புதன், 12 அக்டோபர், 2016

பெரியாரைத் தலித் விரோதியாகக் காட்டும் முயற்சி


 தாழ்த்தப்பட்ட மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம்ää நிழல் பட்டால் தோஷம் என்று யார் சொன்னார்களோ அவர்கள் இன்று தலித் மக்கள் மீது மிகவும் பாசம் உள்ளவர்கள்போல் நடிக்கிறார்கள். அவர்கள் என்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு எள்ளளவும் உதவியதில்லை. அண்ணல் அம்பேத்கர் போராடியபோது அவருக்கு எந்த ஆதரவும் காட்டியதில்லை. இன்றளவும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளாக இருப்பவர்கள் இன்று  பெரியாரை தலித்துக்களுக்கு எதிரியாகச் சித்தரிக்கிறார்கள்.

 அந்தக் கும்பல்தான் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றவர்கள். அந்தக் கும்பலின் தலைவராக இருந்த திலகர் இந்த நாட்டுக்கு மனுதர்மம் சட்டமாக ஆக வேண்டும் என்று சொன்னவர். கீழ்ஜாதி மக்கள் ஆரம்பக்கல்வி மட்டும் படித்தால் போதும். மேல்படிப்பு படிக்க ஆசைப்படக் கூடாது என்றவர். அதனால்தான் அய்அய்டிää எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்கு இன்னமும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் தகுதி திறமை இல்லாதவர்கள் போலவும் தாங்கள் மட்டுமே தகுதி திறமைக்குப் பிறந்தவர்கள் போலவும் இன்னமும் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

திலகர், பட்டேல், மாளவியா இவர்களின் வழித்தோன்றலாக சுதந்திரமடைந்த பிறகு இத்தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்ற இராஜாஜி 1952ம் ஆண்டு சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசியபோது நீங்களெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகளெல்லாம் உயர்படிப்பு படித்து விட்டால் அவர்களுக்கு எங்கிருந்து வேலை தருவது என்று கேட்டு 6000 பள்ளிகளை மூடியதோடு மீதமுள்ள பள்ளிகளில் ஒருவேளை படிப்பு ஒரு வேளை அவனவன் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று சட்டம் செய்தார்.

 அதனைக் கண்டு வெகுண்டெழுந்த பெரியார் கடுமையான போராட்டத்தில் இறங்கினார். இத்திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால் அக்கிரஹாரத்தைக் கொளுத்துவோம் என்று அறிவித்தார். தனது தொண்டர்களுக்கு பெட்ரோலும் தீப்பந்தமும் வைத்துக்கொள்ளச் சொல்லி ஆணையிட்டார். இதன் காரணமாக இராஜாஜி பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஓடினார். பின்னர் முதல்வரான காமராசர் தந்தை பெரியாரின் ஆலோசனையுடன் இராஜாஜி மூடிய 6000 பள்ளிகளைத் திறந்து மேலும் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக் கூடாது என்று அனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடை பெருக்கெடுத்து ஓடச்செய்தார்.

படித்து வந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். அப்பொழுது பள்ளன் பறையனுக்கெல்லாம் வேலை தருகிறீர்கள். அதனால் தகுதி போச்சு திறமை போச்சு என்று கூச்சல் போட்டனர் பார்ப்பனர்கள். “ஆமாண்ணேன், நான் பறையனை டாக்டராக்கினேன். அவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்துப் போனான்னேன். பள்ளனை இஞ்சினியராக்கினேன். அவன் கட்டிய எந்தப்பாலம் இடிஞ்சு போச்சுன்னேன்” என்றார் காமராசர். அதனால் தந்தை பெரியார் காமராசரை தமிழர்களின் இரட்சகர் என்றார். அவரது ஆட்சியைப் பாதுகாப்பதன் மூலமாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் உயர முடியும் என்றார்.

 ஆனால் 1962ல் நடந்த தேர்தலில் எந்த ராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து பள்ளன் பறையனெல்லாம் படிக்கக் கூடாது என்று சொன்னாரோ அவருடன் கூட்டுச்சேர்ந்து காமராசர் ஆட்சியை ஒழிக்க துணை போனவர்கள் திமுக, கம்யூனிஸ்ட், தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்புää முஸ்லிம் லீக். அப்பொழுது அவர்கள் காமராசர் ஆட்சியை ஒழிக்க அவர்மீது வைத்த குற்றச்சாட்டு “விலைவாசி உயர்ந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது” என்பதாகும்.
 “ஆமாம். இராஜாஜி பள்ளன் பறையன் படித்தால் வேலையில்லாத் திண்டாட்டம் வரும். அதனால் அவரவர் குலத்தொழில் செய்யுங்கள் என்று சொன்னார். ஆனால் அதனை மாற்றி காமராசர் பள்ளன் பறையனையெல்லாம் படிக்க வைத்து விட்டார். அதனால் வேலையில்லாத்திண்டாட்டம் வரத்தான் செய்யும். உங்களுக்கு யார் வேண்டும்? படிக்கவே கூடாது என்று சொன்ன இராஜாஜி ஆட்சி வேண்டுமா? உங்களைப் படிக்க வைத்த காமராசர் ஆட்சி வேண்டுமா? நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டாமா?
 நம் மக்களைப் படிக்கவே கூடாது என்று சொன்ன இராஜாஜியோடு சேர்ந்துகொண்டு நம்மைப் படிக்க வைத்த காமராசர் ஆட்சியை ஒழிக்க வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது@ விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூச்சல் போடுகிறீர்களே! இது நியாயமா? என்று கேட்டார் பெரியார். குலக்கல்வித்திட்டம் கொண்டுவந்த இராஜாஜிமீது மக்கள் கோபம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த பெரியாரைத் தலித் விரோதியாகக் காட்டும் முயற்சி திட்டமிட்டு நடக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களே! உண்மை உணர்வீர்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக