புதன், 28 டிசம்பர், 2016

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!


‘‘யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும்இ ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்குகிறாரோஇ
அவர் மற்ற மக்கள் யாவரும் அப்பண்புகளைப் பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

அப்பேர்ப்பட்டவரை மக்கள் உணரும்படிச் செய்யவேண்டும்.

அவரின் உயரிய பண்புகளையும்இ சேவைகளையும் மற்ற மக்களும் பின்பற்றி நடக்கும் வண்ணம் செய்யவேண்டும்.

அதற்கென்று அவரின் குணங்களை மக்கள் பார்த்துத் தமது வாழ்க்கையில் பின்பற்றி வந்த தகாத காரியங்களை விட்டொழித்துத் திருந்தி வாழவேண்டும்.

அதற்காக இவரைப் பார்த்தவுடன் அவரின் உயர்ந்த பண்புகள் யாவும் உதித்து அதனைப் பின்பற்றச் செய்யவேண்டும் என்பதற்காகவே படத்திறப்பும்இ சிலை திறப்பும் ஆன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.’’

- இவ்வாறு தந்தை பெரியார் கூறியுள்ளார்.

பொதுவாக தந்தை பெரியார் கூறியிருந்தாலும்இ இது தந்தை பெரியார் அவர்களுக்கே பொருந்தக் கூடியதாகும். இதனைப் படிக்கும் ஒவ்வொருவர் அகக் கண்ணிலும் தந்தை பெரியார் அவர் களின் உருவமே நிழலாடும்.

பண்பு என்று சொல்லும்பொழுது - புரட்சிக்கவிஞர் சொன்னாரே - தந்தை பெரியார்பற்றி ‘‘மிக்க பண்பின் குடியிருப்பு’’ என்றுஇ அந்த வரி நினைவுக்கு வருமே!
சேவைகளை மதிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர் கள் கூறும் வரியைப் படிக்கும்பொழுது - புரட்சிக்கவிஞர் கூறிய ‘‘தொண்டு செய்து பழுத்த பழம்‘’ என்ற வரி நினைவுக்கு வந்தே தீரும்.

மனிதனாக இருப்பதே பிறருக்குத் தொண்டு செய்வதே என்பது தந்தை பெரியார் அவர்களின் செழித்த சிந்தனையாகும்.

‘‘மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவேஇ அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல்புரிவதுதான் மனிதத் தன்மை’’ (21.7.1962) என்று தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

95 வயதிலும் மூத்திர வாளியைச் சுமந்து கொண்டு கடைசி நிமிடம்வரை பாழ்பட்டுப் போன திராவிடர் சமுதாயத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் தலைவரின் நினைவு நாள் இந்நாள் (43 ஆம் ஆண்டு).

அவர் வாழ்ந்த காலத்தைவிடஇ மறைந்த இந்தக் காலகட்டத்தில் அதிகமாக நினைக்கப்படுகிறார் - இன்னும் சொல்லப்போனால் தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை.

அதுவும் மத்தியில் இந்துத்துவா வெறி கொண்ட ஓர் ஆட்சி நடந்துகொண்டுள்ளது. தங்கள் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனீயத்துக்குப் புத்துயிரூட்டிஇ மனுதர்மக் கொடியை ஏற்றிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறது.

செத்தொழிந்து போன சமஸ்கிருதத்தைப் பாடத் திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்பது எதைக் காட்டுகிறது? குருகுல முறையைப் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதன் பின்னணி என்ன?

தேசிய புதிய கல்விக் கொள்கை - 2016 என்பது நவீனக் குலக் கல்வித் திட்டம்தானே! இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்ப்பதில் முன் வரிசையில் தமிழ் மண் மார்தட்டி நிற்கிறது என்றால் காரணம் - இது தந்தை பெரியார் அவர்களால் செப்பனிப்பட்டது என்பதுதானே!

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைச் சித்தாந்தத்தை செயல்படுத்த முனைகிறார்கள் என்கிறபோது - யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும்இ அந்தக் கொடும் நோயை ஒழிப்பதற்குச் சரியான அறுவை மருத்துவம் தந்தை பெரியார் கொள்கையும்இ சித்தாந்த முமே தான் என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியத் துணைக் கண்டத்துக்கே தேவைப்படும் கருத்தாகி விட்டது. அதன் எதிரொலியாக இந்தி யாவில் பல மாநிலங்களிலும் உள்ள பல்கலைக் கழகங்களிலும்இ கல்லூரிகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப் படுகிறதுஇ நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது எதனைக் காட்டுகிறது?

சென்னை அய்.அய்.டி.இயில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டபோதுஇ பார்ப்பன அதிகாரவர்க்கம் தடை செய்தது. அதனை நிலை நிறுத்த முடிந்ததா? தடை உடைபட்டதே! சென்னை கிண்டியில் அவர்கள் தடை செய்ததன் விளைவு - இந்தியாவில்  பல மாநிலங்களில் உள்ள அய்.அய்.டி.இகளில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு விட்டதே!

எதிர்க்க எதிர்க்கத்தான் தந்தை பெரியார் கொள்கை தலை நிமிர்ந்து வெற்றிக் கொடியை நாட்டும். வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டுதானே தந்தை பெரியார் வெற்றி பெற்றார்.

விநாயகனை உடைத்ததுமுதல் இந்திய அரசமைப்புச் சட்டத் தையே கொளுத்தவில்லையா? இந்தச் செயல் வேறு எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது?
பிரச்சாரம் - போராட்டம் என்ற இரு அணுகுமுறைகளைத் தந்து சென்றுள்ளார் அந்தப் புரட்சித் தந்தை.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டு விட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும்இ வேலை வாய்ப்பிலும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

மதச் சார்பின்மைஇ சமூகநீதி என்னும் குடையின்கீழ் இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள்இ முற்போக்குவாதிகள்இ இடதுசாரிகள் ஒன்றிணைந்து ‘பெரியார் வாழ்க!’ என்று குரல் கொடுத்துத் தீரவேண்டிய காலகட்டம் இது.

அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாளில் நமது செயல் பாட்டில் கூடுதலான வேகமும்இ எழுச்சியும் இருக்கப்போவது உறுதி! அதற்கான பழுத்த சூழ்நிலையை நமது எதிரிகள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக