வியாழன், 13 அக்டோபர், 2016

சமுதாயத்தில் நிலவுகின்ற அனைத்துக் கேடுகளுக்கும் மூலகாரணம் ஜாதிதான்


 சமுதாயத்தில் நிலவுகின்ற அனைத்துக் கேடுகளுக்கும் மூலகாரணம் ஜாதிதான் சமுதாயத்தில் நிலவும் கல்வி அறிவின்மை, வறுமை, வேலையின்மை, இலஞ்சம், ஊழல் அனைத்துக் கேடுகளுக்கும் காரணம் இந்த ஜாதிதான் என்றார் அம்பேத்கர்.    ஜாதி மிகமிக இழிவானது என்றார் தந்தை பெரியார். ஏனெனில் இந்து மதத்தில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்கள் இருந்தன. இதில்; காலாகாலத்திற்கும் உடல் நோகாமல் உண்டு கொழுப்பதற்கான ஏற்பாட்டை மனுதர்மத்தின்மூலம் பார்ப்பனர்கள் செய்து வைத்துக் கொண்டார்கள். சூத்திரன் அவனுக்கு மேலுள்ள மூன்று வருணத்தானுக்கும் மனங்கோணாமல் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பது மனுதர்மம்;. அந்த சூத்திரன் யாரென்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்கிறது அந்த மனு(அ)தர்மம்.

 இது இழிவு. மானமுள்ள ஒவ்வொருவரும் அந்த ஜாதியை ஒழிக்க முன்வரவேண்டும் என்றார் பெரியார். 1929 முதல் ஜாதி ஒழிப்புக்கான தீர்மானங்களை பல மாநாடுகளில் இயற்றி அதற்காகக் கடுமையாகப் போராடினார். உழைத்தார். அதன் காரணமாக தமிழகத்தில் ஜாதியைப்பற்றிப் பெருமையாகப் பேசுகின்ற வழக்கமோää ஜாதிப்பேரை பெயருக்குப்பின்னால் போடுவதோ இழிவாகக் கருதக்கூடிய நிலை உருவானது. ஆனால் தற்பொழுது சிலர் இந்த ஜாதியைப் பாதுகாக்க வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள். ஜாதியைப் பெருமையாகப் பேசப்புறப்பட்டுள்ளார்கள். ஜாதியை எல்லாம் ஒழித்து விட்டால் செருப்புத்தைப்பது, துணி வெளுப்பது, முடிதிருத்துவது, பிணம் சுடுவது, சாக்கடை அள்ளுவது போன்ற தொழில்களை யார் செய்வது என்று கேட்கிறார்கள். அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம்

 பார்ப்பனர் அவர்களது ஜாதி தர்மப்படி கோயிலில் மணியடித்துக்கொண்டு உஞ்சிவிருத்தி செய்து சாப்பிடுவதுதானே அவர்களது தொழில்? மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 102ன்படி பிராமணர்கள் சிலத்தினாலாவது உஞ்சத்தினாலாவது ஜீவிக்கலாம் என்கிறது.  வயலில் கொத்தாக சிதறிக்கிடக்கும் நெல்லைப் பொறுக்கிச் சாப்பிடுவது சிலம். உஞ்சம் என்றால் வயலில் தனித்தனியாகச் சிந்திக்கிடக்கும் நெல்லைப் பொறுக்கித்தின்பது. இன்றைக்கு எத்தனை பார்ப்பான் இப்படிப் பொறுக்கித் தின்கிறான்? அத்தியாயம் 4 சுலோகம் 64ன்படி பிராமணர்கள் கூத்தாடுவதும் பாடுவதும், மத்தளம் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் கூடாது. இது சாஸ்திர விரோதம் என்கிறது மனுதர்மம். அதுபோல் பிராமணன் இரத்தம் பார்க்கும் தொழிலான மருத்துவம் பார்க்கக் கூடாது என்று அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரி சடங்குகளின் கதை என்ற நூலில் எழுதுகிறார். பார்ப்பான் வட்டி வாங்கக் கூடாது என்பதும் மனுதர்மம். சுந்தரம் ஃபனான்ஸ், ஸ்ரீராம் சிட்ஃபன்ட்ஸ் எல்லாம் யாருடையது? இதையெல்லாம் எந்தப் பார்ப்பானாவது கடைப்பிடிக்கிறானா? சூத்திரன் செய்யக்கூடிய  தொழில்கள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்துகொண்டு சத்திரியர் செய்ய வேண்டிய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி எல்லா தர்மங்களையும் மீறுவார்களாம். கீழ்ஜாதிக்காரன் மட்டும் அவரவர் தொழிலைச் செய்ய வேண்டுமாம்.

 ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழிலை மனுதர்மம் கற்பிக்கிறது.  ஜாதியைப் பாதுகாக்க விரும்பும் நீங்கள் முதலில் உங்கள் ஜாதிக்கென்று உள்ள தொழிலைச் செய்து உங்கள் குலதர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.

 ஜாதியை ஒழிக்க விரும்புபவர்கள் அவரவர் விரும்புகின்ற தொழிலைச் செய்யட்டும். சமுதாயத்தின்மீது அக்கறையுள்ளவர்களாக நீங்கள் இருந்தால் இந்தத் தொழில்களையும் அதாவது செருப்புத் தைப்பதுää துணி வெளுப்பது, சிரைப்பது, பிணம் சுடுவது போன்ற தொழில்களையும் சேர்த்துச் செய்து சமுதாயத்திற்குத் தொண்டு செய்யலாமே! சக்கிலியன் தைத்தால்தான் தோலில் ஆணி இறங்குமா? நீங்கள் தைத்தால் ஆணி இறங்காதா? வண்ணான் வெளுத்தால்தான் துணியிலுள்ள அழுக்குப் போகுமா?  நீங்கள் வெளுத்தால் அழுக்குப் போகாதா? எவ்வளவு காலத்திற்கு அவர்களே அத்தொழிலைச் செய்வது? கொஞ்ச காலத்திற்கு நீங்களும் அதனைச் செய்து அதனை உங்கள் குலத்தொழிலாக ஆக்கிக் கொள்ளலாமே!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக