செவ்வாய், 25 அக்டோபர், 2016

மே| தினம்


 மே| தினம் என்பது உலகளவில் உள்ள தொழிலாளர் அமைப்புகள் எல்லாம் கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லும் அமைப்பு மாத்திரம் இது வெளி நாட்டிலிருந்து வந்தது. அதனால் இதனைக் கொண்டாட மாட்டோம் என்று பிதற்றி வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டைக் கொண்டாட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னாள் அறிவித்தது.

 எதிலும் இரட்டை வேடம் போடுவது அவர்களின் நிலைப்பாடு நமது நாட்டுக்கேற்ற தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் கொள்கை. நமது பண்டைய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை மாறாமல் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் கூற்று. இவர்கள் ஒரு லட்சிய சமுதாயத்தை அமைக்க இருப்பதாகவும் அதற்கான அடித்தளத்தை தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பதற்காக சங்கம் வைத்திருப்பதாகவும் அடிக்கடி கூறி வருகிறார்கள்.

இவர்கள் அமைக்க இருக்கும் லட்சிய சமுதாயம் எப்படிப்பட்டது?   ~ஆரம்ப காலத்தில் இருந்தே பாரதத்தில்; ரிஷிகளும், முனிவர்களும், தியாகிகளும், தபஸ்விகளும் மக்களுக்கு நல்ல பண்புகளைக் கற்றுத் தந்தார்கள். அது அரசர்களோ, அரசாங்கமோ ஆக இருக்கவில்லை. அவர்களால் நற்பண்புகளை ஊட்ட முடியாது. … அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷி, முனிவர்கள் போன்றவர்களிடத்தில் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்கு பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாக காத்து வருகிறது…. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்| என்று BMS  சங்க மடல் ஜனவரி – பிப்ரவரி 1998 தெரிவிக்கிறது.          

 இவர்கள் சொல்லுகின்ற ரிஷிகள், முனிவர்கள், அர்ச்சகர்கள், ஆசிரியர்கள் யார் யார்? அவர்கள் பிறப்பு வளர்ப்பு யோக்கியதைகள் என்ன என்பதை பிறகு பார்க்கலாம். அந்த உயர்ந்த மரபுகளுக்கும் சட்டங்களுக்கும் ராஜா கூட பணிந்து செயல் புரிந்தனர் என்று கூறுகிறார்கள் அல்லவா? அதனைப் பற்றிப் பார்ப்போம்.        

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பரோடா மன்னரின் உதவியுடன் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மிக உயர்ந்த கல்வி கற்று மன்னரிடம் போடப்பட்ட ஒப்பந்தப்படி படிப்பு முடித்த அம்பேத்கர் பரோடா சமஸ்தானத்தில் மன்னரின் இராணுவச் செயலாளராக பணியில் சேர்ந்தார். அவர் எவ்வளவதான் கல்வி கற்றிருந்தாலும் கல்வியறிவற்ற மூடர்கள் அவரது அலுவலகத்தில் அவரை மிகவும் இழிவாக நடத்தினார்கள். அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கூடத் தர மறுத்தனர். அவரிடம் கோப்புகளை கையில் கொடுத்தால் தீட்டாகிவிடும் என்பதால் அந்தக் கோப்புகளை தூக்கி வீசி எறிந்தனர். அவருக்குத் தங்குவதற்கு இந்துக்கள் யாரும் வீடு தர மறுத்தனர். ஒரு பார்சியின் சத்திரத்தில் தங்கியிருந்தார். அந்தப் பார்சியும் இவர் ஒர் தீண்டத்தகாதவர் என்பதைத் தெரிந்துகொண்டபின் அவரது பெட்டி படுக்கைகளை வெளியிலே தூக்கி வீசி எறிந்துவிட்டு ஜாதியை மறைத்தற்காக அவரை மிகவும் கேவலமாகத் திட்டினார். தங்குவதற்கு இடம்கூடக் கிடைக்காத நிலையில் மரத்தடியில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதாராம் அண்ணல் அம்பேத்கர். இதனை மன்னரிடம் சென்று அம்பேத்கர் நேரில் முறையிட்டபோது மன்னரே தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித்து விட்டாராம். வேறு வழியில்லாமல் அம்பேத்கர் அவர்கள் அங்கிருந்த வெளியேற நேர்ந்தது.        

பிஎம்எஸ் சொல்லியுள்ளபடி ராஜா கூட அந்தச் சட்டங்களுக்கு பணிந்துதான் நடக்க வேண்டி இருந்தது. அவராலும்கூட ஒன்றும் செய்ய முடியாத நிலைதான் இருந்தது. அத்தகைய சமுதாயத்தை அமைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும் பணியைச் செய்வதாக பிஎம்எஸ் கூறுவதை பெரும்பான்மை மக்களின் நலம் நாடுவோரால் ஏற்றுக் கொள்ள முடியுமா?  அந்தப் பழைய சமுதாயம் மீண்டும் அமைந்தால் தொழிலாளர்கள் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும்தான் இருக்க நேரிடும். அத்தகைய இழிநிலை மீண்டும் அமையாமல் தடுக்க வேண்டுமானால் நாம் மே தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம்.   

  01-05-2012 காலை 8.00 மணிக்கு பெல் தி.தொ.க. சார்பில் பயிற்சிப்பள்ளி காமராசர் சிலை அருகில் நடைபெறும் மே தின விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பீர்!               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக