செவ்வாய், 11 அக்டோபர், 2016

பார்ப்பனர்களே பூஜை புனஸ்காரம், பண்டிகைகள் இவற்றை நம்பவில்லை



பூஜைகளாலும் யாகங்களாலும், பிரார்த்தனையாலும் எந்தப் பலனும் இல்லை என்பது பார்ப்பனர்களுக்கு நன்கு தெரியும். ஆண்டவனால் ஆவது ஒன்றுமில்லை என்பதனால்தான் அர்ச்சகர்கள்கூட அரசாங்கத்திடம்தான் கோரிக்கை வைக்கிறார்களே தவிர ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று அதை நம்பி தேமே என்று இருப்பதில்லை.

இராமர் பாலத்தைக் காக்கப்போவதாகச் சொல்லி கடவுளை நோக்கி தவங்கள் செய்யாமல் அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார்கள். உபவாசம் என்றார்கள். யாகங்கள் செய்தார்கள். இதனால் அற்புதங்கள் நடக்கும் என்றார்கள். நடக்காது என்று தெரிந்த காரணத்தால் சாலை மறியல், இரயில் மறியல் செய்தார்கள். மக்கள் எல்லாம் இவர்கள் பின்னால் அணிவகுத்து வந்துவிடுவார்கள் என்று நம்பினார்கள்.

இவர்களை யாரும் சட்டை செய்யவில்லை. பக்தி உள்ளவர்கள்கூட பதினேழரை இலட்சம் வருடங்களுக்கு முன்னால் இராமன் இருந்தான் என்பதையோ பாலம் கட்டினான் என்பதையோ நம்பவில்லை. சேதுசமுத்திரத்திட்டம் என்ற மக்கள் நலத்திட்டத்தை முடக்கவே பார்ப்பனர்கள் இராமர்பாலம் என்கிறார்கள் என்பதனை பக்தர்களும் புரிந்துகொண்டார்கள்.

ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் பக்தியை வைத்து நடத்திய பிழைப்பு எடுபடவில்லை என்றவுடன் மக்கள்நலத்திட்டத்தை முடக்க நீதிமன்றம்தான் சென்றார்களே தவிர தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றபொழுது அவதரிப்பதாகச்சொன்ன கடவுளை நம்பி அவரிடம் சென்று முறையிடவில்லை. கடுமையான தவம் இருந்தால் அந்த தவத்தை மெச்சி கடவுள் தோன்றுவான் என்று அவர்களே எழுதிவைத்த புராணங்களை நம்பி யாரும் கடும் தவம் இருக்கவில்லை. 

அத்வானி, வாஜ்பேய், முரளிமனோகர்ஜோஷி கூட தவம் இருக்கவேண்டாம். தங்களை சாமியார் என்று கூறிக்கொண்டு  சொகுசு வாழ்க்கை வாழும் தலைவெட்டித் தம்பிரான்களாவது ஊசிமேல் இராப்பகலா உட்கார்ந்து தவமிருக்கலாமே. அதையெல்லாம் செய்யாமல் தலையை வெட்டிவா, நாக்கை வெட்டிவா என்று சொல்வதெல்லாம் எதைக் காட்டுகிறது?

இந்த பூஜை, யாகம், தவம், ஜபம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்பதைத்தானே?
பார்ப்பனர்களே இவற்றை நம்பவில்லை என்கிறபோது உழைக்கும் மக்களாகிய தொழிலாளர்கள் பூஜை புனஸ்காரங்கள் என்று காசையும், நேரத்தையும் வீணடிக்கலாமா?

நம் நிறுவனத்தில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை தினத்தன்று பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடுவது இப்பொழுது இல்லையே! 1992ல் பாபர் மசூதியை இடித்த பிறகு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று நிர்வாகம் நிறுத்தி விட்டதே! சாமிக்கு எந்த சக்தியும் இல்லை என்பதற்கு இதுவே நல்ல உதாரணம் அல்லவா?

கட்டிட எண் 50ல் அடிக்கடி விபத்து நடக்கிறது என்று அந்தப்பகுதி நிர்வாகம் எவ்வளவு பூஜைகள் செய்தது? திருநெடுங்குளநாதர் கோயிலில் சென்றுகூட பூஜை போட்டார்களே! அதற்குப் பிறகும் விபத்துக்கள் இன்னும் தொடர்வது ஏன்? பாதுகாப்பு விதிமுறைகளைப்பற்றிக் கவலைப்படாமல் உற்பத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு வேலைவாங்கும் அதிகாரிகளும்ää பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்களும்தானே இந்த விபத்துக்களுக்குக் காரணம்?

பூஜை புனஸ்காரம், பண்டிகைகள் எல்லாமே உழைக்கும் மக்களை ஏய்த்து பார்ப்பனர்கள் சுரண்டலுக்கு மட்;டும்தான் பயன்படுமே தவிர அவற்றால் எந்தப் பலனும் இல்லை.
எனவே, ஆயுதபூஜை என்பது தேவையற்றது. அதனைக் கொண்டாடி அறிவையும் மானத்தையும், பணத்தையும் இழக்காதீர்!பார்ப்பனர்க்கு என்றும் நிரந்தர அடிமையாகாதீர்!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக