சனி, 17 டிசம்பர், 2016

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி



தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி ஜாதியை ஒழிக்க முடியாது. நமது நாட்டில் சமத்துவம் வராது என்று அடித்துச் சொல்கிறார்.

இவர் RSS ன் குருநாதராகச் செயல்படக் கூடியவர். இவர்தான் விவேகானந்தர் ரதத்தை பள்ளிகளுக்குக் கொண்டு செல்கிறார். அந்த விவேகானந்தர் ஜாதி அழியக்கூடாது. ஜாதியை அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார். நம்மBMS போற்றிப் புகழும் திலகர் இந்த நாட்டிற்கு மனுதர்மம்தான் சட்டமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

நம்ம BMS என்ன சொல்கிறதென்றால் அரசனுக்கு சட்டம் இயற்றும் உரிமை இருக்கக் கூடாது. அந்த அதிகாரம் ரிஷிகளிடத்திலும் முனிவர்களிடத்திலும் விடப்பட வேண்டும் என்கிறது.(ஆதாரம் அக் 2001BMS சங்கமடல்)

அந்த ரிஷிகளும் முனிவர்களும் எழுதிய ஸ்ருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் திலகர் சொல்லும் மனுதர்மத்திலும் மனித குலத்தை நான்கு வருணங்களாகப் பிரித்துள்ளனர். அதில் பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன் தொடையில் பிறந்தவன் வைசியன்ää காலில் பிறந்தவன் சூத்திரன் என்று கூறப்பட்டுள்ளது. இது எதிலும் சேராத அய்ந்தாவதாக ஒரு பிரிவு இருக்கிறது. அது பஞ்சமன் என்று அழைக்கப்பட்ட பள்ளர் பறையர்ää சக்கிலியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்கள். அவர்கள் எங்கே பிறந்தார்கள் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

தந்தை பெரியாரிடத்தில் ஒருவர் கேட்டார் இவர்கள் எங்கே பிறந்தார்கள் என்று. அதற்கு அவர் சொன்னார் “இவர்கள்தான் உண்மையாக மனிதன் எங்கே பிறக்க வேண்டுமோ அங்கே இயற்கையாக முறையாக அவர்கள் அப்பா அம்மாவுக்குப் பிறந்தவர்கள்” என்றார்.

சூத்திரன் என்பவர்கள் யாரென்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று மனுதர்மம் அத்தியாயம் எட்டு சுலோகம் 415 சொல்கிறது.

இதனால்தான் நம்முடைய மக்களை அது ஜமீன்தாராக இருந்தாலும் மிட்டா மிராசாக இருந்தாலும்; அவர்களை அய்ந்து வயதுப் பார்ப்பனச் சிறுவன் டேய் குப்புசாமிää டேய் முத்துசாமி என்று ஏகவசனத்தில் கூப்பிட்டான். சூத்திரப்பயலே தள்ளிப்போடா என்றான். இதைப் பார்த்து யாருக்கும் ரோஷம் வரவில்லை. மாறாக தங்களுக்குக் கீழே பஞ்சமர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டு அய்ந்து வயது பிற்படுத்தப்பட்ட சிறுவன் அறுபது வயது தாழ்த்தப்பட்ட முதியவரை வாடா கருப்பாää வாடா முனியா என்று அழைத்தான். இது அவமானம் இல்லையா? இந்த அவமானத்தை ஒழிக்கத்தான் தந்தை பெரியார் தன்மான இயக்கம் கண்டார்.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்றார் பெரியார். ஆங்காங்கே அடித்தார்கள். பார்ப்பான் சூத்திரன் என்று அழைப்பதை நிறுத்தினான். சூத்திரப்பட்டம் ஒழிந்தது. ஆனால் அந்த மிட்டா மிராசுகள் ஜமீன்தார்கள் தங்களுக்குக் கீழே பள்ளன் பறையன் இருக்க வேண்டும் என்றார்கள். பெரியார் அவர்களைப் பார்த்துக் கேட்டார் “உங்களைப் பார்ப்பான் சூத்திரன் என்று அழைக்கக் கூடாது என்கிறீர்களே, உங்களுக்குக் கீழே தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களே! உங்களது சூத்திரப்பட்டம் போக வேண்டும் என்றால் அவர்களது பறையன் பட்டமும் போக வேண்டும். பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது” என்று சொன்னார். அதனால் பள்ளன் பறையன் பட்டமும் ஒழிந்தது. இன்று ஜாதியைப்பற்றிப் பேசும் துணிச்சல் யாருக்கும் இல்லை.

இப்படி தந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட மனுதர்மத்தை சூத்திரப்பட்டத்தை பறையன் பள்ளன் என்ற பட்டத்தை மீண்டும் கொண்டுவரவே RSS சங்பரிவார் துடிக்கிறது. அதனுடைய வெளிப்பாடே குருமூர்த்தியின் இந்த ஆணவப் பேச்சு. அந்த RSS சினுடைய வால்தான் BMS. அந்த அமைப்புக்களைத் தூக்கிப்பிடிக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சகோதரர்களே! இவர்கள் சொல்லும் மனுதர்மம் சட்;டமானால் மறுபடியும் பார்ப்பான் நம்மை சூத்திரன் என்று அழைக்க மாட்டானா? பஞ்சமன் என்று ஒதுக்கி வைக்க மாட்டானா? அந்த சூத்திர பஞ்சமப் பட்டத்தை மீண்டும் நம் மக்கள் சுமக்க வேண்டுமா? சிந்திப்பீர்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக