வெள்ளி, 9 டிசம்பர், 2016

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சாதனை

பெல் நிறுவனத்தில் ஊரகத்தில் வீடு ஒதுக்கீட்டுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளது.

காரணம் அரசுத்துறை பொதுத்துறைகளில் வேலைக்கு வரும்பொழுது அவர்கள் குடியிருக்க வீடுகள் கிடைப்பது மிகவும் கடினம். வாடகைக்கு வீடு கேட்டுப் போனால் உயர் ஜாதிக்காரர்கள் அவர்களுக்கு வீடு தரமாட்டார்கள். முதலில் என்ன ஜாதி என்று கேட்பார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னால் அவர்களுக்கு வீடு தரமாட்டார்கள்.

அப்படியே ஜாதியைக் கேட்காமலே வீடு வாடகைக்குத் தந்தாலும் நாளடைவில் அவர்கள் ஜாதியைத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு பல இடையூறுகளைக் கொடுத்து அவர்களைக் காலி செய்ய வைத்து விடுவார்கள்.

வீட்டு சொந்தக் காரர் ஒத்துக் கொண்ட வீடு வாடகைக்குத் தந்தாலும் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் அவர்களுக்கு ஏதாவது இடையூறு செய்து அவர்களைக் காலி செய்ய வைத்து விடுவார்கள்.

இதுபோன்ற இடைஞ்சல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கமும் அரசு நிறுவனங்களும் கட்டுகின்ற ஊரகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்களே தவிர வேறு ஒன்றும் காரணம் கிடையாது.
இதற்காக பணியில் சேரும்போதே இதற்காகத் தனிப்பட்டியல் தயார் செய்யப்பட்டு வீடு வழங்கும்போது அர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அப்படி வீடு வழங்கப்பட்ட பிறகு அவர்களைப் பற்றிய தகவல்கள் தொழிலகத்தின் கணிணியில் பதிவுசெய்யப்படும். ஊரகத்தில் குடியிருப்போரைப் பற்றிய தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்படிப் பார்க்கிறபோது தாழ்த்தப்பட்வர்கள் குடியிருக்கும் வீடுகளில் மட்டும் பிராக்கெட்டில் SC என்று குறிப்பிட்டிருக்கும்.

இதனைப் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் பார்த்தால் அந்த தாழ்த்தப்பட்ட தொழிலாளியைப் பற்றி தாழ்வாக எண்ணக் கூடிய நிலைமை இருந்தது.

நமது ஊழியர் சாதி வித்தியாசம் பார்க்காதவராய் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தார் அந்த துவேசத்தைக் கடைப்பிடிக்க வாய்ப்பு உண்டு. அந்தக் குடும்பத்தவர் அதனைக் கடைப்பிடிக்காவிட்டாலும் அவர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

அத்துடன் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியிருக்கும் ஊழியர்களுக்கே இதுபற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகும்.

இதுபற்றி ஏராளமான தொழிலாளர்கள் நம்மிடம் புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகாரினை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தபொழுது சட்டப்படிதான் நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.
சட்டப்படி என்றால் அது வீடு ஒதுக்குவதற்குத்தான். இந்த வீட்டில் குடியிருப்பவர் தாழ்த்தப்பட்டவர் என்று பக்கத்து வீழட்டுக்காரனுக்குத் தெரிவிக்க அல்ல. ஜாதி பக்கத்து வீட்டுக் காரருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களுக்கு உரிய சலுகையை வழங்குவதற்காக நிர்வாகம் அலுவலக ரீதியாக கோப்புக்களைப் பராமரிக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அவர்கள் ஜாதியை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று எடுத்துச் சொன்னோம்.

ஊரகத்தில் என்னெ;ன பிரச்சினைகளெல்லாம் இதனால் ஏற்படுகிறது என்பதை எடுத்துச் சொன்ன பிறகு அதன் நியாயத்தை உணர்ந்த நிர்வாகம் பொதுவான தகவலில் ஜாதி பற்றிய தகவலை எடுத்து விட்டது.

இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாய ஊழியர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனை வேறு எந்த சங்கமும் சுட்டிக் காட்டவில்லை. தாழ்த்தப்பட்டோர் அமைப்புக்களும் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

 மாறாக ஜாதி பற்றி தகவல் வெளிப்படையாக இருந்தால்தான் தங்கள் அமைப்புக்களுக்கு ஆள் சேர்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.

உங்களுக்கு ஆள் சேர்கக் வேண்டும் என்பதற்காக அவர்கள் இடையூறு அனுபவிக்க வேண்டுமா? என்று கேட்டபிறகு அவர்களால் மறுபேச்சு பேச முடியவில்லை.

இது திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சாதனையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக