வெள்ளி, 21 அக்டோபர், 2016

பெரியார் ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், திருப்பம்




தமிழினப் பெருமக்களே! செப்டம்பர் -17, நம் சூத்திர இழிவை ஒழிக்கப் புறப்பட்ட பகுத்தறிவுப்பகலவன் பிறந்தநாள். சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதருமத்தைத் தீயிட்டுப் பொசுக்கி தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பெண்களும் கல்விக் கண்ணொளி பெறுவதற்குக் காரணமாக இருந்த விடிவெள்ளியாம் தந்தை பெரியார் பிறந்தநாள்.

நாலாஞ்சாதிக்குக் கீழாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் சமுதாயத்தில் புதிய வெளிச்சத்தை ஏற்றி புரட்சிப் பெண்களாக வடிக்கத் தோன்றிய புத்துலகச் சிற்பி பெரியார் பிறந்தநாள்.
மூடநம்பிக்கை என்னும் புதைசேற்றில் அழுந்திக்கிடந்த இந்நாட்டு மக்களைப் பார்த்து ஏ மனிதா, மனிதன் என்பதற்கு அடையாளம் பகுத்தறிவே, அந்தப் பகுத்தறிவைப் பாழும் பக்திக்குப் பலிகொடுத்துவிட்டு கண்ணிருந்தும் குருடராய் கூனிக்குறுகி, புத்தியையும், பொழுதையும், பொருளையும் பறிகொடுக்கிறாயே!| என்று பொறிபறக்கும் வினாக்களை மழையாய்ப்பொழிந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய வெளிச்சத்தின் பிறந்தநாள்.

மனிதனைப் பார்த்தாலே பாவம், தொட்டாலே தீட்டு என்கிற பிறவிப் பேதம் கொடூரமாய் நடமாடிய மனித சமூகத்தின் குதிகாலை வெட்டி, ஜாதிக்குச் சமாதி எழுப்ப வந்த ஏந்தலின் ஈடுஇணையற்ற பிறந்தநாள்.

~~சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி|| என்ற சூளுரையை நம் ரத்த நாடிகளிலெல்லாம் ஏற்றிய சூரியன் உதித்தநாள்!

இந்நாள்தான் தமிழர்களின் தேசியத்திருநாள். தந்தை பெரியார் ஒரு கட்சித் தலைவரல்ல. ஓரினத்தின் ஒப்பற்ற தலைவர். தலைவர்களுக்கெல்லாம் தலைவரானவர். சமுதாயத்திற்கே தந்தையானவர். அவர்தம் பிறந்தநாளை தமிழர்களின் தேசியத் திருநாளாய்க் கொண்டாடுவோம்.

தமிழர்விழா என்ற பெயரில் ஆரியப் பண்டிகைகளைக் கொண்டாடி நம் புத்தியும்போய்ää பணத்துக்குப் பணமும் போய் நாம் பார்ப்பனர்களின் வைப்பாட்டிமக்கள் என்பதற்கு ஒப்பதல் வழங்குகிறோமே - அது சரியா? தன்மானத்துக்கு அழகா? பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

எண்ணிப் பார்! உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் பிறவாமல் போயிருந்தால் உன் நிலை என்ன? அவர்தம் பிறந்தநாளைக் கொண்டாடுவது நன்றி உணர்ச்சிக்காக மட்டுமல்ல - நாம் பெற்ற தன்மான உணர்வினை மீண்டும் மீண்டும் கூர்தீட்டிக்கொள்ளக் கிடைத்த உணர்ச்சிப் பெருக்குநாள்

பெரியார் ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், திருப்பம் என்றார் அறிஞர் அண்ணா. அந்தத் திருப்பத்தை மய்யப் படுத்தி பெரியார் பிறந்தநாளை வரலாற்றுக் குறிப்பாக்கி விழா எடுப்போம் -விழா எடுப்போம்!!
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு!!

இவண்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக