திங்கள், 17 அக்டோபர், 2016

தமிழனுக்குப் புத்தாண்டு தை ஒன்றா? சித்திரை ஒன்றா? இரண்டுக்கும் என்ன வேறுபாடு?


 தமிழனுக்குப் புத்தாண்டு தை ஒன்றா?  சித்திரை ஒன்றா? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? 

 சித்திரை 1 கிருஷ்ணனை அடிப்படையாகக் கொண்டது.
தை 1 திருவள்ளுவரை அடிப்படையாகக் கொண்டது.

திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். கிருஷ்ணன் நான்கு வருணங்கள் உண்டு என்கிறான். திருவள்ளுவர் ஒழுக்கமே உயர்வானது என்கிறார். கிருஷ்ணன் ஏராளமான பெண்களுடன் சல்லாபம் செய்கிறார். திருவள்ளுவர் உழவுத் தொழில் உயர்வானது என்கிறார். கிருஷ்ணன் ஏர்பிடித்தல் பாவம் என்கிறான்.

திருவள்ளுவர் திருடக்கூடாது என்கிறார். கிருஷ்ணன் சின்ன வயதில் வெண்ணெய் திருடினான். பெரிய வயதில் பெண்ணைத் திருடினான். திருவள்ளுவர் கொலை செய்தல் பாவம் என்கிறார். கிருஷ்ணன் கொலை செய்வதில் தவறில்லை என்கிறான். திருவள்ளுவர் கள்ளுண்ணல் பாவம் என்கிறார். கிருஷ்ணன் சுரா பானம் சோமபானம் அருந்தும் கூட்டத்தின் தலைவன்.
திருவள்ளுவர் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்கிறார். கிருஷ்ணன் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்கிறான்.

 திருவள்ளுவர் அனைவரையும் கல்வி கற்கச் சொல்கிறார். கிருஷ்ணன் சூத்திரனுக்குக் கல்வி கூடாது என்கிறான். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பது திருவள்ளுவர் வாக்கு. சூத்திரன் வேதத்தைக் காதால் கேட்கக்கூடாது என்பது கண்ணனின் தத்துவம்.

பெண்ணுக்குக் கற்பு அவசியம் என்பது திருவள்ளுவர் தத்துவம். கற்பைப் பற்றிய கவலை கண்ணனுக்கில்லை. சூதாடுதல் தவறு என்பது திருவள்ளுவர் கொள்கை. சூதாட்டத் தலைவன் தருமருக்கு உடந்தை கிருஷ்ணன். மானம் மனிதனுக்கு உயிர் போன்றது என்பது திருவள்ளுவர் கோட்பாடு. மானத்தைப் பற்றிய கவலை கண்ணனுக்கில்லை. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது வள்ளுவர் வாக்கு. எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்காதே! அப்படியே நம்பு! என்பது கண்ணனின் தத்துவம். பொய் சொல்லுதல் பாவம் என்பது திருவள்ளுவர் கோட்பாடு. அவனும் பொய் சொல்லி மற்றவரையும் பொய் பேச வைத்தவன் கண்ணன். ஏமாற்றுதல் தவறு என்பது திருவள்ளுவர் தத்துவம். கர்ணனையே வஞ்சித்து ஏமாற்றியவன் கண்ணன். அந்தணர் என்பர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்பது திருவள்ளுவர் வாக்கு. முகத்தில் பிறந்தோரே முதல் வருணத்தார் என்பது கண்ணனின் கோட்பாடு! உழவர்க்குப் பின்னால்தான் மற்றவர் என்பது வள்ளுவர் வாக்கு. பிராமணர்க்குப் பின்னால்தான் மற்றவர் என்பது கண்ணனின் தத்துவம். பிச்சை எடுத்துத்தான் ஒருவன் உண்ண வேண்டும் என்ற நிலை இருந்தால் நாட்டைக் காக்கும் மன்னன் ஒழியட்டும் என்பது திருவள்ளுவர் கூற்று. பிச்சை எடுத்தல் அவனவன் தலைவிதி என்பது கண்ணனின் கோட்பாடு. ஒருவனுக்கு ஒருத்தி என்பது திருவள்ளுவர் கோட்பாடு. அய்வருக்குந் தேவி@ அழியாத பத்தினி என்பது கண்ணன் போற்றும் பாரதக் கோட்பாடு!

 இப்படி ஏராளமான வேறுபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் திருவள்ளுவரின் கூற்று எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதாய் தமிழரை உலக அரங்கில் உயர்த்தக் கூடியதாய் அமைந்துள்ளது. கண்ணனின் கோட்பாடு தமிழரைத் தாழ்த்துவதாய் அமைந்துள்ளது. அதனால்தான் திருவள்ளுவர் பிறப்பை அடிப்டையாகக் கொண்டு தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று  தமிழர் வாழ்வில் அக்கறையுள்ள மறைமலையடிகள்ää திருவிக போன்ற சான்றோர் பெருமக்கள் அறிவித்தனர். அதனை ஏற்று தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாய் நாமும் கொண்டாடுவோம். தரணியில் தமிழனின் மானத்தையும் அறிவையும் காப்பாற்றுவோம்.

 திருவள்ளுவர் ஆண்டு என்பது பொதுக்கணக்கு ஆண்டிலிருந்து 31 அய்க் கூட்டினால் வருதாகும். 2012 10 31 ஸ்ரீ 2043  என்பது இவ்வாண்டாகும்.      தமிழால் வாழ்வோம்! தமிழராய் வாழ்வோம்!! நாட்டையும் மொழியையும் இனத்தையும் உயர்த்துவோம்! அனைவருக்கும் தை -1 தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக