வியாழன், 13 அக்டோபர், 2016

Ambedkar thoughts



~~உங்களுடைய கழுத்தில் உள்ள துளசிமாலை ஈட்டிக்காரன் பிடியிலிருந்து உங்களை மீட்காது. நீங்கள் இராமனைப்பற்றி பக்திப்பாடல்களைப் பாடுவதால் நிலப்பிரபுவிடமிருந்து குத்தகையில் சலுகை கிடைத்துவிடாது. ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் புனித யாத்திரை போவதால் மாதக்கடைசியில் உங்களுக்கு சம்பளம் ஏதும் கிடைத்து விடாது. சமூகத்தில் பெரும்பாலோர் இதுபோன்ற அர்த்தமற்ற கற்பனைகளிலும் மூடநம்பி;க்கைகளிலும் மாயங்களிலும் மூழ்கிக் கிடப்பதால்தான் தன்னலம் மிக்க புத்திசாலிகள்(?) சமூகத்திற்கு எதிராகத் தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு தாராள வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கின்றன||

“உங்களுடைய துன்பங்கள் முன்கூட்டியே தலைவிதியால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்ற மூடத்தனமான நம்பிக்கையை எவ்வளவு விரைவில் விட்டொழிக்கிறீர்களோ அந்த அளவிற்கு நல்லது”
“பகவத்கீதை சாதி அமைப்பு முறையையும் படிநிலை முறையிலான ஏற்றத் தாழ்வுகளையும் இந்துச் சமூக வாழ்வின் சட்டமாக ஆக்கியது”

“பசித்துக் கிடக்கும் மக்கள் பக்தி என்ற வலையிலோ தம்மால் எதையும் செய்ய இயலாது என்ற சிந்தனையிலோ தலைவிதியையோ ஆண்டவன் கட்டளையையோ நம்பக்கூடாது”
“மேலுலகம் பற்றிய சிந்தனை கூடாது. தங்களின் தாழ்நிலைக்குக் காரணம் கடவுள் கட்டளை என்று எண்ணக்கூடாது. மூடபக்தியைத் தூக்கி எறியுங்கள்”

“உங்களுடைய சிந்தனையை இவ்வுலகில் அனுபவிக்கப் பெற வேண்டியவற்றின் மீது செலுத்தாமல் தாம் பார்த்தறியாத மேலுலகம் பற்றிய கருத்துக்களில் மயங்கிக் கிடப்பதால் உயிர் வாழ்வதற்கே கடுமையாய்ப் போராட வேண்டியிருக்கிறது. உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பெறுவதற்கு முயல்வதைப்பற்றி மக்கள் கவலைப்படாதவர்களாகி விட்;டார்கள். அதனால் நாடே பின்தங்கி விட்டது. நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சி பெறாமல் தேக்கமடைந்துவிட்டது”

13.04-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக