வெள்ளி, 21 அக்டோபர், 2016

அதேபோல இராமனையும் செருப்பால் அடித்தார். அப்பொழுதும் ரோஷப்பட்டு இராமன் அவதரிக்கவில்லை.

 உலக மக்களைப் படைத்தது பிரம்மா, காப்பது விஷ்ணு, அழிப்பது சிவன் என்று கதைகள் கட்டினர் பார்ப்பனர். இராமன் விஷ்ணுவின் அவதாரமாம். பிரம்மா படைத்ததை அவன்தான் பாதுகாப்பானாம். அவன் இராமனாக அவதரித்துக் கட்டினானாம் பாலம். அது இப்பொழுது இருக்குமிடம் தெரியாமல் அழிந்துபோய் அதை அமெரிக்காக்காரன் கண்டுபிடித்துக் கொடுத்தானாம். அதையும் இந்த மிலேச்சர்கள் அழிக்க சேது சமுத்திரத்திட்டத்தை அமல் படுத்துகிறார்களாம்

 இப்பொழுது இராமனுக்கு அதாவது விஷ்ணுவுக்கு சக்தி இல்லைபோல் தெரிகிறது. அவனால் அதைக்காக்கமுடியாமல் போகவே இவாளெல்லாம் அதைக் காக்கப் புறப்பட்டுவிட்டார்களாம். பிரம்மாவால் உருவாக்கியதையே காப்பாற்றும் சக்திபடைத்த விஷ்ணு, தான் படைத்ததை ஏன் காக்க முடியவில்லையோ தெரியவில்லை. அவனுக்கு சக்தி இல்லை என்பதை இவாள் உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ இவாளே அதைக் காக்கப் புறப்பட்டுட்டா போலிருக்கு.

தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றபொழுது நானே அவதரித்து தர்மத்தைக் காப்பேன் என்றானாம் கண்ணன். அதாவது விஷ்ணு. அவன் கட்டிய பாலத்தை இடிப்பது அவனுக்கு அதர்மமாகத் தெரியவில்லைபோலிருக்கு. அதனால்தான் அவன் அவதரிக்கவில்லைபோலும். ஆனால் இவாளுக்கு அது அதர்மமாகப் படுகிறது. அவனும் அவரிப்பதாகத் தெரியவில்லை. எவனெவனோ நான்தான் கல்கி அவதாரமென்கிறான். அதையும் இவா நம்பத் தயாராக இல்லை. என்ன செய்வது?
 அவாளே களத்தில் இறங்கிட்டா.

முதல் கட்டமாய் மதுரையில் உண்ணாவிரதம் இருந்தாளாம். (காலையில் ரெண்டு மூணு டஜன் இட்டிலிமட்டும். இரவில் பருப்பு நெய் வடை பாயசத்துடன் சாப்பாடு. இதற்குப்பெயர் உண்ணாவிரதம்) இரண்டாம் கட்டமாய் திருச்சியில் உபவாசமாம். (அதுவும் ஒருவனே தேவன்; என்ற அண்ணா சிலைக்குப் பக்கத்திலாம். அவர் சொன்ன ஒருவனே தேவன் இராமனா? அவர்தானே இராமாயணத்தைத் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்றார். அவரை எப்படி இவர்கள் துணைக்கு அழைக்க முடியும்?) உண்ணாவிரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று புரிகிறது. ஆனால் உபவாசம் என்றால் என்ன எழவோ ஒன்னும் புரியவில்லை. அதுவும் சாப்பிடாமல் இருப்பதுதான் என்று இவ்வளவு நாளாய் நினைத்துக்கொண்டிருந்தோம். இப்பொழுது வேறு ஏதோ அர்த்தம் போலிருக்கிறது. எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும்.

 ஆனால் முடிவில் அற்புதங்கள் நிகழும் என்கின்றார். என்ன அற்புதம் என்றுதான் புரியவில்லை. பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் நடத்தினார். உடைப்பதற்கு முன் அதனைத்தூக்கி வைத்துக்கொண்டு உடைக்காமல் சிறிதுநேரம் வைத்திருந்தார். ஏனய்யா என்று தொண்டர்கள் கேட்டதற்கு ~இந்தப் பார்ப்பானெல்லாம் கதைவிடுறது மாதிரி பிள்ளையார்னு ஒன்னு உண்மையா இருந்தா திடீர்னு வந்து தன்னை உடைப்பதைத் தடுப்பானா என்று பார்த்தேன். அவன் வரவில்லை. அதனால் இப்பொழுது உடைக்கிறேன்| என்றாராம்.

அதேபோல இராமனையும் செருப்பால் அடித்தார். அப்பொழுதும் ரோஷப்பட்டு இராமன் அவதரிக்கவில்லை. அப்படியெல்லாம் வந்திருந்தால் அற்புதம் என்று நாமும் ஏற்றுக்கொண்டிருக்கலாம். பெரியார்கூட இராமபக்தராய் மாறியிருக்கலாம். அப்பொழுதெல்லாம் நடக்காத அற்புதம் இப்பொழுது நடக்கப் போகிறதாமே!

 அதிலேயும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் தெரிகிறது. அதனால்தான் அடுத்த கட்டமாக பருப்பு நெய் நவதானியங்கள் போன்ற உணவுப்பொருட்களையெல்லாம் நெருப்பில் போட்டு யாகம் நடத்தப்போவதாய் இராமகோபாலய்யர் சொல்லியிருக்கார். கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் தஞ்சைப் பெரியகோயிலில் யாகம் நடத்தினபோது நூற்றுக்கணக்கானோர் இறந்துபோனார்கள். ஆனால் யாகம் நடத்திய ஒரு பார்ப்பான்கூட அதில் சாகவில்லை. அது வேண்டுமானால் அவாளுக்கு அற்புதமாகத் தெரியலாம்.

 எப்படியோ கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. எல்லாம் பார்ப்பனர் புரட்டு என்ற கருத்துக்கு வலிமை உண்டாகிக்கொண்டிருப்பதை அவாளால் மறுக்க முடியவில்லை. அதனால்தான் கடவுளிடம் போய் முறையிடாமல் இவாளே களத்தில் இறங்கியிருக்கிறார்.
 என்ன செய்வது? பார்ப்பான் உயர்ந்தவன் என்ற தத்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமே!
பக்தியில் முழுகிக் கிடக்கும் பாமரனை மயக்க இப்படி ஏதாவது கதைவிட்டால்தானே அவாள் பிழைப்பு நடக்கும்?

உண்ணாவிரதம் இருந்தாலும் உபவாசம் இருந்தாலும் அற்புதம் எதுவும் நடக்காது. தின்னுவிட்டுத் தின்னுவிட்டு கொழுப்பேறிக்கிடக்கும் அவாளுக்கு அந்தக் கொழுப்பு வேண்டுமானால் கொஞ்சம் குறையலாம். அப்படி நடந்தால் அவாளுக்கு அதுவேண்டுமானால் அற்புதமாய் இருக்கலாம். வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.                     
இப்படிக்கு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக