திங்கள், 31 அக்டோபர், 2016

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடுபடவில்லை என்று சொல்வதெல்லாம் ஒருவித மனநோயே அல்லாமல் வேறில்லை

Image result for periyar ambedkar image



சில போராளிகள் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்ற பொங்குகிறார்கள்.

அவர்கள் உண்மையில் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைளை அறியாதவர்கள் என்றே நான் கருதுகின்றேன்.
எப்படியெனில் அம்பேத்கர் அவர்கள் ஜாதியை ஒழிக்க வழி என்ற நூலில் ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் ஜாதியைப் புனிதம் என்று சொல்லுகின்ற மதத்தை ஒழிக்க வேண்டும் என்றார். ஜாதி புனிதமானது என்று சொல்லுகின்ற சாஸ்திரங்களை ஒழிக்க வேண்டுமென்றார். சடங்குகள் சம்பிரதாயங்கள் வேதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் அனைத்துமே சாதி புனிதமானது என்று கூறுகின்றன.
அவற்றை ஒழிக்காமல் ஜாதியை ஒழிக்க முடியாது என்றார் அம்பேத்கர்.

 இந்தப் புனிதங்கள் அனைத்தையும் அழித்தொழிக்கப் பாடுபட்டவர்தானே தந்தை பெரியார்? கடவுள் புனிதமானது என்றனர். அதனை அழித்தொழிக்க முயன்றபொழுது மதம் புனிதமானது என்றார்கள். அதனை ஒழிக்க முயன்றபொழுது சாஸ்திரங்களும் சடங்குகளும் புனிதமானது என்றனர். அதனையும் அழித்தொழிக்க தந்தை பெரியார் பாடுபட்டபோது இவை அனைத்தையும் பாதுகாப்பது பார்ப்பானாக இருந்ததால் அந்தப் பார்ப்பானையும் எதிர்த்துப் போராடினார்.

தீண்டாமையை ஒழிய ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அந்த ஜாதியை ஒழிக்கவே தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் பெரியார்.

இந்த ஜாதியை மதத்தை சாஸ்திரங்களை சடங்குகளை புராணங்களை இதிகாசங்களை வேதங்களை இராமாயணத்தை மகாபாரதத்தை பகவத் கீதையை இராமனை கிருஷ்ணனை பிள்ளையாரை எதிர்த்து ஒரு சுண்டு விரலைக்கூட அசைக்காதவர்கள்தான் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்று கூசாமல் சொல்கிறார்கள்.

ஜாதி ஒழிவதால் மேல்ஜாதி என்று நம்பப் படுகின்றவனுக்கு அவனுடைய மேல்ஜாதித் தன்மை போகிறது. அது அவனுக்கு நட்டம்தான். ஆனால் ஜாதி ஒழிக்கப்படுவதால் தன்மீது சுமத்தப்பட்ட இழிவுகள் அனைத்தும் நீங்கி சுதந்திர மனிதனாக மாறுகின்றவன் தாழ்த்தப்பட்டவன்தான். எனவே பெரியாரின் போராட்டங்களால் பெரிதும் பயனடைகின்றவன் தாழ்த்தபட்ட மக்களே!

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடுபடவில்லை என்று சொல்வதெல்லாம் ஒருவித மனநோயே அல்லாமல் வேறில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக