வெள்ளி, 21 அக்டோபர், 2016

நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும்கூட அத் தீர்ப்பின்படி பெல் நிர்வாகம் நடக்கவில்லை


 இடஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி முதலில் திறந்தபோட்டியில் வருபவர்களை தகுதி – திறமை அடிப்படையில் நியமித்து விட்டு அதன்பிறகு இட ஒதுக்கீட்டின்படி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களை நியமிக்க வேண்டும். அதன்படி நியமிக்காமல் எடுத்த எடுப்பிலேயே இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்துவிட்டு அதன் பிறகு திறந்த போட்டியை நடத்தினால் தகுதி – திறமை அதிகம் இருந்தாலும் அதில் தாழ்த்தப்பட்டவரோ – பிற்படுத்தப்பட்டவரோ வர முடியாது.

பெல் நிறுவனத்தில் SC, ST, OBC, OCஎன்பதில் OC என்பதை OPEN COMPETITION என்று எடுக்காமல் OTHER COMMUNITYஎன்று வியாக்கியானம் கொடுத்து எடுத்தார்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்று OC என்பது OPEN COMPETITIONதானப்பா OTHER COMMUNITYஅல்ல என்று சொன்னதோடு முதலில் திறந்த போட்டியை நடத்தி விட்டுத்தான் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகத் தீர்ப்புச் சொன்னது. இத்தீர்ப்பு வந்தது 2006ல்.

ஆனால் பெல் நிர்வாகம் 2007ல் இருந்து 2011 வரை 1436 பொறியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறது.  இந்தியாவிலுள்ள அனைத்து அய். அய். டி களில் இருந்தும் போனால் போகிறதென்று ஒரே ஒருமுறை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்தும் வளாகத் தேர்வு என்ற பெயரில் எடுத்திருக்கிறது. இந்த 1436 பேரில் பொதுப் போட்டி மூலம் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட யாரும் இடம் பெறவில்லை. அய்அய்டி நாக்பூரில் ஒரே ஒரு ஆண்டு மட்டும் இரண்டே இரண்டு தாழ்த்தப்பட்டவர்கள் பொதுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தற்பொழுது வளாகத் தேர்வுக்குத் தடை போடப்பட்டிருந்தாலும் மேற்கண்ட இந்த செயலானது சட்ட விரோதமானது. நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும்கூட அத் தீர்ப்பின்படி பெல் நிர்வாகம் நடக்கவில்லையென்றால் இதனைச் செய்ய இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்?

இந்த 1436 பேரில் இதரபிற்படுத்தப்பட்டவர் 267 பேர்தான். இது 18.5 சதவிகிதம்தான். சட்டப்படி 27 சதவிகிதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர் 250 பேர். பழங்குடியினர் 87 பேர். இந்த மூன்று பிரிவினரையும் சேர்த்தாலே 604 பேர்தான். இது 42 சதிவிகிதம்தான் ஆனால் பொதுப் போட்டியில் 832 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது 58 சதவிகிதமாகும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர் சேர்ந்து சட்டப்படி 49.5 சதவிகிதம் இருக்க வேண்டும். இவர்கள் 90 சதவிகிதம் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள். ஆனால் பத்து சதவிகிதம் இருக்கக் கூடிய மேல்ஜாதி பார்ப்பனர்களுக்கு 58 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் வடநாட்டுக்காரர்கள் ஆவார்கள்.

இவர்கள்தான் எதிர்காலத்தில் பெல் நிறுவனத்தை நிர்வகிக்கக்கூடிய நிர்வாக இயக்குனர்களாகää இயக்குனர்களாக, மேலாண்மை இயக்குனர்களாக வரக்கூடியவர்கள். அய்அய்டியில் படிக்கின்ற உயர்ஜாதிக்காரர் அனைவரும் தாங்கள் மட்டுமே தகுதி திறமை மிக்கவர் என்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர் தகுதியற்றவர் என்று கருதக்கூடிய ஆணவம் பிடித்தவர்கள். இவர்கள் இந்நிறுவனத்தின் உயர் பதவிக்கு வந்தால் அப்பொழுது மற்ற மக்களின் நிலை என்னவாக இருக்கும்? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனத்திலுள்ள அதிகாரிகளையே முன்னேற விடமாட்டார்கள் என்கிறபோது தொழிலாளர்களுடைய நிலை என்னவாக இருக்கும்? தொழிலாளர்களின் ஊதிய உயர்வுää போனஸ் போன்றவற்றை இவர்கள்தான் தீர்மானிக்கப் போகிறார்கள். உரிய உரிமையினைத் தருவார்களா?

தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும் உள்ள உரிமையினைத் தட்டிப்பறித்து பார்ப்பனர்கள் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கையில் அதனை எதிர்த்து முறியடித்து தங்கள் உரிமையைப் பெறவேண்டிய இரு பிரிவினரும் ஜாதி வித்தியாசம் பார்த்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருக்கும் நிலை இருக்கும்வரை பார்ப்பனர் காட்டில் மழைதான். திருந்தவேண்டியவர்கள் திருந்துவார்களா?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக