வெள்ளி, 2 டிசம்பர், 2016

திராவிடர் தொழிலாளர் கழகமும் ஆர்டிசான் பயிற்சி வகுப்பும்

ஆர்டிசான் பயிற்சி வகுப்பு
பெல் நிறுவனத்தில் 1984க்குப் பிறகு புதிய வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. 2005க்குப் பிறகுதான் ஆர்டிசான் நியமனங்கள் நடைபெற்றன. அதில் வடநாட்டார் அதிகம்

தேர்வானார்கள்.தமிழர்கள் சிறுபான்மையினராகக் கூடிய வாய்ப்புகள் உருவாகின. இதனைப் பயன்படுத்தி இங்கு ஒரு சிலர் பயிற்சி வகுப்பு நடத்துகிறோம் என்ற பெயரில் பயிற்சியாளர்களிடம் ஏராளமான தொகையை வசூல் செய்து வணிகமயமாக்கினர். சில தொழிற்சங்கங்கள் இலவசமாக நடத்தினர். ஆனால் பாரதீய மஸ்தூர் சங்கம் மட்டும் அதை வேறு நோக்கத்தில் பயன்படுத்த ஆரம்பிதது.

பிஎம்எஸ் உறுப்பினரால் சிபாரிசு செய்யப்பட்டவர் மட்டும்தான் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் சொல்லக்கூடிய கட்டணத்தை கொடுக்க வேண்டும். பயிற்சிக்குப்பின் இங்கு தேர்வாகிவிட்டால் தங்கள் சங்கத்தில்தான் சேர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வகுப்பு எடுத்தார்கள். இடையிடையே ஆர்எஸ்எஸ் சின் நச்சுக் கருத்துக்கள் மாணவரிடையே போதிக்கப்படும்.

அப்பொழுது நடைபெற்ற தேர்வில் குறிப்பிட்ட ஆர்டிசான்கள் வெற்றி பெற்றதை யடுத்து நாஙகள் இப்படியெல்லாம் சேவை செய்கிறோம். அதனால் எங்கள் சங்கத்தில் சேருங்கள் என தொழிலாளர்களிடம் ஏமாற்றி வந்தனர்.

அவர்களிடம் பயிற்சிபெற்று பணியில் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் சங்கத்தில் சேராவிட்டால் அவர்களை மிரட்டுவது இன்னும் நீ டெம்ப்பரவரிதான். எங்கள் சங்கத்தில் சேர்ந்தால்தான் உன்னை நிரந்தரமாக்கச் சொல்வோம். இல்லையென்றால் உன் வேலைக்கே உலை வைக்க வேண்டியதிருக்கும் என மிரட்ட ஆரம்பித்தனர்.
இது நம்மிடம் புகாராக வரவே அவர்களது சூழ்ச்சியை நாம் அம்பலப்படுத்தினோம். அதற்கு பதில் சொல்வதாக நினைத்து ஏதேதோ உளறினார்கள். கடைசியி;ல் சவால் விட்டார்கள். உங்களால் பயிற்சி வகுப்பு நடத்த முடியுமா? என்று.

அந்த சவாலை ஏற்று நாமும் பயிற்சி வகுப்பு நடத்த எண்ணி இருந்த நெரத்தில் நண்பர் சுந்தர் அவர்களும் முத்துக்குமார் அவர்களும் தாமாக முன்வந்து வகுப்பு நடத்த ஒப்புக் கொண்டார்கள். அவர்களுடன் சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு இலவச பயிற்சி வகுப்பு துவக்கினோம். அதில் முதல் தலைமுறையைச் சேர்ந்த ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட 150 பேருக்கு மேல் அதில் சேர்ந்து படித்தார்கள்.

 அவர்களில் கிட்டத்தட்ட முப்பது பேர் இங்கு பணியில் அமர்ந்தார்கள். இங்கு சேர முடியாதவர்கள்கூட மற்ற நிறுவனங்களில் நடைபெற்ற தேர்வில் கலந்துகொண்டு அங்கு தேர்வானார்கள். எல்லாம் நாம் கொடுத்த பயிற்சியே காரணம். அவர்களில் பெரும்பாலோர் கட்டணம் செலுத்தி படிக்க இயலாத உண்மையான ஏழைகள்தான் அதிகம்.

பயிற்சி சிறப்பாக முடிந்த பிறகு பயிற்சி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் பயிற்சி அளித்த ஆசிரியப்பெருமக்களுக்குப் பாராட்டி பரிசளித்தும் பேசினார். பொதுமேலாளர் திரு சவுந்திரராசன்ää கூடுதல் பொதுமேலாளர் திரு மோகன் ஆகியோரும் அவ்விழாவில் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினர்.

அய்யா கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் பேசும்போது பெரியார் இயக்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வே சான்று என்று பாராட்டிப் பேசினார்.
இது நம் தொழிற்சங்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக