திங்கள், 17 அக்டோபர், 2016

பெரியார் - மணியம்மை திருமணத்தைப்பற்றி


 பெரியார் - மணியம்மை திருமணத்தை ஏற்றுக்கொண்டு அண்ணா தனது ஆட்சியையே பெரியாருக்குக் காணிக்கை என்று சொல்லி விட்டார். பேராசிரியர் அன்பழகன் அவர்கள்கூட நாங்கள் அரசியலுக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்தோம். வெளியேறுவதற்கு இது ஒரு காரணமாகப் பயன்பட்டது என்று சொல்லி விட்டார்.

பெரியாரும் அண்ணாவும் ஒன்றான பிறகு உனக்கு என்ன அதைப்பற்றிக் கவலை? சம்மந்தப்பட்டவர்கள் ஒத்துக்கொண்டாலும்; ஒத்துக்கொள்ளவிடாத பார்ப்பன வக்கீல் மாதிரி நீ ஏன் அதனைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறாய்?     

ஏன் மகளாக ஸ்வீகாரம் எடுக்கவில்லை? என்று அறிவுப்பூர்வமாகக் கேட்டுவிட்டார்களாம். தனக்குத்தானே முதுகில் தட்டிக் கொள்ள வேண்டியதுதான். பெரியார் மணியம்மையைத் திருமணம் என்ற ஏற்பாட்டின்படி தனது சொத்துக்கள் தனக்குப்பிறகு தன்னுடைய கொள்கையைப் பிரச்சாரம் செய்யவும் பொதுமக்களுக்குப் பயன்படவுமான ஏற்பாட்டைச் செய்தது 1949ல்.

வாரிசுரிமைச்சட்டம் வந்தது 1956ல். அதனால் சட்டப்படி மணியம்மையை வாரிசாக்க அன்று சட்டத்தில் இடமில்லை. உன்னுடைய அர்த்தமுள்ள இந்துமதம் பெண்ணை ஒரு மனிதப்பிறவியாகவே மதிக்கவில்லை. ஆடு, மாடு, மனை போல பெண்ணும் ஆணின் உடைமைதான். பெண்ணுக்கு சொத்துரிமையும் கிடையாது. சொத்துரிமைக்கு சட்டம் வந்த போது செத்துப்போன சங்கராச்சாரி ~லோகமே அழியப் போறது, ஸ்த்ரீகளுக்கெல்லாம் சொத்தில பங்கு கொடுத்துட்டா அவாள்லாம் இஷ்டப்பட்டவாளுடன் ஓடிப்போயிடுவா| என்று கூறி அதனைத் தடுக்க என்னென்ன தகிடுதத்தங்களை; செய்தார் என்பதை ~இந்துமதம் எங்கே போகிறது?| என்ற நூலில் தாத்தாச்சாரி; கிழி கிழி என்று கிழித்து விட்டாரே!

                  மணியம்மையை ஸ்வீகாரம் செய்யவும் முடியாது. சொத்தை எழுதி வைக்கவும் முடியாது. அப்படியே எழுதி வைத்தாலும் அவருடைய இரத்த சம்பந்தமான உறவினர்கள் அதாவது அவருடைய அண்ணன் மகன் போன்றவர்கள் வழக்குப் போட்டு அதனைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஆனால் சட்டப்படி மனைவி என்ற அந்தஸ்து கொடுத்து அவர் பெயரில் சொத்துக்களை எழுதி வைத்தால் சட்டப்படி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் இந்த ஏற்பாட்டைப் பெரியார் மிகவும் ஆழ்ந்து யோசித்து தன்னுடைய எதிரிகளும் உன்னைப் போல அரைவேக்காடுகளும் தன்னைப்பற்றி தவறாகப் பேசுவார்கள் என்று தெரிந்திருந்தும் துணிச்சலாக சமுதாய நன்மைக்காக இந்தக் காரியத்தைச் செய்தார்.             

சுயமரியாதைத் திருமணம் ஏன் செய்யவில்லை என்று இன்னொரு புத்திசாலித்தனமான கேள்வி! உன்னுடைய அறியாமைக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். சுயமரியாதைச்சட்டம் 1967ல் அண்ணா முதலமைச்சரான பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு செய்யப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று 1957லே தீர்ப்புக்கூட வந்துள்ளது. எதையும் சட்டப்பாதுகாப்புடன் செய்ய நினைத்த பெரியார் எப்படி 1949லேயே அதனை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும்?            

இப்படி எதையுமே ஆராயாமல், ஆதாரம் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் பேசுவதுதான் உனக்கு வாடிக்கை. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பார்ப்பனர் யாருமே இல்லை. அப்படி இருந்தால் பட்டியல் கொடு. உடனே அவர்களை அங்கிருந்து துரத்த நடவடிக்கை எடுக்கிறோம்.        

 இந்துமுன்னணி என்றால் நீ யாருக்குப்பிரதிநிதி? நீ அமைக்கப்போகும் இராமராஜ்யத்தில் ஒரு சூத்திரன் சந்நியாசி ஆக முடியுமா? இராமாயணத்தில் கடவுளை நோக்கி தவமிருந்த சூத்திர சம்பூகனை இராமன் கொன்ற கதை இருக்கிறதா? இல்லையா? அந்த இராமராஜ்யத்திலாவது சங்கரமடத் தலைவராகத் தாழ்த்தப்பட்டவரை நியமிப்பாயா?

அடுத்து வீரமணி அவர்களின் மகன் பற்றியது. வீரமணி அவர்கள் தனது மகனை வாரிசாக நியமிக்கவும் இல்லை. அறக்கட்டளையில் உறுப்பினராக ஆக்கவும் இல்லை. இங்கு சங்கர மடத்தைப்போல் இன்ன ஜாதிக்காரர்தான் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற சட்டமும் இல்லை. நீயும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதே! இவண்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக