புதன், 7 டிசம்பர், 2016

எதிர்நீச்;சல் போட்டு வளர்ந்த இயக்கம்தான் திராவிடர் தொழிலாளர் கழகம்.

நமது தொழிலகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. அந்த சங்கங்களெல்லாம் நிர்வாகத்துடன் சண்டை போடக் கூடிய சங்;கங்களும் இருக்கின்றன. அதிகாரிகளை கேவலமாகப் பேசிய சங்கங்களும் இருக்கின்றன.

ஆனால் அந்த சங்கங்களுக்கெல்லாம் தடை என்பது இருக்காது. திராவிடர் தொழிலாளர் கழகத்துக்குத்தான் இனி எதிர் காலத்தில் உங்கள் சங்கத்துக்கு வாயிற்கூட்டம் நடத்த அனுமதி தரப்பட மாட்டாது என்று நிர்வாகம் கடிதம் கொடுத்துள்ளது. இரண்டு முறையும் அதனை முறியடித்து மறுபடியும் வாயிற்கூட்ட அனுமதி பெற்று சாதித்துள்ளோம்


இரண்டு முறை தடை செய்யப்பட்டதும் ஒரே காரணத்துக்காகத்தான். இந்து மதவெறியைப் பரப்பி வரும் ஆர்எஸ்எஸ் சையும் அதன் தொழிற்சங்கத்தையும் அம்பலப்படுத்தியதால்தான் இந்தத் தடை நமக்கு வழங்கப்பட்டது.
2000 ஆவது ஆண்டு குஜராத்தை ஆண்ட பிஜேபி அரசு ஒரு அரசு ஆணை பிறப்பித்தது. அதாவது அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ் இல் சேரலாம் என்பதுதான் அந்த அரசு ஆணை.

ஆர்எஸ்எஸ் என்பது மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு. காந்தியார் கொலையின் போதும் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி சட்டத்தின் போதும் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் ஆக மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பு நாடெங்கிலும் மதக் கலவரத்தைத் தூண்டி அதன்மூலம் வன்முறையைத் தூண்டுவதே அதனுடைய நோக்கமாகும். அதனால் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் சில் சேரக்கூடாது எனத் தடை இருக்கிறது.

அதனை மாற்றி குஜராத்தை ஆண்ட பிஜேபி அரசாங்கம் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் சில் சேரலாம் என ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் போராட்டம் அமளி துமளி நடந்தது. பாராளுமன்றமே முடங்கியது.

நாம் பொதுத்துறையாக இருப்பதால் நமது ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் சில் சேர்ந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விளக்கி வாயிற்கூட்டம் நடத்தினோம். திராவிடர் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் அவர்கள் ஆர்எஸ்எஸ் சினுடைய வரலாறு அதனுடைய கொள்கைகள் அதனால் ஏற்பட்ட காந்தி கொலை மற்றும் கலவரங்கள் மதக் கலவரங்கள் ஆகியவற்றை எடுத்துச்சொல்லி எனவே பொதுத்துறை நிறுவனமான பெல் ஊழியர்களும் ஆர்எஸ்எஸ் சில் சேரக்கூடாது என்று தெளிவாக விளக்கிப் பேசினார்.

அப்பொழுது மனிதவள மேலாண்மை நிறுவனத்தில் முழுவதும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களே நிரம்பி இருந்தனர். அதனால் நாம் பேசியதை திசைதிருப்பி நீங்கள் ஜாதி உணர்வைத் தூண்டுகிறீர்கள் என்றும் மத உணர்வைத் தூண்டுகிறீர்கள் என்றும் பொய்யான காரணத்தைக் கூறி இனி உங்;கள் சங்கத்திற்கு வாயிற்கூட்டம் நடத்த அனுமதி தரப்பட மாட்டாது என கடிதம் கொடுத்தனர்.

அப்பொழுது மனிதவள மேலாண்மைப்பிரிவில் முதுநிலைத்துணைப் பொதுமேலாளராக இருந்தவர் விக்டர் அவர்கள் ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவருடைய கவனத்துக்குச் செல்லாமலேயே நமக்கு இந்தத் தடையை விதித்தது நிர்வாகம்.

நமது சங்கத்தின் சார்பாக திரு வி;க்டர் அவர்களைச் சந்தித்து உண்மை நிலையை எடு;த்துச்சொல்லி நிர்வாகம் சொல்லி இருக்கும் காரணம் தவறானது என்பதை நிரூபித்தோம். அதன் பிறகு உண்மையை உணரந்துகொண்டு அந்தத் தடையை அவர் நீக்கினார் என்பது நமது கடந்தகால வரலாறாகும்.

அடுத்து 2012ம் ஆண்டும் அதே காரணத்தைக் கூறி மறுபடியும் நமக்கு வாயிற்கூட்ட அனுமதி இல்லை என்று பித்தலாட்டமாகக் கடிதம் கொடுத்தது மனிதவள நிர்வாகம்.

என்னவென்றால் இங்கே செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் மூன்று தேர்தலில் தோற்றுப் போனது. ஆனால் 1996ல் வெற்றி பெற்ற போது ஒதுக்கப்பட்ட அலுவலத்தை திரும்ப ஒப்படைக்காமல் தன் வசமே வைத்துக் கொண்டது.
அதனை எதிர்த்து நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் நிர்வாகமும் அவர்களைக் காலிபண்ணச் சொல்லவில்லை. அவர்களும் காலி செய்யவில்லை.

நிர்வாகத்தின் இச் செயலைக் கண்டித்தும் பிஎம்எஸ்சின் அறிவு நாணயமற்ற செயலைக் கண்டித்தும் கடுமையாக துண்டறிக்கை வெளியிட்டோம். இது தொடர்பாக கூடுதல் பொது மேலாளர் திரு மனோகரன் அவர்கள் நம்மிடம் அந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அவர்களைக் காலி செய்ய வைக்கிறேன் என்றும் அதுவரை பிஎம்எஸ் ஐப்பற்றி நீங்கள் பேசக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார. சொன்னது போலவே பிஎம்எஸ் சங்கத்துக்கு உடனடியாக அலுவலகத்தைக் காலி செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

அதனால் கோபமடைந்த பிஎம்எஸ் சங்க நிரவ்hகிகள் அப்பொழுது பொதுமேலாளராக இருந்த திரு நயினார் அவர்களையும் கூடுதல் பொதுமேலாளராக இருந்த மனோகரன் அவர்களையும் மிகவும் கேவலமாகப் பேசினார்கள். அதனால் நாமும் வாயிற்கூட்டம் போட்டு பொதுமேலாளரையும் கூடுதல் பொதுமேலாளரையும் இழிவாகப் பேசும் பிஎம்எஸ் சுக்கு நமது கண்டனத்தைத் தெரிவித்தோம்.

இதில் என்ன நடந்தது என்ற உண்மையை மறைத்து மனிதவளத்துறையிலுள்ள  ஆர்எஸ்எஸ் காரர்கள் நீங்கள் பிஎம்எஸ் சைப்பற்றிப் பேசக்கூடாது என்று சொன்னீர்கள். அதை மீறி திக காரன் பிஎம்எஸ் சைப்பற்றித்தான் பேசினார்கள் என்று பித்தலாட்டமாக திரித்து சொல்லி இருக்கிறார்கள்.

இதனுடைய உண்மைத் தன்மையை உணராமல் திரு மனோகரன் ஏற்கனவே 2000த்தில் என்ன கடிதம் கொடுக்கப்பட்டதோ அதனையே மறுபதிப்பு செய்து நமக்கு வாயிற்கூட்டம் நடத்த இனிமேல் அனமதியில்லை என்று கடிதம் கொடுத்தார்.

அதன் பிற கூடுதல் பொதுமேலாளரையும் பொதுமேலாளர் திரு நயினார் அவர்களையும் சந்தித்து உண்மையை எடுத்துக் கூறினோம். தாழ்த்தப்பட்ட அதிகாரிகளாகிய உங்களை அவர்கள் கேவலமாகப் பேசினார்கள். அதற்கு பதிலடியாகத்தான் நாங்கள் கூட்டம் போட்டுப் பேசினோமே தவிர கடித்ததில் சொல்லியிருப்பதைப் போல நாங்கள் எதுவும் பேசவில்லை என்று எடுத்துச் சொன்னோம். இனிமேல் மனிதவளத்துறையில் உள்ளவர்களின் பேச்சை மட்டும் கேட்காமல் புலனாய்த்துறையின் குறிப்புகளையும் பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று எடுத்துச்சொன்னோம். அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து நமக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார்கள்.

இவ்வாறு எதிர்நீச்;சல் போட்டு வளர்ந்த இயக்கம்தான் திராவிடர் தொழிலாளர் கழகம்.

இதேபோல 1992ல் நமக்கு வழங்கப்பட்ட வாயிற்கூட்ட அனுமதியையும் ரத்து செய்தது பெல் நிர்வாகம். அதிலேயே நீங்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் பேசப்போகிறீர்கள். அதனால் முன்பு கொடுத்த அனுமதியை ரத்து செய்கிறோம் என்று கடிதம் கொடுத்தது. நாம் தடையை மீறி அப்பொழுது கூட்டம் நடத்தி அவர்களது சூழ்ச்சியை முறியடித்ததால் நமக்கு மீண்டும் வாயிற்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக