வியாழன், 27 அக்டோபர், 2016

கலைஞர்கிறிஸ்துமசுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ரம்ஜானுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ஏன் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்றதில்லை


கலைஞர்கிறிஸ்துமசுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ரம்ஜானுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ஏன் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்றதில்லைன்னு அக்கா தமிழிசை ரொம்பத்தான் ஆதங்கப்படுறாங்க.

ஒரு பாதிரியார் பார்க்க வந்தால் கைகுலுக்குகிறார். ஒரு முல்லா பார்க்க வந்தால் கட்டிப்பிடிக்கிறார். அங்கே சகோதரத்துவம் பிறக்கிறது. ஆனா உங்க சங்கராச்சாரிய உங்க அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்க்கப் போனப்பவே சரிசமமான நாற்காலி போட்டுக் கூட உட்கார வைக்கலியேää அது ஏன்? அதே நேரத்தில எந்தப் பதவியிலயும் இல்லாத சு.சாமி போனப்ப சரிசமமா நாற்காலி போட்டுப் பேசினாரே உங்க சங்கராச்சாரி. அதனாலதான் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்றதில்லை சகோதரி.

அது மட்டுமில்லாம யாரொருவன் இஸ்லாத்துக்கு மாறுகிறானோ அங்கே போய் அந்த மதப் படிப்பப் படிச்சா அடுத்த நாளே அவன் அங்கே முல்லா. மசூதியில பாத்தியா ஓதலாம். யாரொருவன் கிறிஸ்தவத்துக்கு மாறுறானோ அவன் அந்த பாதிரியாருக்குரிய படிப்பப் படிச்சா அடுத்த நாளே அவன் பாதிரியார். எல்லோரும் அவரிடம் போய் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால்  இந்து மதத்தில் அப்படி உண்டா? கலைஞர் கொண்டுவந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்கிற சட்டம் இன்னும் அமுலாக விடமாட்டேங்கிறாங்களே சகோதரி?


அந்த மதத்திலயெல்லாம் கர்த்தர்தான் கடவுள். அல்லாதான் கடவுள். ஆனா உங்க மதத்தில பார்ப்பானைத்தானே எல்லோரும் சாமி என்கிறீங்க? அங்கே கடவுள் இல்லை என்பவன்தான் நாத்திகன் உங்க மதத்தில வேதத்தை ஏற்றுக் கொள்ளாதவன்தான் நாத்திகன். ஏன் என்றால் அந்த வேதம்தான் பார்ப்பனர்தான் கடவுள். அவனைத்தான் பார்ப்பனரல்லாதார் வணங்க வேண்டும் என்கிறது. இராமனும் கிருஷ்ணனுமே அதைத்தான் சொல்றாங்க.

அங்கே தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதெல்லாம் இல்லை சகோதரி. ஆனால் நம் சமூகத்தில் எப்படின்னு உங்க தாத்தா பாட்டி யாராவது இருந்தாக் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க சகோதரி. ஜாக்கெட் போடக்கூட இந்த மதத்தில் உங்க முன்னோர் எத்தனை வருடம் போராடி அந்த உரிமை கிடைச்சதுன்னு வரலாற்றைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க சகோதரி.

அங்க மசூதிக்கோ சர்ச்சுக்கோ போனால் எல்லோருக்கும் சரி சமமான இடம்தான் சகோதரி. ஆனால் நீங்க சொல்லும் இந்த மதத்தில் எல்லோருக்கும் ஒரே இடத்தில் நிற்க முடிகிறதா சகோதரி. உங்க பாட்டன் பாட்டிகளெல்லாம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ளே சென்று சாமி கும்பிட உரிமை வேண்டும்னு வழக்குப் போட்டப்ப எந்தெந்த இடத்தில் எந்தெந்த சாதிக் காரங்க நின்னு சாமி கும்பிடனுமுன்னு தீர்ப்பே வந்துச்சு சகோதரி. அதெயெல்லாம் விவரம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க சகோதரி.

அந்தத் தீர்ப்பில நாலு வர்ணத்துக்கும் நாலு இடம் ஒதுக்கப்பட்டுச்சு. அஞ்சாவதா பஞ்சமர் எங்கே நிக்கனும் தெரியுமா? பஞ்சமர்னா யாருன்னு தெரியுதா? நூறு வருடத்துக்கு முன்னாலேயே திராவிட இயக்கம் அழித்தொழித்த தீண்டாமையைப் போக்கிய தமிழகத்தில் தலித் விட்டில போய் சாப்பிடுறது பெர்ரிய புரட்சின்னு போய் சாப்பிட்டீங்களே அந்த தலித்துகள் எங்கே நின்னு சாமி கும்பிடனும்னு சொல்லி இருக்குது தெரியுமா? எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தால் கோபுரம் தெரியுதோ அவ்வளவு தொலைவில் இருந்துதான் அவங்க தரிசனம் பண்ணனும்னு சொல்லி இருக்குது தெரியுமா சகோதரி?

நீங்களெல்லாம் கோயிலுக்குள்ளே போயி சாமிய தரிசனம் பண்ணுறீங்கää நாங்க மட்டும் கோபுரத்தப் பாத்துக் கும்பிடு போடனுமான்னு அந்த மக்கள் கேட்டப்ப கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சொல்லி வச்சாங்க சகோதரி.

நீங்க மருத்துவம் படிச்சதனால வரலாறு படிச்சிருக்க மாட்டீங்க. இனிமேலாவது இந்த வரலாற்றையெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்கங்க சகோதரி. முக்கியமா அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றையும் முனைவர் கோ.கேசவன் எழுதிய கோயில் நுழைவுப் போராட்ட வரலாறு என்கிற புத்தகத்தையும்ää படிச்சுத் தெரிஞ்சுக்கங்க சகோதரி. இந்த வரலாற்றையெல்லாம் தெரிஞ்சதனாலதான் கலைஞர் உங்க இந்துமத பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்றதில்லைன்னு புரிஞ்சக்கங்க சகோதரி.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக