ஞாயிறு, 23 அக்டோபர், 2016

OBCக்காக என்ன செய்தார் அம்பேத்கர்?

OBCக்காக என்ன செய்தார் அம்பேத்கர்?உடன் பணிபுரியும் சக தோழரின் கேள்விக்காக
**************************************************
Dr.அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பில்லா தலைவர். பெரியார் எனும் மாமனிதருடன் சிந்தனையிலும் செயலிலும் ஒரே தடத்தில் பயணித்தவர்.அவரை சாதிய தலைவராகவும் தாழ்த்தபட்டவர்களுக்காக மட்டும் பாடுபட்டார் என்றும் மாயவலை பின்னி,பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து ஒதுக்கி வைத்து பார்க்கும் மனநிலையை இந்துத்துவம் ஆரம்பத்திலிருந்தே செய்து கொன்டிருக்கிறது.
பெரியாரை வெறும் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவர் எனும் பொய் பிரசா்சாரம் எந்த அளவுக்கு பொருந்தாதோ அந்த அளவுக்கு அம்பேத்கரை வெறும் தலித் மக்களின் தலைவர் என்பதும் பொருந்தாது.
இந்திய அரசியலில் மனித உரிமை மற்றும் சமூகநீதியில் அம்பேத்கரின் பங்களிப்பு அளப்பரியது.
மனித உரிமையின் நீட்சியாகத்தான் சமூக நீதியை கொண்டுவந்தார்கள்,சமத்துவத்தை எட்டுவதற்கு சமூக நீதியின் உட்கூறாகிய இட ஒதுக்கீட்டை இந்திய அரசியலமைப்பில் இடம் பெற செய்தார்கள்.
தலித்களும் பழங்குடியினரும் சலுகை பெறுவதற்காக பாடுபட்டவர் அம்பேத்கர் என்று அவரின் இமாலய பணியையும் பங்களிப்பையும் கொச்சைபடுத்தி விட்டன இந்திய ஆதிக்க சாதியும் அச்சு ஊடகங்களும்.
இதர பிற்ப்படுத்தப்பட்டோர் 23ஆண்டுகளாக பெற்று வரும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடும்,10ஆண்டுகளாக பெற்றுவரும் கல்வியில் ஒதுக்கீடும் மண்டல் குழு பரிந்துரையால் கிடைக்கப்பெற்றன என்பதில் மாற்று கருத்துகளுக்கு இடமில்லை,ஆனால் மண்டல் தலைமையிலான குழுவின் பரிந்துரையிலுள்ள முகவுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு வரியை அதன் பயனீட்டாளர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
அம்பேத்கர் மட்டும் இந்திய அரசியல் அமைப்பில் #சரத்து340யை கொண்டுவராமலிருந்தால் மண்டல் குழுவையே அமைத்திருக்க முடியாது.
#சரத்து340
-------------------
"பிற்படுத்தப்பட்டோர்களின் கல்வி பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து,அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டியது அரசின் கடமை ,இந்திய அரசமைப்பின் அடிப்படை நோக்கமே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கச்செய்வதுதான் என்றார்.Decentralisation of Power and Resources of India அதாவது இந்திய அரசின் அதிகாரங்களையும் இந்தியாவின் வளங்களையும் அனைவரும் பெறுவதற்கு வழிவகை செய்வது."
நேருவின் அமைச்சரவையில் சட்ட மந்திரியாக இருந்த போது பிறப்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டையும்,பெண்களுக்கான இந்து சட்ட மசாதாவையும் அரும்பாடுபட்டடு உருவாக்கினார்,அதை நேருவும் அவர் அமைச்சரவையும் நடைமுறைக்குக் கொண்டு வராமல் இருந்ததை கண்டித்துதான் தன் அமைச்சர் பதவியை 11/10/51 அன்று ராஜினாமா செய்தார்.அவரின் ராஜினாமாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்களுகான கோரிக்கை ஒன்றுமில்லை.
பிற்படுத்தப்பட்டவர்களின் ஒதுக்கீடுக்காக தன் பதவியை துறந்த அம்பேத்கரை அவர் பிறந்த சாதியின் காரணமாகவே எதிர்ப்பதில் என்ன நியாயம்?
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடையை காணப்படும் சாதிக்கலவரங்களுக்கு காரணம்,இந்திய சாதி படிநிலையும்,பார்ப்பன இந்து மனோபாவமும் இந்து மதமும் தான் என துல்லியமாக அடையாளம் காட்டுகிறார்.
வரலாற்றை மறப்பவர்களாலும்,மறுப்பவர்களாலும் என்றுமே வரலாறு படைக்கமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக