செவ்வாய், 11 அக்டோபர், 2016

Dose no -8



ராமனுக்கும் அனுமானுக்கும் சக்தி இல்லையோ?

தமிழர்களின் நூற்றாண்டுக்கனவு சேது சமுத்திரத்திட்டத்தினை திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு நிறைவேற்றுகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களிலிருந்து இலங்கையைச் சுற்றி கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் இலங்கைப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இந்தக் கால்வாய்மூலம் பயணம் செய்யும். இதனால் முப்பது மணிநேரம் மிச்சம் என்றால் இது சாதாரணமானதா? நேரம் மிச்சம்ää காலமிச்சம்ää எரிவாயுமிச்சம்! போக்குவரத்துச் செலவும் குறைவு!

 இந்தத்திட்டம் முடிந்தால் 2008ல் 3000 கப்பல்களும் 2025ல் 8000 கப்பல்களும் இக்கால்வாய் வழியாகப் பயணிக்கும். இந்தத் திட்டத்திற்காகச் செலவழிக்கப்படும் 2427.4 கோடியும் 2017ல் வட்டியும் முதலுமாக வந்துசேரும்.

 கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் வளர்ச்சிபெறும். இலட்சக் கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெருகும். தொண்டியில் 16கோடி செலவில் சிறு கப்பல்கள் தங்கும்தளம்ää முத்துப்பேட்டையில் இரு சிறுமீன்படித் துறைமுகங்கள், தனுஷ்கோடியில் 16கோடி ரூபாய் செலவில் மீன்பிடித்துறைமுகம் மீனவர்கள் வளர்ச்சிக்காகச் செலவிடப் படுகிறது.
 இத்திட்டத்தினை ஆர்எஸ்எஸ், பிஜேபி, பிஎம்எஸ் வகையறாக்களும் அதிமுகவும் வரிந்துகட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள்.

இராமாயணத்தின் கற்பனைக் கதாநாயகன் இங்கு பாலத்தைக் கட்டினான் எனவும் அதனை அமெரிக்க நாசா படமெடுத்துச் சொன்னதாகவும் கதைவிட்டார்கள். நாசா விண்வெளி ஆய்வுமய்யம் அங்கே பாலம் இருப்பதாகவோ அது மனிதனால் கட்டப்பட்டதென்றோ தெரிவிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. அதற்குப்பிறகும் அவர்கள் திருப்பித்திருப்பி அதே பொய்யைக் கூறி வந்தார்கள்.

 சேதுசமுத்திரத் திட்டத்தலைவர் ரகுபதி அவர்கள்  அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு  மின்னஞ்சல் அனுப்பினார் ~~ நீங்கள் (நாசா) வெளியிட்டுள்ள புகைப்படத்தினால் இங்கு பிரச்சினை எழுந்துள்ளது. அது செயற்கையாகக் கட்டப்பட்டதா? அல்லது மணல்மேடா? அல்லது இந்தியப் பெருங்கடல் முழுவதும் நிலப்பரப்பாகவிருந்து கடலில் மூழ்கி மிச்சம் இருக்கும் மலைப்பகுதியா? என்று 26-07-2007 அன்று அதில் கேட்டிருந்தார்கள். அன்று மாலையே நாசாவும்; பதில் அனுப்பியது.
 அதில் ~~இந்தியா - இலங்கை இடையே உள்ள அந்தப்பகுதி இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுத்தான் || என்று தெளிவுபடுத்திவிட்டனர்.

அதற்குப்பிறகும் ராமர்பாலம் என்பது எங்கள் நம்பிக்கை. அதை இடிக்கக் கூடாது என்று உண்ணாவிரதம் உபவாசமெல்லாம் இருந்தார்கள். அதிலும் பலன் ஏற்படாமல் யாகமெல்லாம்கூட நடத்தினார்கள்.
 யாகமெல்லாம் ஊரை எமாற்றத்தான். அதில் ஒன்றும் பலன் ஏற்படாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த காரணத்தால் உச்சநீதிமன்றத்திலும் வழக்குப் போட்டார்கள். உச்சநீதிமன்றம் என்றால் உச்சிக்குடுமி நீதிமன்றம்தானே?

 எந்தச்சட்டத்தையும் பார்க்காமல் எந்த ஆதாரத்தையும் கேட்காமல் ராமன் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல்; மற்ற பகுதிகளில் பணிகள் தொடரலாம் என்று இடைக்காலமாகத் தடைவிதித்துத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால் சில பத்திரிகைகள் சேதுசமுத்திரத்திட்டத்திற்கே தடைவிதித்ததுபோல் செய்தி வெளியிட்டுள்ளன. ராமன் என்பதே கற்பனையாக இருக்கும்போது ராமன் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எந்த அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்கிறது என்றே தெரியவில்லை.

 ராமனுக்கு சக்தி இருப்பதாக நம்புகிறவர்கள்ää உபவாசம் நடந்தால் அற்புதம் நடக்கும் என்று சொல்கிறவர்கள், யாகத்தை நம்புகிறவர்கள் ராமன்பற்றி உபந்நியாசம் நடக்கும் இடங்களிலெல்லாம் அனுமான் தோன்றுவான் என்று சிலாகிக்கிறவர்கள்  நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் என்ன?
ராமன் எங்கே போனான்? அவனுடைய சக்தி என்னவாயிற்று? அனுமான் எங்கே போனான்? ஊருக்குஊர் நூறடி, இருநூறடி உயரத்தில் நெடுஞ்சாலையின்- இருபுறங்களிலும் அனுமானுக்கு சிலை எழுப்பி இருக்கிறார்களே! அவனிடம் தகவல் தெரிவிக்க வேண்டியதுதானே! அனுமன் தன்புஜபல பராக்கிரமத்தால் ராமன் பாலத்தை இடிக்க வருபவர்களை ஒரு கை பார்க்க வேண்டியதுதானே!  அதை விடுத்து நீதிமன்றம் செல்வது ஏன்? அவர்களும் நாத்திகர்கள் ஆகிவிட்டார்களோ!                 
                                    
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக