செவ்வாய், 18 அக்டோபர், 2016

இந்துக்கள் அனைவரும் சித்திரை 1 அய்த்தான் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறார்களா?

 கேள்வி : தமிழ் வருடங்கள் அறுபது பிறந்த கதையைத் தெரிந்தால் சொல்லுங்களேன்!
பதில்  : கேட்கவே காதுகள் கூசும். பெரியார் துவைத்துக் காயப் போட்டிருக்கிறாரே! அதை நான் வேறு சொல்ல வேண்டுமா?

    இது குமுதம் ஏட்டில் ( 10-04-2008 ) அன்று வந்த  ஒரு கேள்வி - பதில்

இப்படிக் காதுகளைக் கூசச் செய்யக்கூடிய குடலைப்புரட்டக்கூடிய கதையைக் கொண்ட ஆண்டுகள்தாம்  தமிழனின் ஆண்டின் பெயர்களா?

அடுத்தவன் மனைவியுடன் கும்மாளமிடுகிறான் கோபாலன். ஒருத்தி, ரெண்டுபேர் அல்ல அறுபதினாயிரம் பேருடன். அதில் ஒருத்தியை இரவலாகக் கொடு ஒரே ஒருநாள் உல்லாசமாக இருக்கிறேன் என்று கேட்டானாம் ஒம்போது என்று புராணங்களிலே சொல்லப்பட்ட நாரதன். நான் இல்லாத வீட்டிலுள்ள பெண்ணை வரித்துக்கொள் என்றானாம் தாராளப் பிரபு கோவர்த்தனன். அவனே ஓசிதானே! பெண்ணென்றால் போகப்பொருளாகக் கருதும் போக்குத்தானே இது? கிருஷ்ணன் இல்லாத வீடே இல்லாததால் காமவிகாரத்தில் தவித்த நாரதனின் காமத்தைத்தணித்தானாம் கிருஷ்ணன். அதில் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்தான் தமிழனின் ஆண்டுகளுக்குப் பெயர்களாம்.

இந்தக் குடலைப்புரட்டும் கலாச்சாரமும் பண்பாடும் நமக்கு வேண்டாம் என்று சொன்னால் புராணங்களில் அது மாதிரி யெல்லாம் இல்லை என்று  அதை நியாயப்படி மறுக்க வக்கற்ற கூட்டம் மதஉணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கொக்கரிக்கிறது.

மலத்தைக்கொண்டு வந்து தமிழனின் நடுவீட்டில் வைத்திருக்கிறாயே! நாறுகிறதே! அதை அப்புறப்படுத்து என்று சொன்னால் இல்லை இல்லை@ இது இந்து மலம், எவ்வளவு வாசமாக இருக்கிறது, காலங்காலமாய் உள்ளதை எப்படி மாற்றலாம் என்று ஒருவன் சொன்னால் அவனை என்ன சொல்வது?

ஸர்வஜித், ஸர்வதாரி என்பதே தமிழ் இல்லை என்கிறபோது அது தமிழனுக்குரியதாக எப்படி இருக்க முடீயும் என்று கேட்டால் அதை நியாயப்படுத்த முடியவில்லை.

உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்களாம். சித்திரை 1 தமிழனுக்கு மட்டும் புத்தாண்டா?

இந்துக்கள் அனைவருக்கும் புத்தாண்டா? உபி யிலே சித்திரை 1 அய்க் கொண்டாடுகின்றானா? மபி யிலே கொண்டாடுகின்றானா? மகாராஷ்டிராவிலே கொண்டாடுகின்றானா? அஸ்ஸாமிலே, அரியானாவிலே வங்காளத்திலே, ஏன் இந்து நாடு என்று வர்ணிக்கிறீர்களே, அந்த நேபாளத்திலே சித்திரை 1 அய்த்தான் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறார்களா?

அவர்களெல்லாம் இந்துக்கள் இல்லையா? தமிழன் மட்டும்தான் இந்துவா?
முருகன் தமிழ்க்கடவுள் என்கிறாயே! இராமன் இந்திக்கடவுளா?
தமிழ்க்கடவுள்(?) முருகனை son of lord Shiva and Parvathi என்று ஆங்கிலத்தில் போட்டிருக்கிறாயே! எவ்வளவு நக்கல்? தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறீர்களே! ஹிமாலயாவில் வசிப்பவன் எப்படி தென்னாட்டுக்குச் சொந்தக்காரனாய் இருப்பான்?

எல்லா நாட்டிலும் அவன்தான் இறைவனா? ஆப்பிரிக்காவில், உகாண்டாவில், ஆஸ்திரேலியாவில் எல்லாம் அவன்தானா?

அவன் மகன் முருகனுக்குத் தென்னாட்டை பங்குபிரித்துக் கொடுத்து விட்டானா? வடநாட்டை யாருக்கு எழுதிக்கொடுத்துள்ளான்?

இங்கே இராமன், இலட்சுமணன், கிருஷ்ணன், என்று பெயர் வைத்திருப்பதுபோல் வடநாட்டில் யாராவது முருகன், பழனிச்சாமி, வேலுச்சாமி, ஆறுமுகம், கந்தசாமி, கதிர்வேல், பழனிவேல் என்று யாராவது பெயர் வைத்திருக்கிறார்களா?

தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர்களாவது இந்தப் பெயரை வைத்துள்ளார்களா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ! தக்க பரிசளிக்கப்படும். டும். டும். டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக