செவ்வாய், 27 டிசம்பர், 2016

( அனைத்து சாதியினருக்கும்) பள்ளிக்கல்வி கிடைக்கவில்லை?

அந்தக் காலத்தில் ஏன் எல்லோருக்கும் ( அனைத்து சாதியினருக்கும்) பள்ளிக்கல்வி கிடைக்கவில்லை? அப்படி என்னதான் அக்கால பள்ளிக் கல்வியில் சிறப்பம்சம் இருந்தது? என்ன பாடங்கள் சொல்லித்தரப்பட்டன?*
1800 களில் நிலவிய கல்விக்கூடங்களில் கற்பிக்கப்பட்ட ஆரம்பக் கல்வியின் அடிப்படையே நல்லொழுக்கத்தையும், சமயத்தையும், சனாதான தர்மத்தையும் பேணும் ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதையும், அதற்கு சாதி விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதேயாகும். அந்த காலத்துக் கல்விமுறையில் அறிவியலுக்கும், வரலாறுக்கும் இடமில்லை.
பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகும் இந்நிலை மாறவில்லை. மார்ச் 10, 1826ல் ஜார்ஜ் ஹேயன் என்பவர் செயலாளராக இருந்த பிரிட்டிஷ் அரசின் பாடநூல் நிறுவனத்தின் மூலம் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டன. அதனை தயாரித்தவர்கள் இந்தியர்களே ஆவர். அப்படி என்ன பாட நூல்கள் இருந்தன தெரியுமா?
1. விஷ்ணுவைத் துதித்து பாடம் கற்றல் ( அரிச்சுவடி அல்லது நெடுங்கணக்கு)
2. வரிக்குவரி பாடம்
3. ஆத்திச்சூடி
4.கொன்றைவேந்தன்
5. பள்ளிப்பிளை சிந்து
6. பிளையார் துதி
7.நெல் இலக்கம் ( தானியக் கணக்கு)
8.பெருங்குழி ( பெருக்கல் வாய்ப்பாடு)
9.சிறு குழி (வகுத்தல் வாய்ப்பாடு)
10. திவாகரம் 12 ( கடவுள், மனிதன், விலங்கு பற்றியது)
11. மண்டல புருஷ நிகண்டு
12. கோவிந்த சதகம்
*13.மணவாள நாராயன சதகம் ( நால்வருண தொழில் பேதம்)*
14.திருக்குறள்
15. பொன்னிலக்கம்
16.நைடதம்
இவைகளிலிருத்தது நடத்தப்பட்டதே ஆரம்பக் கல்வியின் பாடங்களாகும்.
இந்தக் கல்விமுறையில் அறிவியல், வரலாறு போன்ற எந்த பாடத்திட்டங்களும் இல்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களாகவோ, குருகுலக் கல்வி முறையாகவோ இருந்தன. அனைத்து (சாதி) மக்களுக்கும் கல்வி கிடைக்கவில்லை.
இந்தப் பாட வரிசையில் இடம்பெற்ற
*13.மணவாள நாராயன சதகம் ( நால்வருண தொழில் பேதம்)* என்ற நூல் சாதிக்கேற்ற தொழிலைச் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது.
இப்படி சாதி வேற்றுமை பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் என்ன நியாயத்தை கற்றுத் தந்திருக்கமுடியும்?
நன்றி-Mulnivasi.
Like
Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக