வெள்ளி, 2 டிசம்பர், 2016

மனிதவள மேம்பாட்டு மையம்



மனிதவள மேம்பாட்டு மையம் முன்பு பயிற்சிப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வந்தது. அப்பொழுது அப்ரண்டிஸ்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டது. காலையில் தியரி வகுப்பும் மாலையில் பிராக்டிகல் வகுப்பும் நடைபெறும். நல்ல பயிற்சி பெற்று இங்கு பணியில் சேர்ந்தார்கள்.

மனிதவள மேம்பாட்டு மையம் என்று பெயர் வைத்த பிறகு இரண்டு பயிற்சியும் கிடையாது. முன்பு ஒவ்வொரு வகுப்பும் எடுப்பதற்குத் தனித்தனி ஆசிரியர்கள் இருந்தார்கள். பிறகு ஆசிரியர்களே இல்லை. டிப்ளமா படித்த நம்முடைய தொழிலாளர்களில் சிலர் ஆர்வத்துடன் தாமாக முன்வந்து வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அது படிப்படியாகக் குறைந்து மாதத்திற்கு நான்கு வகுப்புகள் மட்டும் என்று நடந்தது. பிறகு மாதம் இரண்டு வகுப்புகளாகிää பின்னர் ஒரு வகுப்பாகி இப்பொழுது ஆணியே புடுங்கவேண்டாம் என்பதுபோல வகுப்பே வேண்டாம் என்று முடிவு செய்து யாருக்கும் பயிற்சியே அளிப்பதில்லை.

அந்த இளைஞர்கள் எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் மென்பவர் காண்ட்ராக்ட் போல நடத்தப்பட்டு பெயிண்;ட் அடிக்கவும்ää குப்பை அள்ளவும், எடுபிடிகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும்.

நம் நிறுவனத்திற்கு ஆள் எடுக்கும்போதும் அவர்களுக்கு முன்னுரிமை தருவதில்லை. பிஹெச்இஎல்லில் அப்ரண்டிஸ் முடித்தால் நமக்கு ஏதாவது முன்னுரிமை தருவார்கள் என்று எதிர்பார்த்து இங்கு வரும் இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் தேர்வில் வடநாட்டுக்காரர்களும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நிறைய வருகிறபோது அவர்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் டாண்டாண்ணு பதில் சொல்றான்கள். நம்ம பசங்களுக்கு எதுவுமே தெரிவதில்லை என்று மிகவும் கூலாக பதில் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவனின் காலை உடைத்து விட்டு இவனால் சரியாக ஓடமுடியவில்லை@ அதோ பார் அவன் எவ்வளவு வேகமாக ஓடுகிறான் என்று சொல்லுவதைப்போல இவர்களுக்குப் பயிற்சியே கொடுக்காமல் தகுதி இல்லை திறமை இல்லை. அதனால் தமிழனுக்கு வேலை தராமல் பிற மாநிலத்துக்காரனுக்கு வேலை தரவேண்டி உள்ளது@ எங்களுக்கு தகுதி – திறமை உள்ள ஆள்தான் தேவையே தவிர அவன் தமிழனா? மலையாளியா? இந்திக்காரனா? என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று மிகவும் சாமர்த்தியமாகப் பதில் சொல்லி ஏமாற்றுகிறது பெல் நிர்வாகம். இது மோசமான மனித உரிமை மீறலாகும். தமிழனை இழிவுபடுத்துகின்ற செயலுமாகும்.

இளைஞர்களின் ஆற்றலை சுரண்டி ஏமாற்றும் பெல் நிர்வாகம்தான் தன்னலமற்ற நூறு இளைஞர்களைத் தந்தால் இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று சொன்ன விவேகானந்தருக்கு மலர் வெளியிடுகிறது. இது எவ்வளவு பெரிய முரண்பாடு? இந்த சுரண்டல் மனுதர்மத்தின் அடிப்படையில்தானே தவிர விவேகானந்தரின் சிந்தனையால் அல்ல! எனவேää எந்தப் பெயரில் வந்தாலும் ஆதிக்கவாதிகளின் எண்ணம் முழுக்க மனுதர்மத்தின் மீதே தவிர உழைக்கும் மக்களுக்கானதல்ல! விவேகானந்தர் பெயரைச் சொல்வது ஏமாற்று வேலையே!

எனவே நிர்வாகமே!  விவேகானந்தருக்கு மலர் வெளியிடுவதை நிறுத்தி அப்ரண்டிஸ்களுக்கு உரிய பயிற்சியை அளித்து பெயருக்குத் தகுந்தாற்போல் மனிதவள மேம்பாட்டு மய்யமாகச் செயல்படு! இல்லையேல் பயிற்சிப்பள்ளியை இழுத்து மூடு!!
9வா டீயவஉh ஊழியர்களுக்காகக் குரல் கொடுப்பதாக நடிப்பவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் கண்டு கொள்வதில்லையே! ஏன்? ஓ! இவர்களுக்கு ஓட்டு இல்லை! உறுப்பினராகவும் ஆக்க முடியாது! சந்தாவும் வாங்க முடியாதுதானே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக