திங்கள், 17 அக்டோபர், 2016

கோட்ஷே ஆர்எஸ்எஸ் இல்லை என்பது கோழைத்தனமானது.


இன்றைய ஊடகங்களில் நேருக்குநேர் விவாதங்களில் ஈடுபடும் பிஜேபிக்காரர்கள் காந்தியைக்கொன்ற கோட்ஷே ஆர்எஸ்எஸ் காரர் என்றால் உடனே தாண்டிக் குதித்து அதனை மறுப்பார்கள். ஏதோ நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பவர்கள்போல நீதிமன்றமே கோட்ஷே ஆர்எஸ்எஸ் இல்லை என்று சொல்லி விட்டது என்று சொல்லி அதனை நீட்டி முழக்குவார்கள்.
நீதிமன்றம் கோட்ஷே ஆர்எஸ்எஸ் இல்லை என்று மட்டுமா சொன்னது? காஞ்சிபுரத்து வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளரைக் கொன்றது சங்கராச்சாரி இல்லை என்றுகூடத்தான் சொன்னது. சங்கரராமன் மகன் சொன்னார் ~எங்கப்பாää தன்னைத் தானே அரிவாளால் வெட்டிக் கொண்டு செத்துப் போனாரா?| என்று கேட்டார். இந்தக் காலத்திலேயே இவ்வளவு பித்தலாட்டமாகத் தீர்ப்புக்கள் வாங்கப்படுகிறது என்றால் அந்தக் காலத்தில் சொல்லவா வேண்டும்? 2014லேயே 31 உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூடக் கிடையாது. ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டவர்தான். அவரும் ஏப்ரல் மாதம் ஓய்வுபெற இருக்கிறார். இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் சேர்த்தே 20 பேர்தான் தாழ்த்தப்பட்ட நீதிபதி. அதில் தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் எட்டுப்பேர். இந்த லட்சணத்தில் நீதித்துறை 1948ல்;;;;;;;;;;; யார் கையில் இருந்திருக்கும்;? முழுக்க அவாள் கையில்தானே! அப்படியிருக்க நீதிமன்றம் வேறு மாதிரி எப்படித் தீர்ப்பளிக்கும்? இதை வைத்து கோட்ஷே ஆர்எஸ்எஸ் இல்லை என்று கதறுகிறார்களே! இது சரியா?

இவர்கள் கதறுவது இருக்கட்டும். கோட்ஷேயின் குடும்பத்தினர் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்? நாதுராம் கோட்ஷேயின் தம்பி கோபால் கோட்ஷே என்ன கூறினார்? இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரன்ட் லைன் (Frontline) 28-1-1994 இதழில் வந்ததே:
கேள்வி : ஆர்எஸ்எஸிற்கும் நாதுராம் கோட்ஷேவிற்கும் சம்மந்தம் இல்லையென்று அத்வானி கூறியிருக்கிறாரே?

கோபால் கோட்ஷே: இது கோழைத்தனமானது. அத்வானியின் கூற்றை நான் மறுக்கிறேன். ~போ, காந்தியைக் கொல்லு| என்று ஆர்எஸ்எஸ் தீர்மானம் போடாமல் இருக்கலாம். ஆனால் நாதுராம் கோட்ஷேவுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் சம்மந்தமேயில்லையென்று கூற முடியாது. அவர் ஆர்எஸ்எஸ்ஸின் அறிவுப்பூர்வப் பணியாளராக இருந்து இந்துமகாசபையில் பணியாற்றினார்.
கேள்வி: நாதுராம் கோட்ஷே ஆர்எஸ்எஸில்தான் இருந்தாரா? அதைவிட்டு வெளியேறவில்லையா?
பதில்: நாதுராம் கோட்ஷே ஆர்எஸ்எஸ்ஸை விட்டு தான் விலகியதாக கொலைக் குற்றவாளியாகக் கூண்டில் ஏற்றப்பட்ட போது கோட்ஷே கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் என்பது உண்மைதான். காந்தியார் படுகொலை செய்யப்பட்ட சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கருக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அவர் அப்படிக் குறிப்பிட்டார். ஆனால் கோட்ஷே உண்மையில் ஆர்எஸ்எஸ்ஸை விட்டு விலகவே இல்லை என்று கோபால் கோட்ஷே கூறியுள்ளாரே!                                

 இதற்குப்பிறகும் யாரைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும்?
காந்தி கொலையில் தூக்கிலிடப்பட்ட கோட்ஷேயும் நாராயண் ஆப்தேயும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு கடைசியாகப் பாடிய பாடல் என்ன? ஆர்எஸ்எஸ் ஷாகாவில் பாடப்படும்  “நமஸ்தே சதா வாத் சலே மாத்ரு பூமி” என்ற பாடல்தானே? இந்தப் பாடல் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு மட்டும்தானே தெரியும்? அது எப்படி கோட்ஷேவுக்குத் தெரிந்தது?     ஆக உலக உத்தமர் என்று அழைக்கப்பட்ட காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் தொடர்பு இல்லை என்பது வடிகட்டின பித்தலாட்டம் என்பது விளங்கவில்லையா? அந்த ஆர்எஸ்எஸ்தான் மோடியை பிரதமராக முன்னிறுத்துகிறது! உண்மையான நாட்டுப் பற்றாளர்களே! இனியும் மோடியை ஆதரிக்கப் போகிறீர்களா? காந்தி கொலைகாரர்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகிறீர்களா? சிந்திப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக