வியாழன், 13 அக்டோபர், 2016

இந்து மதத்தின் தத்துவம் உயர்சாதி மனிதனின் சொர்க்கம், சாமான்ய மனிதனின் மீள முடியாத நரகம்




~~இந்துமதம் சாதாரண மனிதனின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. இந்து மதத்திற்கு ஒட்டுமொத்தமான சமூக ஆர்வமும் இல்லை. அதனுடைய ஆர்வமெல்லாம் ஒரு தனி வகுப்பாரைச் சார்ந்ததாகவே உள்ளது. அந்த வகுப்பாரின் நலனைக் கட்டிக் காத்து உதவுவதே அதன் தத்துவத்தின் முக்கிய நோக்கம். எனவேதான், மாமனித வகுப்பாரின் நலன்களுக்காகச் சாதாரண மனிதர்களின் நலன்களையும் சமூகத்தின் நலன்களையும் இந்துமதத் தத்துவம் மறுத்திருக்கிறது ,ஒடுக்கியுள்ளது, பலியிட்டுள்ளது||
~~இந்து மதத்தின் தத்துவம் உயர்சாதி மனிதனின் சொர்க்கம், சாமான்ய மனிதனின் மீள முடியாத நரகம்||
அதற்கு ஆதாரம் மனுதர்மம் ஆகும். அந்த மனுதர்மம் கீ;ழ்க்கண்டவாறு கூறுகிறது.
~~பிறவியின் மேன்மையினால் படைப்புலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தையும் தனக்குரிய செல்வமாகப் பெறுவதற்குப் பிராமணன் உரிமை பெற்றிருக்கிறான்||

~~அரசன் காலையில் துயிலெழுந்து, மூன்று வேதங்களையும் அறநூல்களையும் ஆய்ந்துணர்ந்த பிராமணரை வணங்கி வழிபட்டு அவர் அறிவுரையைப் பின்பற்றி நடப்பாராக||
~~பிராமணன் எத்தகைய ஒழுக்கம் கெட்டவனாக பிறர்மனை நயப்பவனாக இருந்தபோதிலும் அவனைக் கொல்லக் கூடாது, அவனது தலையை மழித்து அவமானப் படுத்துவதோடு நிறுத்திவிட வேண்டும். இதே குற்றத்தைச் செய்த மற்றையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்||
~~ பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூவர் மட்டுமே வேதங்களைக் கற்பதற்கு உரிமையுள்ளவர்கள் இந்த மூவருக்குள்ளும் பிராமணர்கள் மட்டுமே வேதங்களை ஓதுவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள் சூத்திரர்களைப் பொறுத்தவரை வேதங்களைப் படிக்கவோ வேதமோதுவதைக் கேட்கவோ கூடாது|| என்று மனுதர்மம் திட்ட வட்டமாகக் கூறுகிறது.

மனுவுக்குப்பின் வந்த காத்யாயனரும் கவுதமரும் பின்வருமாறு கூறியுள்ளனர் ~~சூத்திரன் வேதத்தைப் படித்தால் அவன் காதுகளில் காய்ச்சி உருக்கிய ஈயத்தையும் அரக்கையும் ஊற்ற வேண்டும்@ அவன் வேதமோதினால் அவனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அவன் வேதங்களைக் கற்றறிந்து அவற்றில் புலமை பெற்றால் அவனது உடலைக் கண்டதுண்டமாக வெட்டி எறிய வேண்டும்||
~~சூத்திரன் பொருள் ஈட்டத் தக்கவனேயானாலும் அவன் தனது தேவைக்கு மேலாகப் பொருள் ஈட்டக் கூடாது. அடிமை போன்ற அவன் பொருள் சேர்த்துப் பணக்காரனாக மாறினால் தற்பெருமைக்குரியவனாவான். தனது அகங்காரத்தால் அல்லது அலட்சியத்தால் பிராமணனுக்கு அவன் துன்பம் விளைவிப்பான்|| என்று மனுதர்மம் கூறுகிறது.
                    (ஆதாரம் : அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும், தொகுதி- 6 )
இப்பொழுது தெரிகிறதா?

~~இந்து மதத்தின் தத்துவம் உயர்சாதி மனிதனின் சொர்க்கம், சாமான்ய மனிதனின் மீள முடியாத நரகம் என்ற அம்பேத்கரின் கூற்று எவ்வளவு உண்மையென்று







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக