வியாழன், 13 அக்டோபர், 2016

அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர்

தோற்றம்14-04-1891  மறைவு: 06-12-1956

எம்.ஏ., பிஎச்.டி., டி.எஸ்ஸி., டி.லிட்., எல்.எல்.டி., பார்.அட்.லா.,
 பொட்டுப்பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய், நாயினுங்கீழாய், பன்றியிலுங் கேவலமாய் நடத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் அண்ணல் அம்பேத்கர். படிப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் அவருடைய சமுதாயம். நீ படிப்பது வீண் என்று அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரே ஏளனம் செய்தாலும், உங்கள் வேலையைப் பாருங்கள் என்று பதிலடி கொடுத்து படிப்பில் கவனஞ் செலுத்திப் படித்தார் அம்பேத்கர்.

மூன்று பல்கலைக்கழகங்களில் படித்துப்பட்டம் பெற்ற பின்பும்ää அம்பேத்கரை மனிதராகவே நடத்த மறுத்து அவமானப்படுத்தியது இந்து சமுதாயம். ஏன் முஸ்லிம் சமுதாயமும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள்கூட அவர் அரசாங்கப் பதவியில் அமர்ந்தபோதுகூட தங்குவதற்கு வீடு தர மறுத்தனர் . இந்துக்கள் அவருக்குத் தண்ணீர் தர மறுத்தனர்.

 இவ்வளவுக்கும் தான் பிறந்த இந்துமதமே காரணம் என்று கருதிய அம்பேத்கர்ää ~~நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்துவிட்டேன். இவ்வாறு நான் பிறக்க நேர்ந்ததைத் தடுப்பது என்பது என் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் நான் இறக்கும்போது ஒரு இந்துவாகச் சாக மாட்டேன்@ அது என் சக்திக்கு உட்பட்டது|| என்று கூறி மதம் மாறத் தீர்மானித்தார்.

 அவர் மதம் மாறக்கூடாது என்று சிலர் அவரிடம் வந்து கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ~தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை சங்கராச்சாரியாக்கி, அவருடைய காலில் பார்ப்பனர்கள் குடும்பம் குடும்பமாக விழுந்து வணங்கத் தயாரா?| என்று கேட்டார்.
 அப்படி அவர் கேட்டு ஆண்டுகள் பலவானாலும் அதற்கு விடை கிடைக்கவில்லை.
சாதியை ஒழிப்பதற்கு ~ஒரு குறிப்பிட்ட சாதியினரே புரோகிதராக இருக்கும் முறையை மாற்றிää ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சியடைந்து பட்டயம் பெறுகின்ற எந்தவொரு இந்துவுக்கும் புரோகிதம் செய்ய உரிமம் வழங்கப்பட வேண்டும்| என்று வழி சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்.

 தமிழக அரசு அதை கவனத்தில் கொண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமியற்றி, அதன்படி அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் பார்ப்பனர் உட்பட 252 பேர் பயிற்சி முடித்திருந்தும் அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்படுகிறது. உச்சநீதிமன்றமும்  அதற்குத் தடை வழங்கியிருக்கிறது என்று சொன்னால், அண்ணல் அம்பேத்கருடைய கனவு நிறைவேறுவது எப்போது? நாட்டில் ஜாதி ஒழிவது எப்போது? சமத்துவம் மலர்வது எப்போது? சிந்திப்பீர்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக