வெள்ளி, 21 அக்டோபர், 2016

சேதுசமுத்திரக்கால்வாய்த்திட்டம் என்பது தமிழர்களின் 150 ஆண்டு காலக்கனவு



சேதுசமுத்திரக்கால்வாய்த்திட்டம் என்பது தமிழர்களின் 150 ஆண்டு காலக்கனவு. அது நிறைவேற்றப்படுவதன்மூலம் தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகவும் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் ஏராளமான வாய்ப்புக்கள் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அத்திட்டம் இப்பொழுது மிகுந்த பொருட்செலவில் நடைபெற்று வருகிறது. அத்திட்டம் நிறைவேறக்கூடாது என்பதிலே மதவாத சக்திகள் இப்பொழுது முனைப்பாக இருக்கிறார்கள். அவர்கள்

அதற்குச் சொல்லுகின்ற காரணம் அடிப்படை ஆதாரமற்றவையாகும். இராமன்பாலம் என்ற இல்லாத புராணக் கற்பனையை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் நிலவும் பக்திப் போதையினைப் பயன்படுத்தி முடக்கிடவும், நீதிமன்றம் மூலமாக தடைசெய்திடவும் அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இராமன் என்பதும் இராமாயணம் என்பதும் அசல் கற்பனைக் கதையாகும். ஜவகர்லால் நேருää பி.டி.சீனிவாசய்யங்கார், விவேகானந்தர் போன்றவர்கள் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளனர். அராபியன் நைட் போன்ற பஞ்சதந்திரக்கதைதான் இராமாயணம் என்று எழுதியுள்ளனர்.

கிளி பேசியது, கருடன் பேசியது, குரங்கு பேசியது, அணில் மண் சுமந்தது என்றெல்லாம் அதில் எழுதியுள்ளனர். அணில் மண் சுமந்து பாலம் கட்ட உதவியதால் இராமர் அதனைத் தடவிக் கொடுத்தார். அதனால்தான் அதன் முதுகில் மூன்று கோடுகள் வந்தது என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார்கள்.
அணிலை இராமர் தடவிக்கொடுத்ததால் அதன் முதுகில் கோடுகள் என்றால் சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? சீதையை இராமர் தொடவே இல்லையா என்று பெரியார் கேட்டார். பெரியார் படத்தில் வரும் அந்தப் பாடல் வரிகளை எதிர்த்து நீதிமன்றம் சென்று அது தள்ளுபடியானது நிகழ்காலச் செய்தி.

இராமர் பாலம் என்பதை நாசா சொன்னது என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார்கள். அதனை நாசா உடனடியாக மறுத்தபிறகும் மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அந்தப் பொய்யை மதவாதிகள் கூறி வருகிறார்கள்.

அங்கே இருப்பது மணல் திட்டுக்களும் பவளப்பாறைகளும்தான். இதுபோன்ற திட்டுக்களும் பாறைகளும் கடலின் அடியில் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாக் கண்டத்திற்குக் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கும் மேல் நீண்ட நெடிய பவளப்பாறைகள் காணப்படுகின்றன. அதுபோன்றதுதான் இராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாறைகளும். இந்தப் பாலத்தை இராமன் கட்டினான் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள அதனைக் கட்டியவர் யார்?

பாலம் என்றால் கடலுக்கு மேலேதானே இருக்க வேண்டும்? இராமன் கடவுள். அவன் பாலம் கட்டினான் என்றால் அந்தப் பாலம் எப்படிக் கடலுக்கு அடியில் போனது? அதற்கு ஒரு பாதிப்பு என்றால் அதனைக் கடவுள் காப்பாற்ற மாட்டானா? அந்தப் பாலத்தை அனுமான் காத்து வருகிறான் என்றால் அது கடலுக்கு அடியில் போக எப்படி அவன் அனுமதித்தான்?

இராமனுக்கும் அனுமானுக்கும் இப்பொழுது சக்தி இல்லையா? எதற்காக இராமகோபாலன்ää இல கணேசன், அசோக் சிங்கால், அத்வானிகள்? கூடவே இராமாயணத்தை தீவைத்துக் கொளுத்தினால்தான் தமிழன் விடுதலை பெறுவான் என்று கூறிய அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் ஜெயலலிதா?
இராமனைவைத்து வடநாட்டில் ஆட்சியைப் பிடித்ததுபோல தமிழகத்திலும் இந்தப்பிரச்சினையை மதவாதிகள் கையிலெடுத்திருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகள் நாட்டில் எவ்வளவோ இருக்க இதுபோன்ற மதப்பிரச்சினைகளைக் கையிலெடுப்பது கடைந்தெடுத்த பிற்போக்குவாதமாகும். அது தந்தை பெரியார் பிறந்த தமிழகத்தில் எடுபடாது என்று எச்சரிக்கிறோம்.

இராமர்பாலம் என்ற மதவாத கற்பனையை முறியடிப்போம்!      சேதுசமுத்திரத் திட்டத்தைத் திட்டமிட்டபடி நிறைவேற்றச் செய்வோம்!!
10-05-2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக