாகவே இருந்தது.

இதைப் பார்த்த உடனேயே தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் ஒரு கண்டன அறிக்கையை விடுதலையில் எழுதினார்கள். அது இங்கே திதொக வெளியிட்ட அதே அறிக்கை. அதனை அவருடைய பெயராலே அவுருடைய கையெழுத்தைப் போட்டு வெளியிட்டு நானே வந்து பெல்லில் போராடுவேன் என்று அறிவித்தார். அதன்படி 2004 மார்ச் மாதம் 3ந்தேதி திருச்சி அண்ணா சிலை அருகே மாவட்;ட தி.க மூலம் மாnரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பெல் திதொக சார்பாக பெல் பயிற்சிப்பள்ளி அருகில் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.  

அதுவரைக்கும் நம் நிறுவனம் அகில இந்திய அளவில் உள்ள நிறுவனம். அதில் தமிழர்களுக்கு மட்டும் வேலை கேட்பது குறுகிய கண்ணோட்டம் என்ற பேசி வந்த பங்குபெறும் சங்கங்கள் நம்முடைய போராட்டத்தால் ஏற்பட்ட எழுச்சியைப் பயன்படுத்தி தமிழர்கள் அனைவருக்கும் வேலை தராவிட்டாலும் பரவாயில்லை. நமது ஊழியர்களின் வாரிசுகளுக்காவது வேலை தாருங்கள் என்று கோரிக்கை வைத்ததன் விளைவாக எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற நம் தொழிலாளர்களின் பிள்ளைகள் 18 பேர் பொறியாளரா நியமனம் பெற்றாங்க.

அவர்களெல்லாம் இப்போது சீனியர் எஞ்சினியரா டெபுடி மேனேஜரா இருக்கிறாங்க. அவங்களுக்கு இந்த வரலாறெல்லாம் தெரிகிறதோ இல்லையோ அவர்களுடைய பெற்றோர்கள் பல பேர் அப்பொழுதே நம்மிடம் நேரில் வந்து என் மகன் இங்கே வேலை பெறுவதற்கு உறுதுணையாக போராடியது திதொக தான். அந்த நன்றியை மறக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் வேணும்னா  நம்ம நிறுவன மீடியா ஸ்கேன்ல 2004 மார்ச் 3ää4ää5 ஆகிய தேதிகளில் அப்பொழுது வந்த பத்திரிகைச் செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கு. அதனை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற்றுத் தெரிந்துகொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக