செவ்வாய், 25 அக்டோபர், 2016

அந்தப் பாலம் பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அது உலக அதிசயம். அதை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகள் அந்தப் பாலத்தை நீங்கள் பார்த்தீர்களா? என்று வழக்கறிஞரைக் கேட்கிறார். அதை நான் பார்க்கவில்லை மை லார்ட்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உலக அதிசயம் பற்றி ஆய்வு நடந்தது. அதில் தாஜ்மகாலும் எகிப்து பிரமிடுகளும் நிரந்தர அதிசயங்களாகவும் மேலும் பல அதிசயங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த ஆய்வின்போது மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலையும் உலக அதிசயத்தில் சேர்க்க வேண்டும் என்று அங்கு உள்ளவர்கள் கோரிக்கை விடுத்தனர். வாக்கெடுப்புக்கூட நடத்தினர். உலக அதிசயத்தில் அது சேர்க்கப்படவில்லை என்றாலும் தமிழனின் கட்டிடக்கலையை அது எடுத்துக் காட்டுகிறது என்பதில் அய்யமில்லை.

மதுரை மீனாட்சி கோயில் கண்ணுக்குத் தெரிகிறது. நம் நாட்டினர் மட்டுமல்லாது வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதை வந்து அதன் கட்டிட நேர்த்தியைக் கண்டு களித்துச் செல்கின்றனர்.

உலக அதிசயங்கள் பற்றிய ஆய்வு நடந்தபோது பிஜேபி யினரும் விஇப, பஜ்ரங்தள் (குரங்குப்படை) எல்லோரும் இங்குதான் இருந்தார்கள். ஜெ. அம்மையாரும் ஆட்சியில் இருந்தார். சோ வும் சு.சாமியும், இல.கணேசன், இராமகோபாலன் அய்யர்களும் உயிரோடுதான் இருந்தார்கள்.

அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு இராமர் பற்றியோ அவர் கட்டிய பாலம் பற்றியோ கனவு வரவில்லை போல் தெரிகிறது. இராமர் தடவியதால் அணில் முதுகில் இருக்கும் கோடுகளும் அதிசயமாகத் தெரியவில்லை போல் தெரிகிறது.

கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்து தமிழனின் நூற்றைம்பது ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தை மத்திய அரசில் 2500 கோடி நிதி உதவிபெற்று நடைமுறைப்படுத்தும் போதுதான் இராமனும், லட்சுமணனும், அனுமாரும் கனவில் வந்து சொல்லி இருப்பார்கள் போல் தெரிகிறது.

அந்தப் பாலம் பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அது உலக அதிசயம். அதை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகள் அந்தப் பாலத்தை நீங்கள் பார்த்தீர்களா? என்று வழக்கறிஞரைக் கேட்கிறார். அதை நான் பார்க்கவில்லை மை லார்ட் என்று கீழ்ஜாதி         கே.ஜி பாலகிருஷ்ணனிடம் சொல்கிறார் உயர்ஜாதி வழக்கறிஞர்.

நீங்களும் பார்க்கவில்லை, நீதிபதிகளாகிய நாங்களும் பார்த்ததில்லை, வேறு யாருமே பார்த்ததாகத் தெரியவில்லை. இப்படி யாருமே பார்க்காத ஒன்றை எப்படி புராதனச் சின்னமாக அறிவிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேட்டவுடன் சட்டத்தைக் கரைத்துக்குடித்து மிகப்பெரிய சட்டமேதை என்று ஜெயலலிதாவால் கணிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் காசுகொடுத்து வழக்குப் போடச்சொன்ன ஜெயலலிதாவைக்கூட ஒரு வார்த்தை கேட்காமல் வழக்கைப் பின் வாங்கிக் கொண்டார்.
அந்தப் பாலம் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதை இவர்கள் நம்பி யிருந்தால் உலக அதிசயம்பற்றி ஆய்வு செய்த குழுவிடம் இவர்கள் விண்ணப்பித்திருக்கலாமே! அப்படி விண்ணப்பித்திருந்தால் இன்று நீதிபதிகள் கேட்ட இதே கேள்வியை அவர்கள் கேட்டிருப்பார்களே!

இந்திய நாட்டு நீதிபதியிடமே பதில் சொல்ல முடியாமல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வந்தவர்கள் அவர்களிடம் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டும் போலிருக்கிறது. அது மாத்திரமல்லாமல் உலகம் பூராவும் உள்ள அறிவுள்ள மக்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.

இப்படி நகைப்பிற்கிடமான ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு குறிப்பாக தென்தமிழக வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள் என்றால் இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த விந்தை நடக்காது.
உச்சநீதி மன்றத்திலேயே மூக்குடைபட்ட பின்னரும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் தமிழன் கால்வாயான அண்ணா கனவு கண்டää பெரியார் போராடிய காமராஜர் விரும்பிய இன்னும் பல தலைவர்களெல்லாம் ஆசைப்பட்ட சேதுக்கால்வாய்திட்டத்தை முடக்குவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்களே!

தமிழர் நலனில் அக்கறையுள்ளோரே! இவர்களை அடையாளங் கண்டுகொள்வீர்!

25.02.08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக